தைவான் கடல் பகுதியில் இரு நாட்டு போர்க் கப்பல்கள் முற்றுகை: சீனா-அமெரிக்கா இடையே போர் பதற்றம்

தைபே: சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் வந்து சென்றார். இதையடுத்து சீனா – அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவானைச் சுற்றி அமெரிக்க, சீன போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளதால் தென் சீன கடல் பகுதியில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் சீன கடல் பகுதியில் தனி தீவாக உள்ளது தைவான். இதை தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியாக சீனா கூறிவருகிறது. இதனால், தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரப்பூர்வ … Read more

தைவான் மீது தொடர் பொருளாதார தடைகளை விதித்து வரும் சீனா.. இயற்கை மணல் ஏற்றுமதிக்கு தடை

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தையொட்டி, இயற்கை மணல் ஏற்றுமதிக்கு தடை உள்பட பல்வேறு பொருளாதார தடைகளை தைவான் மீது சீனா விதித்துள்ளது. பெலோசி வருகைக்கு ஆரம்பம் முதலே கடும் கண்டனம் தெரிவித்த சீனா, தைவானிலிருந்து பழங்கள், மீன் பொருட்களின் இறக்குமதியையும் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. தைவானில் இறக்குமதியாகும் இயற்கை மணலில்  90 சதவீதத்துக்கும் மேல் சீனாவில் இருந்து பெறப்படும் நிலையில், மணல் ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளது.  Source link

அமெரிக்க மக்களுக்கு அரசு எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்- அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் – ஜவாஹிரி கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகள் அமெரிக்க மக்களை தாக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் பயங்கரவாதி அய்மான் அல் – ஜவாஹிரி. ஆப்கனில் பதுங்கியிருந்த அவர் சில தினங்களுக்கு முன் ஆளில்லா குட்டி விமான குண்டு வீச்சில் கொல்லப்பட்டார். அமெரிக்க உளவு … Read more

உரிய விலை கொடுக்க நேரும்அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை| Dinamalar

பீஜிங், ஆக. 4- ‘தைவான் விவகாரத்தில் தலையிட்டால் உரிய விலை கொடுக்க நேரிடும்’ என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தைவானுக்கு சென்ற அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, ஒரு நாள் விஜயத்திற்குப் பின் தனி விமானத்தில் அமெரிக்கா கிளம்பிச் சென்றார்.தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தன்னுடன் அதிகாரபூர்வமாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டுள்ளது. இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க பார்லி.,யின் … Read more

இலங்கைக்கு இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா உதவி; அதிபர் விக்ரமசிங்கே நன்றி

கொழும்பு, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அந்த நாடு மக்களின் போராட்டத்தில் சிக்கி தவித்து வருகிறது. இறக்குமதி ஆக கூடிய பொருட்களை வாங்க கூட போதிய நிதிவசதி இல்லாத சூழலால், உணவு, எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், கிடைக்கும் பொருட்களையும் கூட வாங்க மக்கள் மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் கூட நீண்ட வரிசையில் நின்று பெற்று செல்ல கூடிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. … Read more

போர் விமானங்கள் சூழ தைவான் வந்த பெலோசி… தனியாக ஒரு விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டார்

தைபே, சீனாவில் இருந்து பிரிந்து சென்ற தைவான், சொந்த அரசியலமைப்பு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆகியவற்றுடன் தன்னை ஒரு சுதந்திர நாடாக பார்க்கிறது. ஆனால் சீனாவோ, தைவானை தனது கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பகுதி என்று கூறி வருகிறது. ஆனால், தைவானுக்கும், அதன் நிலைப்பாட்டுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (வயது 82), தனது … Read more

நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது: ரஷ்யா

மாஸ்கோ: நான்சி பெலோசியின் தைவான் பயணத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபா நாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு நேற்றிரவு பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையைப் நான்சி பெலோசி பெற்றார். மேலும் செய்தியாளர் சந்திப்பில், “தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு. தைவான் உடன் நாங்கள் நிற்கிறோம்” என்று நான்சி தெரிவித்திருக்கிறார். நான்சியின் … Read more

சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் – 3 பேர் பலி, 6 பேர் காயம்

பெய்ஜிங், சீனாவில் உள்ள தனியார் மழலையர் பள்ளி ஒன்றில் இன்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணம், அன்ஃபு கவுண்டியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இன்று காலை சுமார் 10 மணியளவில் முகமூடி மற்றும் தொப்பி அணிந்த நபர் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. சந்தேகத்துக்குரிய அந்த நபர் … Read more

பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி| Dinamalar

கொழும்பு: இலங்கை பார்லிமென்டில் அதிபர் ரணில் பொருளாதார நெருக்கடியில் தவித்த இலங்கைக்கு, உயிர் மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி என கூறியுள்ளார். இலங்கை பார்லி.,யில் அதிபர் ரணில் கூறியிருப்பதாவது: பொருளாதார நெருக்கடியில் தவித்த இலங்கைக்கு, காலத்தே துணை நின்ற, இந்தியாவின் உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம். இலங்கைக்கு உயிர் மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள மலையக மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அரசாங்க வீடுகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும். … Read more

500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலான கார்ட்வீல் கேலக்சியை படம்பிடித்த நாசா

பாரிஸ், பார்ப்பதற்கு வளையங்களாக காட்சியளிக்கும் பிரகாசமான ஒளிகள் நமது சூரியனைப் போல பல கோடி கோடி விண்மீன்கள் கொண்ட விண்மீன் கூட்டம். 50 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கார்ட்வீல் உடுதிரளை (Galaxy) ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் அகச்சிவப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் படம் பிடித்துள்ளது. இது ஒரு பெரிய சுழல் விண்மீனுக்கும் சிறிய விண்மீனுக்கும் இடையே மோதியதைத் தொடர்ந்து உருவானது. இது வேகன் சக்கரத்தின் தோற்றத்தை அளிக்கிறது. இது இரண்டு வளையங்களைக் கொண்டுள்ளது . ஒரு பிரகாசமான … Read more