குரங்கு அம்மை பரவல் – சுகாதார அவசரநிலையை அறிவித்தது அமெரிக்கா

நியூயார்க்: குரங்கு அம்மை பரவலை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது அமெரிக்கா. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 -க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை இப்போது தொற்று பரவி உள்ளது. உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், அந்நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக சமீபத்தில் பிரகடனம் செய்தது உலக சுகாதார நிறுவனம். இதேபோல் குரங்கு அம்மை பரவலை தடுக்க அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரநிலை … Read more

தைவான் மீது தாக்குதல் நடத்த சீனா வியூகம் பதற்றம்!| Dinamalar

பீஜிங் :அமெரிக்க பார்லிமென்டில் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் வந்து திரும்பிய மறுநாளான நேற்று, தென் சீன கடல் பகுதியில் உள்ள தைவான் ஜலசந்தியில், ‘பாலிஸ்டிக்’ எனப்படும் அணு ஆயுதங்களை சுமந்து ராக்கெட்டுகள் வாயிலாக செலுத்தப்படும் ஏவுகணைகளை சீனா துல்லியமாக ஏவி தாக்கியது. தைவானை அச்சுறுத்தும் விதமாக, நான்கு நாள் போர் பயிற்சியை சீன ராணுவம் நேற்று துவங்கியது. இதையடுத்து, தைவான் – சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, … Read more

பிரிட்டன் பிரதமருக்கான போட்டி; முந்துகிறார் வெளியுறவு அமைச்சர்| Dinamalar

லண்டன்-பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்கும் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில், இந்தியாவை பூர்வீகமாக உடைய முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை விட, வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் முந்துகிறார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக பதவியேற்பார். இதையடுத்து, கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.இதில், ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இறுதிப் போட்டியில் உள்ளனர். … Read more

100 பேர் கொண்ட மருத்துவக் குழு 27 மணி நேரம் தொடர்ச்சியாக 9 அறுவை சிகிச்சை: பிரேசிலில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர் பிரிப்பு

பிரேசில் நாட்டில் தலை ஒட்டி பிறந்த மூன்று வயதான இரட்டையரை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் பிரித்துள்ளனர் மருத்துவர்கள். இந்த பணியில் சுமார் 100 மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழு 27 மணி நேரம் தொடர்ச்சியாக 9 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர். முக்கியமாக இந்த அறுவை சிகிச்சையில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் உதவியை மருத்துவ குழுவினர் நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை அறுவை சிகிச்சையில் இது மிகவும் சிக்கலானது என இந்தப் பணியை மேற்கொண்ட மருத்துவர்கள் … Read more

உலக அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வு..! – ஓர் அதிர்ச்சி தகவல்..!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58 கோடியை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 55.55 கோடியை தாண்டியுள்ளது சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே அதனால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இதற்கு அடுத்ததாக இந்தியா, பிரேசில்,,பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டன. அடுத்தடுத்து கொரோனா அலைகள் வந்துகொண்டே … Read more

எந்த நேரத்திலும் போர்…! தைவான் அருகே ஏவுகணைகளை வீசிய சீனா…!

தைபே சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பதற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1940 களில் நடந்த உள்நாட்டுப் போரின் போது சீனாவும் தைவானும் பிரிக்கப்பட்டன. அப்போதிருந்து, தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடடாக அழைத்து வருகிறது. அதேசமயம், சீனா அதை தனது மாகாணமாகப் பார்க்கிறது மற்றும் தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக இணைக்கபடும் என கூறி வருகிறது. அதாவது தைவான் மீது சீனாவின் தாக்குதல் அச்சுறுத்தல் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரித்துள்ளன. பெரும்பாலான நாடுகள் … Read more

இலங்கை: காலி முகத் திடலை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேற உத்தரவு…!

கொழும்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 9-ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்தனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என … Read more

தைவானை சீண்டும் சைனா..! – ஏவுகணை வீசியதால் பதற்றம் ..!

சமீபகாலமாக தைவான் அரசு, சீனாவுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக அந்நாடு குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் கடும் எதிர்பபையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று தைவான் சென்றார். பெலோசியின் தைவான் பயணம் ‘ஒரே சீனா’ என்ற கொள்கையை மீறிய செயல் என கண்டனம் தெரிவித்துள்ளது சீனா. இதனை காரணமாக வைத்து தைவான் மீது சீனா போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக தான் நேற்று தைவான் மீது ராணுவ … Read more

நான் தான் உன் கத்ரினா கைப்! நீயே தான் எனக்கு சல்மான் கான்!வயது குறைந்த வீட்டு வேலைக்காரரை காதலித்து கரம்பிடித்த பணக்கார பெண்!

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் வேலைக்கு நியமிக்கப்பட்ட வேலைக்காரர் மீது காதல் கொண்டு அவரையே கரம் பிடித்திருக்கிறார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் பகுதியை சேர்ந்தவர் நாசியா. நிலப்பிரபுவான இந்த நடுத்தர வயது பெண்மணி, தனது தோட்டம் மற்றும் வீட்டை பராமரிக்க சூபியான் என்ற நபரை வேலைக்கு சேர்த்தார். அவர் அந்த வீட்டை பராமரிப்பது, சமைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது என பல வேலைகளை அக்கறையாக செய்து வந்தார். வீட்டின் உரிமையாளரான நாசியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதும், அவரை … Read more

தைவான் கடற்பரப்பில் ஏவுகணைகளை வீசி சீனா ஆவேசப் பயிற்சி

பீஜிங்: தைவானை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ஆவேசத்துடன் ராணுவப் பயிற்சி நடத்தி வரும் சீனா, அங்கு ஏவுகணைகளையும் வீசி வருவது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை நான்சி பெலோசி பெற்றார். நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது … Read more