உண்ணா நோன்பிருந்து 9 கிலோ எடை குறைத்தேன்: எலான் மஸ்க் பகிர்ந்த ட்வீட்

உண்ணா நோன்பிருந்து (Fasting) 9 கிலோ உடல் எடையை குறைத்ததாக உலகின் முதல் பணக்காரர் ஆன எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனை ட்விட்டர் பயனர் ஒருவருக்கு ரெஸ்பாண்ட் செய்த போது அவர் தெரிவித்துள்ளார். ஸ்பேஸ்X நிறுவனரும், டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியுமான மஸ்க், ட்விட்டர் சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக செயல்படுபவர். தன்னை குறித்து ட்வீட் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவரே முன்வந்து பதில் சொல்வார். அப்படி ஒரு சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. “நல்ல நண்பர் ஒருவரது … Read more

குரங்கம்மைக்கு தடுப்பூசிகளை தயாரிக்க 11 மில்லியன் டாலர் நிதி அறிவித்த அமெரிக்க அரசு..!

குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிக்கு 11 மில்லியன் டாலர் நிதி வழங்க உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நார்டிக் நிறுவனத்தின் ஜைன்னியோஸ் என்ற தடுப்பூசியை தயாரிக்க நிதி வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக அந்நிறுவனத்திடம் இருந்து 30 லட்சம் டோஸ்களை ஆர்டர் செய்த அமெரிக்கா, ஜூலையில் கூடுதலாக 25 லட்சம் டோஸ்களை கேட்டுள்ளது. உலகளவில் குரங்கம்மை பாதித்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 600-ஐ கடந்த நிலையில், அமெரிக்காவில் மட்டும் அந்நோய் பாதிப்பு சுமார் … Read more

தைவானுக்கு 1 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதம் வழங்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: தைவானுக்கு 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8,700 கோடி) மதிப்பிலான ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஒப்புதலை பைடன் அரசு கோரவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பைடன் அரசு தைவானுக்கு போர் விமானங்கள், கப்பல்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு பைடன் அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

அமெரிக்காவில் பெருகும் துப்பாக்கி கலாச்சாரம்..! – விதிகளை கடுமையாக்க கோரிக்கை..!

அமெரிக்காவில் கடந்த சில காலமாக துப்பாக்கி கலாச்சாரத்தால் பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கான விதிகளை கடுமையாக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அமெரிக்காவின் 4 வெவ்வேறு பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவில் ஹூஸ்டனில் கட்டிடம் ஒன்றுக்கு தீ வைத்த நபர் அதிலிருந்து தப்பி ஓடி வந்தவர்களை துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த … Read more

இந்தியா – சீனா LAC குறித்து ஜெர்மன் தூதர் கூறிய கருத்து; கடுப்பில் சீனா!

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன், இந்திய எல்லையில் சீனா அத்துமீறுவது சர்வதேச ஒழுங்கை மீறும் செயல் என்றும் அதை ஏற்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் ஐரோப்பா அடைந்துள்ள கோபத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். ஜேர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன், அருணாச்சல பிரதேசம் மீதான சீனாவின் கருத்துக்கள் “அதிர்ச்சியூட்டுவதாக” விவரித்தார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல், கடந்த 70 ஆண்டுகளில் உலகின் மிக மோசமான தாக்குதல் என்று … Read more

பாகிஸ்தான் பேரிடர் சோகம்: வெள்ள மீட்பு படகு கவிழ்ந்து 13 பேர் பலி

இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 13 பேர் பலியாகினர். பலர் காணாலம் போயினர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ளப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டவர்களை படகு ஒன்றின் மூலம் சிந்து நதியில் அழைத்து வரும்போது, அந்தப் படகு கவிழ்ந்ததில் 13 பேர் பலியாகினர். பலர் மாயமாகினர். இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. மீட்புப் பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் கடந்த இரண்டு … Read more

மதகுரு அரசியலில் இருந்து விலகினால் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? கவலை தரும் இராக்கின் நிலை

பாக்தாத்: அரசியலில் இருந்து விலகும் முடிவை அறிவித்த  முக்ததா அல்-சதர் மதகுருவின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்து உள்ளது. ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மதகுரு முக்ததா அல்-சதர் என்பவர் அரசியலில் இருந்து விலகும் முடிவை அறிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகை நோக்கி புறப்பட்டு சென்றனர். பதவி விலகிய மதகுருவின் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது … Read more

உணவகத்தில், பெண்களை சரமாரியாகத் தாக்கிய கும்பல் – 28 பேர் கைது

சீனாவில் உள்ள உணவகத்தில், பெண்களை கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்ட வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 10-ந் தேதி அதிகாலை டாங்ஷன் நகர உணவகத்தில் 4 பெண்கள் உணவருந்திகொண்டிருந்தனர். அப்போது பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது. அவர்களைச் சேர்ந்த ஒருவன், பாலியல் தொல்லை அளித்ததை அந்த பெண்கள் கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அவனது கூட்டாளிகள், அந்த பெண்களை முடியை பிடித்து இழுத்துச் சென்று பாட்டில்களால் சரமாரியாகத் தாக்கி, கால்களால் எட்டி உதைத்தனர். இணையத்தில் … Read more

பாடகர் மைக்கேல் ஜாக்சனை கொன்றது யார்? ஆவணப்படம் வெளிப்படுத்தும் போலி ஐடிக்கள்

வாஷிங்டன்: ‘கிங் ஆஃப் பாப்’ என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட பாப் இசையில் அரசன் மைக்கேல் ஜாக்சன் தனது வாழ்நாளின் பெரும்பகுதி முழுவதும் ஆபத்தான அளவுகளில் போதைப்பொருட்களை உட்கொண்டதாக புதிதாக வெளியான ஆவணப்படம் தெரிவிக்கிறது. 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இப்போது ஒரு புதிய ஆவணப்படம் அவர் போதைப்பொருள் மதிப்பெண் பெற 19 போலி ஐடிகளைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறது. 50 வயதில் மரணத்தை தழுவிய மைக்கேல் ஜாக்சன், அவரது லாஸ் ஏஞ்சல்ஸ் … Read more

ஊட்டசத்து குறைப்பாட்டால் குழந்தை உயிரிழப்பு: அமெரிக்காவில் ‘வீகன்’ தாய்க்கு ஆயுள் தண்டனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் ’வீகன்’ உணவு முறையை அதி தீவிரமாக பின்பற்றியதன் விளைவாக, ஊட்டசத்து குறைபாட்டால் குழந்தை மரணித்த வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஷீலா ஓ லெரி, ரைய் இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள். ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கோரலில் வசித்த இந்த தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளாகவே வீகன் உணவுப் பழக்கத்தை குடும்பத்தில் கடுமையாக நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். தங்களுடைய கடைசி குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டினாலும், பச்சைப் பழங்கள், பச்சை காய்கறிகளையே உணவாக அளித்துள்ளனர். … Read more