பிரிட்டன் பிரதமர் போட்டியில் ரிஷி சுனக்: ட்விட்டரில் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்

பிரிட்டன் பிரதமர் போட்டியில் தானும் உள்ளதாகக் கூறி ரிஷி சுனக் ட்விட்டரில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் அமைச்சர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்து, இதற்கு முன் இல்லாத வகையில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கன்சர்வேட்டிவ் (பழமைவாத) கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் அவர், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பொறுப்புகளை கவனிக்கிறார். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போட்டியில் தானும் உள்ளதாகக் கூறி ரிஷி … Read more

பிரான்ஸில் வனத்தை கபளீகரம் செய்யும் காட்டுத் தீயை அணைக்க நூற்றுக்கணக்கான வீரர்கள் போராட்டம்.. 1,500 ஏக்கர் நிலம் சேதம்..!

தெற்கு பிரன்சில் உள்ள Bouches-du-Rhone வனத்தை கபளீகரம் செய்யும் காட்டுத் தீயை அணைக்க நூற்றுக்கணக்கான வீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ வேகமெடுத்து பரவி ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஏக்கர் வனத்தை கபளீகரம் செய்தது. விமானம் மூலம் தீயணைப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆர்ல்ஸ் உள்ளிட்ட வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகள் முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். Source link

சாலையில் சீறிப் பாயும் கார்களுக்கு மத்தியில் திடீரென தரை இறங்கிய விமானம்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் Swain County நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று கடுமையான வாகன போக்குவரத்துக்கு மத்தியில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. மலைப்பாங்கான அந்த நெடுஞ்சாலையில் விமானத்தை பத்திரமாக தரை இறக்கிய விமானிக்கு அந்நகர ஷெரீப் பாராட்டு தெரிவித்தார். விமானத்தில் இருந்த விமானி உயிரிழந்ததை அடுத்து அதில் இருந்த பயணியே விமானியாக செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் சாலையில் சென்றவர்களுக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. சாலையில் சீறிப் பாய்ந்த கார்களுக்கு மத்தியில் விமானத்தை … Read more

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டி

லண்டன், இங்கிலாந்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்தபடியாக, அந்தப் பதவியைப் பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவராக பொறுப்பு வகித்து வரும் டாம் டுகென்தாட்டும் பிரதமா் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அதைடுத்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமரைத் தோந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி நடத்தவிருக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்கவிருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, நிதிமந்திரி பதவியிலிருந்து அண்மையில் விலகிய இந்திய வம்சாவளியைச் … Read more

நெடுஞ்சாலை சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் இருந்து நூலிழையில் தப்பிய கார்.. வீடியோ இணையத்தில் வைரல்..!

சீனாவில் நெடுஞ்சாலை சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் இருந்து நூலிழையில் கார் தப்பிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், மலையில் இருந்து மண் சரிந்து சுரங்கத்தில் விழுந்தது. மலையில் இருந்து மழை போல் கொட்டிய மண் சரிவில் இருந்து கார் ஒன்று நூலிழையில் தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளன.  Source link

பிலிப்பைன்ஸ் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றவர், பெர்டினான்ட் மார்கோஸ் (வயது 64). இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவரது ஊடக செயலாளர் ரோஸ் பீட்ரிக்ஸ் குரூஸ் ஏஞ்சல்ஸ் நேற்று மணிலாவில் நிருபர்களிடம் அறிவித்தார். அப்போது அவர், “அதிபர் பெர்டினான்ட் மார்கோசுக்கு லேசான காய்ச்சல் உள்ளது, மற்றபடி நலமாக உள்ளார்” என தெரிவித்தார். அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் கொரோனா கால நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிபர் … Read more

பிரதமர் பதவிக்கான பிரசாரத்தை துவக்கிய ரிஷி சுனக்.. நம்பிக்கை மீட்டெடுப்போம், நாட்டை ஒருங்கிணைப்போம் என பிரசாரம்..!

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான பிராசாரத்தை துவக்கிய முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், நம்பிக்கையை மீட்டெடுப்போம், பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்வோம், நாட்டை ஒருங்கிணைப்போம் என பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளார். பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்த நிலையில், அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பிரதமர் போட்டியில் முன்னணியில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், யாரவது ஒருவர் பொறுப்பை கையில் எடுத்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரசார … Read more

அமெரிக்கா: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு 'சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது'

வாஷிங்டன், அமெரிக்காவில் அரசியல், சமூகம், கலை, விளையாட்டு என பல்வேறு துறைகள் வாயிலாக நாட்டின் மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் நபர்களுக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ‘சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருது பெறும் நபர்களை வெள்ளை மாளிகை அண்மையில் அறிவித்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் பதக்கங்களை அணிவித்து கவுரவித்தார். அமெரிக்க … Read more

‘அபேவை பிடிக்கவில்லை, அதனால் கொலை செய்தேன்' – ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ கொலையில் கைதானவர் வாக்குமூலம்

டோக்கியோ: தேர்தல் பிரச்சாரத்தில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவை தேர்தல் நாளை நடை பெறுகிறது. இதையொட்டி ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் நேற்று ஜப்பானின் நாரா நகரில் பிரச்சாரம் செய்தார். அந்த நகரின் ரயில் நிலையத்தின் முன்பு மக்கள் மத்தியில் ஷின்சோ அபே பேசினார். அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் … Read more

கோத்தபயா பதவி விலக போராட்டம்… பொது மக்கள் – போலீசாரிடையே தள்ளுமுள்ளு… மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு

இலங்கையில் தலைநகர் கொழும்புவில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரயில் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் கோத்தபயாவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி கொழும்புவில் மாணவ அமைப்பினர், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தள்ளு முள்ளூ ஏற்பட்ட நிலையில், பொது மக்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போலீசார் விரட்டினர். தலைநகர் கொழும்பு … Read more