இந்தியாவுக்கு சிறப்பு சலுகை: அமெரிக்கா விரைவில் முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : இந்தியாவுடனான நட்புறவை மதிக்கும் வகையில், மிகக் கடுமையான பொருளாதார தடை சட்டத்தில் இருந்து அதற்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் முடிவு செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘காட்சா’ என்ற சட்டம் அமெரிக்காவில் அமலில் உள்ளது. இதன்படி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா … Read more

'கரோனாவை வென்றுவிட்டோம்' – வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவிப்பு

பியாங்யாங்: வட கொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில் கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன். வட கொரியாவில் கிம் தான் சர்வாதிகார தலைவர். அவர் உத்தரவுப்படி மட்டுமே அனைத்தும் இயங்கும். அங்கே வெளிநாட்டு ஊடகங்கள் செயல்பட அனுமதியில்லை. ஆகையால் கேசிஎன்ஏ (KCNA) எனப்படும் அரசு ஊடகம் வெளியிடும் தகவல் தான் கிடைக்கக்கூடிய ஒரே ஆதாரம். இந்நிலையில் KCNA கேசிஎன்ஏ ஊடக செய்தியில், … Read more

கருந்துளைகளுக்குப் பின்னால் X-Ray கதிர்கள்: அவிழும் பிரபஞ்ச ரகசியம்!

800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீனின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையில் இருந்து எக்ஸ் ரேகதிர்களை பகுப்பாய்வு செய்யும் போது, ஒரு விசித்திரமான வடிவம் இருப்பதை  ​​ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கவனித்தனர். இந்த கதிர்களை பிரபஞ்சத்தில் வெளியேற்றுவது கருந்துளை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.  இந்த நிகழ்வை விளக்கும் விஞ்ஞானிகள், கருந்துளைகளில் வாயு அதிவேகமாக உள்ளே நுழையும் போது எரிப்பு ஏற்பட்ட பின்னர், அதிலிருந்து எக்ஸ்-ரே கதிர்வீச்சு ஏற்படலாம் என்று அனுமானிக்கின்றனர். கருந்துளையில் வாயு நுழையும்போது ஏற்படும் எரிப்புகள் … Read more

பிரதமர் மோடி உட்பட 3 பேர் அடங்கிய சர்வதேச அமைதி ஆணையம் – ஐ.நா. சபையில் மெக்ஸிகோ பரிந்துரை

மெக்ஸிகோ சிட்டி: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நேற்று 168-வது நாளை எட்டியது. போரால் உக்ரைனை சேர்ந்த 1.2 கோடி பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், சீனா, தைவான் இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. தைவானை ஆக்கிரமிக்க சீனா ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போதைய சூழலில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் ஓரணியாகவும் ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் அணிவகுத்து வருகின்றன. இதேநிலை … Read more

சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ் ‘லாங்யா’

பெய்ஜிங்: கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கரோனாவின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது புதிய வைரஸ் அங்கு உருவாகியுள்ளது. சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும், இதுவரை அந்த வைரஸால் 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கிழக்கு சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து … Read more

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் தவிக்கும் பிரான்ஸ்! 57200 ஹெக்டேர் காடுகள் சேதம்

தென்மேற்கு ஐரோப்பாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீ ஏற்படுத்தி வரும் சேதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெப்பம் குறைவதற்கான அறிகுறியே தென்படாத நிலையில், காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதில், பிரான்ஸ் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பிரான்சில் உள்ள ஜிரோண்டே பகுதியில் தீயினால் 6,200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள காடுகள் எரிந்துள்ளன. இந்த ஆண்டு பிரான்சில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக ஒட்டுமொத்தமாக 57,200 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பிடித்துள்ளது.10,000 குடியிருப்பாளர்கள்வெளியேற வேண்டிய கட்டாயம் … Read more

தாய்லாந்து செல்கிறார் கோத்தபய ராஜபக்‌ச

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்‌ச குறுகிய கால அடிப்படையில் தாய்லாந்தில் தஞ்சம் அடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அவர் தாய்லாந்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்த நிலையில், எரிபொருள், மருந்துகள், உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அந்நாடு உள்ளது. மக்கள் எரிபொருளை நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருளுக்கு … Read more

மெட்டா இங்க் நிறுவனம் அதன் பெரு நிறுவன பத்திரங்களை வழங்கி 10 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளதாக தகவல்

பேஸ்புக், வாட்ஸ் ஆப் செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா இங்க், அதன் பெரு நிறுவன  பத்திரங்களை வழங்கி 10 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. மெட்டா தனது வணிகத்தை மறுசீரமைக்கும் வகையில் பங்குகளை திரும்ப பெறவும், புதிய திட்டங்களின் முதலீடுகளுக்கு நிதியளிக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜூலை மாத இறுதியில், பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல காரணங்களால் முதன்முறையாக வருவாய் இழப்பை மெட்டா சந்தித்தது.   Source link

பயங்கரவாத ஆதரவு: சீனாவுக்கு கண்டனம்| Dinamalar

நியூயார்க் : ‘உலகின் மிக மோசமான பயங்கரவாதிகள் சிலரை தடுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு ஆதாரங்கள் அடிப்படையிலான பரிந்துரைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வருந்ததக்கது’ என சீனா தலைமை வகித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது. கடந்த ஜூனில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கி என்பவரை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டாக பரிந்துரைத்தன. ஆனால் இந்த பரிந்துரையை ஐ.நா.வின் நிரந்தர உறுப்பபினரான சீனா … Read more

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து செல்ல திட்டம்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சவின் விசா காலம் நாளையுடன் முடிவடைகிறது. அவரது விசாவை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்க வேண்டுகோள் விடுத்த நிலையில், தற்போது தாய்லாந்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.   Source link