காலநிலை மாற்றத்தால் மோசமடையும் தொற்று நோய்கள்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா, கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி உள்ளது. கொரோனா, குரங்கு அம்மை தொற்று உடனான போராட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல உலக நாடுகள் சவால்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தொற்று நோய் பரவுவதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் … Read more

சீனாவில் புதிதாக 940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 868 பேருக்கு … Read more

பின்லேடன் குறித்து முன்கூட்டியே எச்சரித்த சிஐஏ உளவாளி கேரி ஷ்ரோன் பற்றி தெரியுமா?

உலக வர்த்தக மையம் தகர்ப்பு: 2001 செப்டம்பர் 11 ஆம் தேதி… நியூயார்க்கில் அமைந்திருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் மற்றும் அமெரிக்க உளவு அமைப்பான சிஏஐவின் தலைமையகம் பென்டகனில் ஒசமா பின்லேடனின் அல் கொய்தா தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி தகர்த்தியதை அமெரிக்கர்கள் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். 9/11 எனப்படும் இந்த தாக்குதல் நிகழ்ந்த சில நாட்களிலேயே சிஇஏ உளவாளியான கேரி ஷ்ரோனுக்கு அவரது மேலதிகாரி சில உத்தரவுகளை பிறப்பிக்கிறார். ஆப்கனை அடைந்த ஷ்ரோன்: … Read more

இலங்கையில் மின் கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த மின்சார வாரியம் முடிவு! பொதுமக்கள் அதிர்ச்சி!!

கொழும்பு, இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த அந்நாட்டு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது. இந்த மின் கட்டண உயர்வானது, மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிரமத்தையும், அதே வேளையில் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு குறைந்த அளவில் விலை உயர்வு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. எண்ணெய் தட்டுப்பாட்டால் மின் … Read more

மேற்குகரையில் இஸ்ரேல் அதிரடி சோதனை; அல்-அக்சா பிரிகேடிஸ் முக்கிய தளபதி சுட்டுக்கொலை

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்குகரை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. காசா முனையில் ஹமாஸ் மட்டுமின்றி மேலும் சில ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அந்த … Read more

எரிந்து சாம்பலான சீனாவின் பழமையான மரப்பாலம்..! – காரணம் யார் தெரியுமா..?

கிழக்கு சீனாவில் உள்ள புஜியான் மாகாணத்தில் உள்ள பழமையனா மரப் பாலம் எரிந்து சாம்பலாகி உள்ளது. இது 900 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. கலைநயமிக்க நீண்ட பாலம் என்று சீனர்களால் பெருமைபடுத்தப்பட்டுள்ளது இந்த பாலம். சீனாவின் கிழக்கே புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி எனும் பகுதியில் சாங் வம்சத்தினர் ஆட்சி செய்த போது 960-1127 காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் இது. 98.3 மீட்டர்கள் நீளம் கொண்டது இந்த பாலம், வரலாற்று சிறப்புமிக்க இந்த … Read more

ஈரானின் கண்காணிப்பு செயற்கைகோள் விண்ணில் பாய்ந்தது.. விவசாயம், அறிவியல் கண்காணிப்புக்காக ஏவப்பட்டது..!

கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் ஏவுதளத்தில் இருந்து விவசாயம் மற்றும் அறிவியல் தொடர்பான பணிகளுக்காக ஈரானின் கண்காணிப்பு செயற்கைகோள் ரஷ்ய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஈரான் மற்றும் ரஷ்யா நாடுகளின் நலனுக்காக ‘கயாம்’ என்ற  செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டதாக இருநாடுகளும் கூறியுள்ள நிலையில், இந்த செயற்கைகோள் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவ இலக்குகளை கண்காணிக்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  Source link

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் சோதனை| Dinamalar

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை அமெரிக்காவின் இருண்ட காலம் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது ரகசிய ஆவணங்களை பெட்டிகளில் வைத்து எடுத்துச் சென்றதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக நேற்று (ஆக.,8) அவரது இல்லத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின்போது டிரம்ப் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. எப்.பி.ஐ அதிகாரிகளின் … Read more

போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது – தைவான் குற்றச்சாட்டு!

தைவான் மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருவதாக, அந்நாட்டு அரசு குற்றம் சாட்டி உள்ளது. தைவான் நாட்டை தங்களது நாட்டின் ஓர் அங்கம் என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவான் நாட்டிற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அண்மையில் தைவானுக்குச் சென்றார். இதனால் கடும் கோபம் … Read more

தைவானை சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது – அதிபர் ஜோ பைடன்!

தைவானை சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது என தாம் நினைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை அடுத்து அந்த தீவை சுற்றி ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ள சீனாவின் நடவடிக்கை குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், ஆத்திரமூட்டும் வகையில் செயல்படும் சீனாவுக்கு தொடக்கத்தில் இருந்து கண்டனம் தெரிவித்து வருவதாக கூறியுள்ளார். சீனாவின் ராணுவ ஒத்திகை கவலையளிக்கும் … Read more