இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள அவர், அதிபர் பதவியிலிருந்து விலகினார். தற்காலிக அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் … Read more

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டி: இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை

லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 இறுதி வேட்பாளரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் பல்வேறு கட்டங்களாக வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் நடந்த 2 சுற்று தேர்தல்களில் 3 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, 5 வேட்பாளர்கள் அடுத்த … Read more

Sri Lankan New President: இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். பரபரப்பான சூழலில் இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுர குமார திசநாயகே ஆகிய மூவர் போட்டியிட்ட நிலையில், ரணில் விக்கிரமசிங்கவும் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது, எமக்கு முன்னால் மிகப்பெரிய சவால்கள் உள்ளன என இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ரியாட்டர்ஸ் … Read more

கொதிக்குது, தகிக்குது…வெள்ளையரை வாட்டுது வெயில்!!| Dinamalar

லண்டன்: ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பக்காற்றை மக்கள் தாங்க முடியாமல் அவமதிப்படுகின்றனர். பல நாடுகளில் வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். பிரிட்டன் பிரிட்டன் வரலாற்றில் முதல்முறையாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை(104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியது. பிரிட்டனின் லின்காயின்ஷைர் பகுதியில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. 33 இடங்களில் அதிகளவு வெப்பம் பதிவாகி முந்தைய … Read more

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.11 கோடியாக உயர்வு

வாஷிங்டன், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகள் முதன்முறையாக சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை … Read more

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பம்; வெப்ப அலையால் துவண்டு விழும் மக்கள்

ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி, ரஷ்யா உக்ரைன் யுத்தம் உணவுபொருள் பஞ்சத்தோடு, வரலாறு காணாத கடுமையான வெயிலும் மக்களை வாட்டுகின்றது. சில நாட்களாக தொடர்ந்து உக்கிரம் அடையும் வெயில் சில தினங்களாக ஐரோப்பாவினை முடக்கி போட்டுள்ளது. சாலையில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே உள்ளது. பல நிறுவனங்கள் விடுமுறை அறிவித்திருக்கின்றன.  பள்ளிகள் இயங்குவதில் கடும் கட்டுப்பாடு, வெயில்கால நோய்கள் தடுக்கும் வழிமுறைகளை  அறிவித்துள்ளன. வெப்ப அலை தாக்குதலை எதிர்கொள்ளும் ஐரோப்பாவில் , கடும் வெப்பம் காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கையும் … Read more

இலங்கையில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

கொழும்பு, இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், இலங்கைக்கு இந்தியா ஆதரவுகரம் நீட்டியுள்ளது. கோதுமை … Read more

இலங்கையில் இந்திய விசா மைய அதிகாரி மீது நள்ளிரவில் நடந்த தாக்குதல்

கொழும்பு: இலங்கையில் நேற்றிரவு இந்திய விசா மைய அதிகாரி மீது சில அடையாளம் தெரியாதோர் நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்தார். இதனைடுத்து இலங்கை வாழ் இந்தியர்கள் அங்குள்ள நிலைமையை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் ஒருவேளை வெளியேற திட்டமிட்டால் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டு சிங்கப்பூரில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார். கோத்தபய ராஜபக்ச தப்பிச் செல்ல … Read more

உக்ரைன் தேசிய கொடியின் வண்ணம் கொண்ட பூங்கொத்துகளால் ஜெலன்காவை வரவேற்ற பைடன்

வாஷிங்டன், உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா பின்பு, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24ந்தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த போரானது தொடர்ந்து பல மாதங்களாக நீடித்து வருகிறது. போரால் உக்ரைனின் நாட்டில் வீரர்கள், பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ரஷிய தரப்பில் வீரர்கள், ஆயுதங்கள் ஆகிய இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்து அதற்காக … Read more

இலங்கையின் புதிய அதிபர் யார்? மும்முனைப் போட்டி

கொழும்பு: பரபரப்பான சூழலில் இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியில் இருக்கிரார். 73 வயதான ரணில் விக்கிரமசிங்க, 63 வயதான தீவிர சிங்கள பௌத்த தேசியவாதியும், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா (SLPP) கட்சி மற்றும் இடதுசாரி ஜனதா விமுக்தியில் இருந்து பிரிந்த குழுவின் முக்கிய உறுப்பினருமான டலஸ் அழகப்பெருமவும் அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக உள்ளனர்.பெரமுன (ஜே.வி.பி) அனுரகுமார திஸாநாயக்கவும் அதிபர் … Read more