ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 1,000 பேர் பலி

மாட்ரிட், காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை தாண்டியது. வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தால் ஸ்பெயின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயினில் வீசிய வெப்ப அலைக்கு கடந்த 10 நாட்களில் 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்த நாட்டு … Read more

Twitter: பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் வருமானத்தில் சரிவு

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அந்த நிறுவனத்தின் வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவன பங்குகளை, ஒரு பங்கிற்கு  54.20 டாலர் என்ற அளவில், ஒட்டுமொத்தமாக 4400 கோடிக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தமும் கையொப்பமானது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலிக் கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்கவில்லை, அதனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் … Read more

கருங்கடல் வர்த்தகம்: ரஷ்யா – உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்தான்புல்: உக்ரைன் – ரஷ்யா இடையே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே நடந்த இந்த ஒப்பந்தத்ததை உலக நாடுகள் வரவேற்றுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் – ரஷ்யா இடையே நடக்கும் போர்க் காரணமாக கருங்கடல் பகுதியில் வர்த்தகம் தடைபட்டது. இதனால் கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு உலக அளவில் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. ஐரோப்பிய நாடுகளும் இது குறித்து கவலை தெரிவித்திருந்தன. இந்தச் சூழலில் இது தொடர்பாக ஐ.நா. பொதுச் … Read more

சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் சேர உலக நாடுகளுக்கு அழைப்பு!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் சாலைகள், எரிசக்தி திட்டங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015 இல் தொடங்கப்பட்ட திட்டமே ‘சீபெக்’ என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும். இந்த நிலையில், சீபெக்கின் 3-வது ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பாக நடைபெற்ற கூட்டு செயற்குழுவின் இக்கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது. பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சோஹைல் மஹ்மூத் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை துணை … Read more

உக்ரைனுக்கு மேலும் 270 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு

கீவ், உக்ரைன் மீது ரஷியா 150-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 270 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலம் ரஷியா போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு … Read more

இலங்கையில் எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி விழுந்து பலி

கொழும்பு, பொருளாதார பிரச்சினையில் தள்ளாடிவரும் இலங்கையில் ஆட்சி அதிகார மாற்றம் ஏற்பட்டாலும் மக்களின் அவதி மாறவில்லை. புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனேயை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நியமித்த நேற்றைய தினமே, பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அந்நாட்டின் கிழக்கு மாகாணத்தின் கின்னியா நகரில் பெட்ரோல் நிலையத்தில் நெடுநேரம் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு 59 வயது நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோல மேற்கு மாகாணத்தின் மத்துகம நகரில் பெட்ரோல் … Read more

ஐநாவுடன் ரஷ்யா – உக்ரைன் ஒப்பந்தம்; உலகின் உணவு நெருக்கடிக்கு தீர்வாகுமா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல மாதங்களாக நடந்து வரும் போர் காரணமாக உலகின் பல நாடுகள் உணவு நெருக்கடியை சந்தித்து வருகின்றன.சர்வதேச அளவில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் அரிசியின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா  ஐநா உடன்  செய்துள்ள ஒப்பந்தத்திற்குப் பிறகு, உணவு நெருக்கடியிலிருந்து உலகம் விடுபடக் … Read more

பஞ்சாப் முதல்-மந்திரி தேர்தலில் தோல்வி; பொதுமக்கள் போராட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சியின் … Read more

Volodymyr Zelensky: உக்ரைனிடம் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள தானியங்கள் இருப்பு

ரஷ்யா-உக்ரைன் போர்: போருக்கு மத்தியில், உக்ரைனிடம் தேங்கிக் கிடக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த ஒப்பந்தத்தை வரவேற்றார், ஆனால், ரஷ்யா மீது நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர், எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார். உக்ரைன் மற்றும் ரஷ்யா தானியங்கள் ஏற்றுமதி தொடர்பாக துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகளுடனான முக்கிய ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு, உக்ரைனிடம் உள்ள … Read more

உக்ரைனுக்கு 270 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய ஆயுத தொகுப்பு வழங்கும் அமெரிக்கா..!

உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த புதிதாக 270 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. புதிய தொகுப்பில் கூடுதல் நடுத்தர தூர ராக்கெட்டுகள், HIMARS வகை ஏவுகணைகள், பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் இடம் பெற்று உள்ளதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். ரஷ்யப் போரால் உருக்குலைந்த உக்ரைனுக்கு இதுவரை 8 புள்ளி 2 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா வழங்கி உள்ளது.    Source … Read more