அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் அணு ஆயுத ஆவணங்களை தேடும் எப்பிஐ

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில், அணு ஆயுத ஆவணங்கள் இருக்கிறதா என்று எப்பிஐ சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்க்கு புளோரிடா மாகாணத் தின் பாம் பீச் பகுதியில் மர்ரா லாகோ என்ற வீடு உள்ளது. இங்கு அமெரிக்க உளவுத்துறை எப்பிஐ அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் சோதனை நடத்தினர். டிரம்ப் கடந்தாண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது, சில ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றாரா என்பதற்காக … Read more

டொனால்ட் டிரம்ப் வீட்டை எப்.பி.ஐ.அதிகாரிகள் சோதனையிட்டது ஏன்?

அணு ஆயுதங்கள் தொடர்பான ஆவணங்களுக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை புளோரிடாவில் உள்ள டிரம்ப்பின் கடற்கரை பண்ணை வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்டவை என்ன என்பது வெளியிடப்படவில்லை. மிகவும் ரகசியமான பல முக்கிய ஆவணங்கள் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக  புளோரிடா நீதிபதி சோதனை வாரண்ட் பிறப்பித்த காரணத்தை வெளியிட்டுள்ளார். Source link

உக்ரைன் அணுமின் நிலைய தாக்குதல்; ஐ.நா., கூட்டத்தில் இந்தியா கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க் : ‘உக்ரைனின் ஸாபோரிஸ்சியா அணுமின் நிலையம் அருகே ரஷ்ய படைகள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தகூடும் என்பதால் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பரஸ்பர கட்டுப்பாடுகள் தேவை’ என, இந்தியா கவலை தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனின் ஸாபோரிஸ்சியா அணுமின் நிலையம் அருகே ரஷ்ய … Read more

உயிருக்கு போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி! கத்திக்குத்து தாக்குதல் வீடியோ வைரல்

பிரபல இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நியூயார்க்கில், நேற்று( வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 12) கத்தியால் குத்திய ஆசாமியின் அடையாளத்தை நியூயார்க் போலீசார் வெளியிட்டுள்ளனர். ‘சாத்தானின் வசனங்கள்’ என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தின் ஆசிரியர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அவர் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான விசாரணையை நியூயார்க் போலீசார் மேற்கொண்டுள்ளனர். … Read more

சீன உளவு கப்பல் இலங்கை வரவில்லை| Dinamalar

கொழும்பு:சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5′ திட்டமிட்டபடி இலங்கை துறைமுகத்துக்கு வந்து சேரவில்லை’ என, துறைமுக நிர்வாகம் தெரிவித்தது.சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல், ஆக., 12 – 17 வரை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது, நம் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை அடுத்து, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, அம்பன்தோட்டா துறைமுகத்தில் கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி மறுத்தது. … Read more

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக் குத்து| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75, கத்தியால் குத்தப்பட்டார்.இந்தியாவில் மும்பையில் பிறந்தவரும், புக்கர் பரிசு வென்றவருமான சல்மான் ருஷ்டி, ‘த சட்டானிக் வெர்ஸஸ்’ என்ற புத்தகத்தை எழுதினார். இது, முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, உலகின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தப் புத்தகம், 1988ல் ஈரானில் தடை செய்யப்பட்டது. பின், பல இஸ்லாமிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. ருஷ்டியை கொல்பவர்களுக்கு, 26 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஈரானின் மறைந்த … Read more

ஹோட்டலை விட்டு வர வேண்டாம்: கோத்தபயவுக்கு போலீஸ் அறிவுரை| Dinamalar

பாங்காக் :’ஹோட்டலில் தங்கிஉள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியே வர வேண்டாம்’ என தாய்லாந்து போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்துக்கு சென்றதால் வெகுண்டு எழுந்த மக்கள், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதை முன்கூட்டியே அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பி மாலத்தீவுக்கு சென்றார். பின், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார். அங்கு ‘விசா’ … Read more

ஆப்கனில் செயல்படும் ரகசிய பள்ளிகள் தலிபான்களின் தடையை மீறும் பெண்கள்| Dinamalar

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் உத்தரவால் பெண்கள் பள்ளிக் கல்வியை இழந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆட்சி முறையில் பல மாற்றங்களை செய்தனர். குறிப்பாக பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். சிறுமியர் பள்ளிக்கு செல்ல தடை விதித்தனர். ஆனால், கல்லூரிக்கு செல்வதை தடுக்கவில்லை. இதனால் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவியர் ஓராண்டாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.இந்நிலையில் தலைநகர் காபூலில் வசிக்கும் சோடாபா நஜந்த் என்ற … Read more

அமெரிக்காவின் முதல் மாகாணம் – கலிபோர்னியாவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு

கலிபோர்னியா: தமிழகத்தைப் போல அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை மற்றும் மதிய உணவுத் திட்டமாக இது செயல்படுத்தப்படவுள்ளது. யுனிவர்சல் மீல்ஸ் என்று இத்திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்களுக்கு பள்ளியில் இலவச உணவை வழங்கும் முதல் அமெரிக்க மாநிலம் என்ற பெருமையை கலிபோர்னியா பெற்றுள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்துக்கான மசோதா மாகாண சபையில் … Read more

சீன உளவு கப்பல்இலங்கைக்கு வராது| Dinamalar

கொழும்பு:’சீனாவின் உளவு கப்பல், திட்டமிட்டபடி அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வராது’ என, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் ஆக., 11 – 17 வரை நிறுத்திவைக்க சீனா திட்டமிட்டது. விண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இதை ஏற்று, கப்பலை இலங்கை துறைமுகத்தில் … Read more