உயிருக்கு போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி! கத்திக்குத்து தாக்குதல் வீடியோ வைரல்
பிரபல இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நியூயார்க்கில், நேற்று( வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 12) கத்தியால் குத்திய ஆசாமியின் அடையாளத்தை நியூயார்க் போலீசார் வெளியிட்டுள்ளனர். ‘சாத்தானின் வசனங்கள்’ என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தின் ஆசிரியர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அவர் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான விசாரணையை நியூயார்க் போலீசார் மேற்கொண்டுள்ளனர். … Read more