சீனாவிடம் இருந்து வாங்கிய 6 விமானங்களை பயன்படுத்த முடியாத நிலையில் நேபாளம்! சீனாவுக்கு வட்டி கட்டி வரும் நிலை

காத்மாண்டு, நேபாள அரசு வாங்கிய சீன விமானங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அந்நாட்டுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 2012இல், நேபாள விமான கழகம் (என்ஏசி) சீனாவின் விமான நிறுவன கழகத்துடன் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.அதன்படி, 2014ஆம் வருடம் 2 MA60 ரக விமானங்கள் மற்றும் 4 Y12 இ ரக விமானங்கள் நேபாளம் வந்தன, பின்னர் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் இந்த விமானங்களை திறம்பட கையாள விமானிகள் இல்லாமலும், லாபம் வராத நிலையிலும் இந்த … Read more

நியூயார்க் | எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டார்

நியூயார்க்: பிரபல புதின எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க் நகரில் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகப் புகழ் பெற்ற புதின எழுத்தாளர் சர் அகமது சல்மான் ருஷ்டி. மும்பையில் பிறந்தவர். அவருக்கு வயது 75. ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ படைப்புக்காக புக்கர் பரிசை வென்றவர். 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ படைப்பு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த படைப்புக்காக … Read more

பிரிட்டனில் வரலாறு காணாத கடும் வறட்சி: பாலைவனமானது தேம்ஸ் நதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் :’பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள், மற்றும் லண்டன் நகரம் கடும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட துவங்கியது. தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது. இதையடுத்து பிரிட்டன் அரசு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்தது. கடும் … Read more

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 2,009 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக … Read more

சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவில் பிரபல சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி. பிரபலமான எழுத்தாளராகிய, இவர் 1980 களில் எழுதிய,” சாத்தானின் வேதங்கள்’ என்ற நூல், சர்வதேச அளவில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு எதிராக, கடும் போராட்டங்கள் நடந்தன. பயங்கரவாதிகளின் மிரட்டலால், வெளிநாடுகளில் பதுங்கி … Read more

கொரோனா குறித்து வடகொரிய அதிபர் அதிர்ச்சி தகவல்..! என்ன சொன்னார் தெரியுமா..?

அவ்வப்போது பல அதிரடி முடிவுகளை எடுத்து உலக நாடுகளை அலற விடுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன். தற்போது கொரோனா குறித்து தனது கருத்தை தெரிவித்து அனைவரயும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59.33 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு … Read more

உலக புகழ் பெற்ற நதி வரண்டது..!- எந்த நாட்டில் தெரியுமா..?

லண்டனில் உலக புகழ் பெற்ற தேம்ஸ் நதி உள்ளது. தேம்ஸ் நதி, தென் மத்திய இங்கிலாந்தின் கண்கவர் காட்ஸ்வோல்ட் மலைகளிலுள்ள நான்கு ஊற்றுகளிலிருந்து பெருக்கெடுக்கிறது. அது கிழக்கு நோக்கி 350 கிலோமீட்டர் வளைந்து நெளிந்து ஓடுகையில் மற்ற நதிகளும் சேர்ந்து கொள்கின்றன. கடைசியாக 29 கிலோமீட்டர் கடந்து வட கடலில் சென்று கலக்கிறது. ஐரோப்பிய நாடுகளான போர்ச்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. ஸ்பெயின் உள்ளிட்ட … Read more

அதிபரின் சகோதரி பகிரங்க மிரட்டல்| Dinamalar

பியாங்யாங் :’வட கொரியாவில் சமீபத்தில் தீவிரமடைந்த கொரோனா பரவலின் போது, என் சகோதரரும், அதிபருமான கிம் ஜாங் உன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். வைரசை திட்டமிட்டு பரப்பிய தென் கொரியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்’ என, கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் மிரட்டி உள்ளார்.கிழக்காசிய நாடான வட கொரியா, உலக நாடுகளுடன் நட்பு பாராட்டாமல் தனித்து செயல்பட்டு வருகிறது. இங்கு நடக்கும் சம்பவங்கள் வெளி உலகுக்கு வந்து சேருவதில்லை. உலகம் முழுதும் கொரோனா … Read more

‘வடகொரியாவில் கரோனா உச்சத்தில் இருந்தபோது கிம் கடும் காய்ச்சலில் அவதிப்பட்டார்’

பியோங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டதாக அவரது சகோதரி தெரிவித்திருக்கிறார். வடகொரியாவில் கடந்த மே மாதம் கரோனா வேகமாக பரவியது. ஒமைக்ரானின் கொரோனா பாதிப்பு அங்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், வடகொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில், கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டுவிட்டதாக … Read more

சீன உளவு கப்பல் இலங்கைக்கு வராது| Dinamalar

இலங்கை: ‘சீனாவின் உளவு கப்பல், திட்டமிட்டபடிஅம்பன் தோட்டாதுறைமுகத்துக்கு வராது’ என, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் ஆக., 11 – 17 வரை நிறுத் திவைக்க சீனா திட்டமிட்டது.விண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இதை ஏற்று, கப்பலை இலங்கை துறைமுகத்தில் … Read more