அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இல்லத்தில் எப்பிஐ அதிகாரிகள் சோதனை..!

அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப்பின் இல்லத்தில் எப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில், இந்த சோதனை அமெரிக்காவின் இருண்ட காலம் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார். 2021ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்போது ரகசிய ஆவணங்களை பெட்டிகளில் வைத்து எடுத்துச் சென்றதாக டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், அதுதொடர்பாக புளோரிடாவின் Palm கடற்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று இந்த சோதனை நடைபெற்றதாக புலனாய்வு அதிகாரிகள் … Read more

பரிசு பொருளை விற்று ரூ.286 கோடி ஆட்டை:மாஜி பிரதமர் மீது புகார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்,-பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசின் கருவூலத்தில் இருந்து விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பணம் செலுத்தாமல் எடுத்து, 286 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக, அந்நாட்டு தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமராக 2018 ஆகஸ்டில் பதவியேற்ற இம்ரான் கான், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் 2022 ஏப்ரலில் பதவி விலகினார். இதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் இதர … Read more

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான “டாப்கன் மேவ்ரி” உலகளவில் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் சாதனை.!

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான “டாப்கன் மேவ்ரி ” உலகளவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்து சாதனை படைத்துள்ள நிலையில், உள்நாட்டு வசூல் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த டைட்டானிக்கை பின்னுக்கு தள்ளி சாதனையை முறியடித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான டாம்குரூஸின் “டாப்கன் மேவ்ரிக்” இதுவரை அமெரிக்காவில் மட்டும் 662 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது. சுமார் 170 மில்லியன் டாலர் செலவில் தயாரான இந்தப் படம் தற்போது உலகம் முழுவதும் ஒரு பில்லியன் … Read more

80 ஆயிரம் பயணியர் தவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்-சீனாவில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சன்யா கடற்கரை, சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இடம். இங்கு, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகம் கூடுமிடமான சன்யா ‘பிக்னிக் ஸ்பாட்’டில், நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 470 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்தப் பகுதியில், நேற்று ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. அங்குள்ள … Read more

5வது நாளாக தொடரும் போர் பயிற்சி தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி| Dinamalar

பீஜிங்-நம் அண்டை நாடான சீனா, தைவான் ஜலசந்தியில், நான்கு நாட்களுக்கு அறிவித்திருந்த போர் பயிற்சியை ஐந்தாவது நாளாக நேற்றும் நடத்தியது. தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, தங்கள் நாட்டுடன் இணைக்க, நம் அண்டை நாடான சீனா முயற்சித்து வருகிறது. ஆனால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. சமீபத்தில், அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த 4ம் தேதி முதல், 7ம் தேதி வரை, தைவான் ஜலசந்தியில் … Read more

வங்கதேசத்தில் எரிபொருள் விலை உயர்வு நாடு முழுதும் வெடித்தது போராட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாக்கா-வங்கதேசத்தில், இதுவரை இல்லாத வகையில், பெட்ரோல் – டீசல் விலை, 52 சதவீதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, நாடு முழுதும் போராட்டம் வெடித்துள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசம், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த சில மாதங்களாகவே, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 37 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 28 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன.’வங்கதேசம் தனி நாடாக உருவாகி இத்தனை ஆண்டுகளில், … Read more

சிலி நாட்டில் மெகா பள்ளம் | 160 அடி அகலம்; 656 அடி ஆழம்

சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளம் (Sinkhole) ஒன்று உருவாகியுள்ளது. இப்போதைக்கு அந்த பள்ளம் 160 அடி அகலமும், 656 அடி ஆழமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பள்ளத்தின் அளவு தினந்தோறும் பெரிதாகிக் கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30-ம் தேதி அன்று இந்த பள்ளம் அந்த நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்போது 82 அடிதான் இந்த பள்ளத்தின் விட்டம் இருந்துள்ளது. அதன் அடிப்பகுதியில் தண்ணீரும் இருந்துள்ளது. இப்போது இந்த பள்ளத்தின் அளவு இரட்டிப்பாகி உள்ளதாம். … Read more

தொடர் விபத்துகளால் மூடப்பட்ட மலைப்பாதை 15 ஆண்டுகளில் அழகிய வனப்பகுதியாக உருமாறிய அதிசயம்..!

பொலிவியாவில் தொடர் விபத்துகளால் 15 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட மலைப்பாதை தற்போது அழகிய வனப்பகுதியாக உருமாறியுள்ளது. தலைநகர் லா பாஸை, அமேசான் காடுகளுடன் இணைத்த அந்த ஆபத்தான மலைப்பாதையில் ஏராளமான லாரி விபத்துகள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்ததால் அது மரணப்பாதை என அழைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு அதற்கு மாற்றுப்பாதை உருவாக்கப்பட்டதால் அவ்வழியாக கனரக லாரி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் காற்று மாசற்ற அந்த மலைப்பாதை பறவைகளும், விலங்குகளும் நடமாடும் எழில் கொஞ்சும் வனப்பகுதியாக காட்சியளிக்கிறது. Source … Read more

இஸ்ரேல் – பாலஸ்தீனம்போர் நிறுத்த ஒப்பந்தம்

காஸா சிட்டி-இஸ்ரேல் – பாலஸ்தீன இஸ்லாமிய குழுக்களுக்கு இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக கடும் சண்டை நடந்தது. இருதரப்பினரும் ஏவுகணைகள், போர் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 15 குழந்தைகள், நான்கு பெண்கள் உள்ளிட்ட 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் இருதரப்புக்கும் … Read more

ராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க நிர்வாண படங்கள் வீடியோக்களை அனுப்பும் உக்ரைன் பெண்கள்

கீவ் ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 160 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் ராணுவம் வீரத்துடன் போராடி வருகிறது. உக்ரைன் பெண்கள் புதினின் ராணுவத்துடன் போரிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்களின் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர். உக்ரைன் பெண்கள் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, இதெல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது. ராணுவ வீரர்களின் மன உறுதியை உயர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு … Read more