பிலிப்பைன்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு| Dinamalar

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியருடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் அதிபராக, ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியர் கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றார். புதிய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார். இந்த உரையாடல் குறித்து பிரதமர் வெளியிட்ட சமூகவலைதள பதிவு:பிலிப்பைன்ஸ் அதிபர் ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்தியா – பிலிபைன்ஸ் உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் … Read more

World War: யுத்தத்தின் கொடூரத்தை உணர்த்திய ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நாள்

உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போரின் காயங்களும் வடுக்களும் என ஜப்பான் தனது எட்டு தசாப்த கால வலி நிறைந்த நாளின் துக்கத்தை அனுசரிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் புதிய ஆயுதப் போட்டிக்கு அஞ்சும் சர்வதேச நாடுகளின் கவலைகளுக்கு மத்தியில் ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலின் 77 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 6, 1945 அன்று காலை 8:15 மணிக்கு, அமெரிக்காவின் B-29 போர் விமானம் எனோலா கே, … Read more

உக்ரைன் உளவுப் பிரிவு பகீர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ் : ‘ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தன்னைப் போலவே உருவ அமைப்பு கொண்ட நபரை வெளி உலகிற்கு பயன்படுத்துகிறார்’ என, உக்ரைன் நாட்டு உளவுத் துறை தெரிவித்து உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா பிப்ரவரி 24ல் போர் தொடுத்தது. இன்று வரை போர் தொடர்கிறது. இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 69, உடல்நிலை குறித்து சந்தேகத்துக்குரிய தகவல்களும் கசிந்து வருகின்றன. புடினுக்கு ரத்தப் புற்று … Read more

சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வந்து பூமியில் மோதிய விண்கல்… ஆழ்கடல் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்

நியூயார்க், நமது சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கிரகங்கள் வட்டபாதையில் குறிப்பிட்ட காலஅளவில் சூரியனை சுற்றி வருகின்றன. இந்த நிலையில், சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வந்த விண்கல் ஒன்று சூரியனின் ஈர்ப்பு விசைக்குள் சிக்காமல் பூமியை வந்தடைந்து உள்ளது என கூறப்படுகிறது. அது, பப்புவா நியூ கினியா கடலோர பகுதியில் கடலுக்குள் விழுந்திருக்கும் என நம்பப்படுகிறது. இதுபற்றி விஞ்ஞானிகள் ஆழ்கடல் ஆராய்ச்சியில் இறங்கி, விண்கல்லை பற்றி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட விண்கற்களில் … Read more

மந்தமான விற்பனை! செலவுகளை குறைக்க 10 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய அலிபாபா

Alibaba Fired Employees: சீன தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா, மந்தமான விற்பனை மற்றும் நாட்டில் நிலவும் மந்தமான பொருளாதாரம் ஆகியவற்றின் மத்தியில் செலவினங்களைக் குறைக்க கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, நிறுவனம் அதன் மொத்த பணியாளர்களை 245,700 ஆக குறைத்தது. ஜூன் காலாண்டில் 9,241 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஹாங்சோவை தளமாகக் கொண்ட அலிபாபாவை விட்டு வெளியேறினர். ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் அலிபாபாவின் பணியாளர்கள் 13,616 ஆகக் … Read more

“இனி அடிவாங்க இயலாது” – தற்கொலைக்கு முன் இந்தியப் பெண் பதிவிட்ட வீடியோ… அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்

இந்தியாவைச் சேர்ந்த மன்தீப் கவுர் என்ற பெண், அமெரிக்காவில் குடும்ப வன்முறை காரணமாக தற்கொலை செய்து கொண்டது அங்கு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளுக்கு எதிர்ப்புக் குரல்களை உரக்க ஒலிக்கச் செய்துள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த மன்தீப் கவுருக்கும், ரான்ஜோத்பூர் சிங்க்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்ததுள்ளது. திருமணம் முடிந்தவுடன் கணவருடன் மன்தீப் கவுர் அமெரிக்கா செல்கிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பெண்குழந்தைகள் பெற்றதற்காக கடந்த எட்டு வருடங்களாக கணவர் ரான்ஜோத்பூரால் … Read more

சிங்கப்பூரிலேயே அடுத்த 14 நாட்கள் தங்க கோத்தபய ராஜபக்சே முடிவு?

கொழும்பு, இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் பல மாதங்களாக நீடித்து வருகிறது. உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் சிக்கி தவித்து வருகிறது. … Read more

என்னாப்பா சொல்றீங்க..? இப்போது இருப்பது புதின் இல்லையா அவரது டூப்பா…?

கீவ் ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவர் புற்றுநோயால் அவதிப்படுவதாக கூறப்பட்டது. பிறநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் போது, புதினின் கை, கால்களில் நடுக்கம் இருந்தன என்று ஊடகங்கள் தெரிவித்தன. இதேபோல் புதின், தன்னை போன்று உருவம் கொண்ட நபர் பொது வெளியில் உலாவ விடுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை ரஷியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் புதினை போன்றே தோற்றம் கொண்ட போலி நபர் உலாவி வருவதாக உக்ரைன் … Read more

மீனின் நாக்கை காலி செய்து, புது நாக்காக உயிர் வாழும் விசித்திர ஒட்டுண்ணி

கலிபோர்னியா, இங்கிலாந்து நாட்டின் சபோல்க் நகரில் இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் அடங்கிய பெட்டியில் ஒரு மீனின் வாய் விசித்திரமுடன் காணப்பட்டு உள்ளது. அதனை ஆய்வு செய்ததில், அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. அந்த மீனின் வாயில் நாக்கு இருப்பதற்கு பதிலாக ஒட்டுண்ணி ஒன்று ஜம்மென்று அமர்ந்திருந்தது. சிமோதோவா எக்சிகுவா அல்லது நாக்கை உண்ணும் பேன் என விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ஒட்டுண்ணியானது, முதலில் மீனின் சுவாச பகுதி வழியே வாய் பகுதிக்குள் நுழைந்து உள்ளது. அதன்பின்னர் மீனின் … Read more

காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: தெருவில் நின்ற 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

ஜெருசலேம், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமானச் சூழல் நிலவுகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்குகரை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை … Read more