பிரிட்டன் புதிய பிரதமராகலிஸ் டிரஸ் தேர்வாக வாய்ப்பு| Dinamalar

லண்டன்: பிரிட்டன் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் விலகினார்.ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் துவங்கி பல கட்டங்களாக நடந்து வந்தது.இத்தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவுஅமைச்சர் லிஸ்டிரஸ் இடையே போட்டி … Read more

உக்ரைன் அணு உலையில் ஐ.நா. குழு நேரில் ஆய்வு – ரஷ்யா மீது சரமாரி குற்றச்சாட்டு

கீவ்: கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் அமைந்துள்ள அணு மின் நிலையத்தின் மீது ரஷ்யா கடுமையானத் தாக்குதலை நடத்தியது. இதனால் அந்த அணுமின் நிலையம் கடுமையான சேதத்தை சந்தித்தது. இதன் விளைவாக அதன் அணு உலை களில் ஒன்று மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. மேலும் அங்கு ஹைட்ரஜன் மற்றும் கதிரியக்க பொருட்கள் கசிவு … Read more

100 குழந்தைகள் இருந்த மழலையர் பள்ளி மீது ரஷ்யா ராக்கெட் வீசித் தாக்குதல்..!

உக்ரைனின் ஸ்லோவியன்ஸ்க் நகரில் 100 குழந்தைகள் இருந்த மழலையர் பள்ளி மீது ரஷ்ய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் பள்ளி கட்டடம் இடிந்து நொறுங்கி சேதமடைந்தது. முன்னதாக டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய படையினர் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர். போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. 286 பள்ளிகள் முற்றுலும் ஒன்றுமில்லாமல் போய் விட்டன. Source link

கார்பசேவ் இறுதி சடங்கில் ரஷ்ய அதிபர் பங்கேற்கவில்லை| Dinamalar

மாஸ்கோ:முன்னாள் சோவியத் யூனியனின் கடைசி தலைவரான மைக்கேல் கார்பசேவ், 91, உடலுக்கு முழு அரசு மரியாதை மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறுதி சடங்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.சோவியத் யூனியன் உடைவதற்கு முன், அதன் கடைசி தலைவராக பதவி வகித்தவர் மைக்கேல் கார்பசேவ். சோவியத் யூனியனில் இடம்பெற்று இருந்த நாடுகள் தனி நாடுகளாக பிரிந்து செல்வதை தடுக்காமல் கார்பசேவ் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு அவர் … Read more

மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது – பாகிஸ்தான் வெள்ளத்தில் இதுவரை 1,200 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெய்யும் கனமழையால் அந்த நாட்டின் மூன்றில் ஒருபகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 2,000 பேரை ராணுவம் மீட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. அந்த நாட்டின் சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாணங்களிலும் கடந்த 3 மாதங்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. பாகிஸ்தானின் மிகப்பெரிய நதியான சிந்து நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த நாட்டின் மூன்றில் … Read more

11 நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி ஆழ்கடலில் தத்தளித்த நபர் உயிருடன் மீட்பு..!

அட்லாண்டிக் பெருங்கடலில் படகு மூழ்கி 11 நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி ஆழ்கடலில் தத்தளித்த நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரோட்ரிக்ஸ் (Rodrigues) கடந்த சில தினங்களுக்கு முன்பு மரப்படகு ஒன்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். படகு பயணிக்க தொடங்கிய சிலமணி நேரங்களிலேயே கடல்நீர் புகுந்து மூழ்க தொடங்கியதால், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த ரோட்ரிக், மீன் சேகரித்து வைத்திருப்பதற்காக கொண்டு வந்த பிரீஸர் பாக்ஸில் ஏறி உணவு, தண்ணீர் … Read more

அர்ஜென்டினா துணை அதிபரைசுட்டு கொல்ல முயன்றவர் கைது

பியூனஸ் அயர்ஸ்:அர்ஜென்டினாவின் துணை அதிபரை சுட்டுக் கொல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் து ணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மீது, ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கிறிஸ்டினாவை அவரது நெற்றியை குறிவைத்து சுட்டுள்ளார். ஆனால், பிஸ்டல் செயல்படாத காரணத்தால் கிறிஸ்டினா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து, அர்ஜென்டினாவின் அதிபர் ஆல்பர்டோ … Read more

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க நிரந்தர குடியேற்ற எண்ணிக்கை 35,000 லிருந்து 1,95,000 ஆக உயர்த்தி நடவடிக்கை..

தொழிலாளர் பற்றாக்குறையை போக்க ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியேற்ற எண்ணிக்கை 35 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரமாக உயர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் வேலையில்லாத விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.4 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் நிரந்தர குடியேற்ற எண்ணிக்கை உயர்த்தப்படுவதால் ஆயிரக்கணக்கான செவிலியர்கள், பொறியாளர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறுவார்கள் என்றும், பணியாளர் பற்றாக்குறையால் போராடும் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.   Source link

பிரிட்டன் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாக வாய்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் : பிரிட்டன் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் விலகினார்.ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் துவங்கி பல கட்டங்களாக நடந்து வந்தது. இத்தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரானமுன்னாள் நிதி … Read more