ஆபரேஷன் சக்சஸ் : தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பிரிந்தனர்..!

பிரேசிலில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு 27 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் இரு தலைகளும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆர்தர் மற்றும் பெர்னார்டோ லிமா எனப் பெயரிடப்பட்ட இந்த இரட்டை குழந்தைகளின் தலைப்பகுதி ஒட்டியப்படியே இருந்தது. அவர்கள் மூளையின் ஒரு பகுதியையும், இதயத்திற்கு இரத்தத்தை மீண்டும் கொண்டுசெல்லும் முக்கிய நரம்பையும் பகிர்ந்து கொண்டனர். இங்கிலாந்தின் கைதேர்ந்த மருத்துவர் தலைமையிலான குழுவினர் விர்ச்சுவல் ரியாலிட்டி கணிப்புகளைப் பயன்படுத்தி பல மாத ஆராய்ச்சியின் மூலம் அறுவை சிகிச்சை செய்து, … Read more

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு..!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 22 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 02 காசுகளாக நிறைவடைந்தது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு, அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கியிருப்பது உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வியாழன் அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகளும், வெள்ளியன்று 45 காசுகளும் உயர்ந்த நிலையில் நேற்று மேலும் 22 காசுகள் உயர்ந்துள்ளது. … Read more

மனைவியுடன் கள்ள உறவு: போலீஸ்காரர் மூக்கு அறுப்பு| Dinamalar

லாகூர்: பாகிஸ்தானில் தன் மனைவியுடன் கள்ள உறவு வைத்திருந்தவரின் காது, மூக்கு, உதடுகளை அறுத்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். பாக்.,கின் பஞ்சாப் மாகாணம் ஜங் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் காசிம் ஹயத்.இவரை, முகமது இப்திகர் என்பவர் கடத்திச் சென்று தனியிடத்தில் அடைத்து சித்ரவதை செய்துள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காசிமுக்கு, இப்திகர் மனைவியுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் எடுத்த படங்களை காட்டி அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டு … Read more

காமன்வெலத் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள்..!

பிரிட்டனின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெலத் போட்டியின் 4ஆம் நாளில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை சுசிலா தேவி வெள்ளி வென்றார். 71 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப்பதக்கம் வென்றார். 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய ஜூடோ வீரர் விஜய்குமார் வெண்கலப் பதக்கம் பெற்றார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி| Dinamalar

பசட்டெர்ரே: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ‘டி-20’ போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று செயின்ட் கிட்சில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. … Read more

சீனாவில் மெமரி சிப் தயாரிப்பவர்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை? சிப்மேக்கிங் கருவிகள் ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்த வாய்ப்பு..!

சீனாவில் மெமரி சிப் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சீனாவில் உள்ள மெமரி சிப் தயாரிப்பவர்களுக்கு சிப்மேக்கிங் கருவிகளை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இது சீனாவை தளமாக கொண்ட பெரிய நிறுவனங்களான Yangtze Memory Technologies மற்றும் தென்கொரியாவில் உள்ள Samsung, SK Hynix உள்ளிட்ட பிற முக்கிய மெமரி சிப் நிறுவனங்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.  Source link

அல்கொய்தா தலைவர் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவனும், பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்தவனுமாகி அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி இன்று நடந்த டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அவனது தலைக்கு 25 மில்லியன் டாலர் வெகுமதி வழங்குவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் இன்று அவன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி … Read more

ஒரே நாளில் 4000 நிலநடுக்கங்கள்! வெடிக்க காத்திருக்கும் எரிமலை

ஒரே நாளில் சுமார் 4,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் எரிமலை வெடிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது ஐஸ்லாந்து. ஆகஸ்ட் மாதம் முதல் நாளன்று ஏர்பட்ட இந்த நிலநடுக்கங்கள் வானிலையை மோசமாக்கியிருக்கிறது. ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஒரு புதிய எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்பது பற்றிய கவலையைத் தூண்டியுள்ள இந்த தொடர் நிலநடுக்கங்கள் மிதமானது முதல் கடுமையானது வரை பல்வேறு அளவுகளில் பதிவாகியுள்ளன. இது பூமிக்கு அடியில் மாக்மா இயக்கத்தால் ஏற்படலாம் என்றாலும், இந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்களை … Read more

அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டார்

காபூல்: அல்-காய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அல்-காய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அல்-காய்தா அமைப்பை வழிநடத்தி வந்தார் அல்- ஜவாஹிரி. இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். சில நேரங்களில் குறிப்பாக, இந்திய விவகாரங்களில் வீடியோக்களில் தோன்றி பேசிவந்தார். … Read more

லிபியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறி விபத்து.. 9 பேர் உயிரிழப்பு – 16 பேர் கவலைக்கிடம்..!

வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். லிபியாவின் மத்திய நகரமான பென்ட் பய்யாவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி கவிழ்ந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள் லாரியில் கசிந்த பெட்ரோலை எடுப்பதற்காக எச்சரிக்கையையும் மீறி சென்றனர். அப்போது, அந்த லாரி வெடித்து சிதறியதில் 76 பேர் படுகாயமடைந்தனர். Source link