ஆட்சேர்ப்பு நடவடிக்கையை குறைக்கும் கூகுள் நிறுவனம்.. பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்பதால் நடவடிக்கை..!

பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதால், நடப்பு ஆண்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை குறைத்துக் கொள்வது என கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில் இதை தெரிவித்துள்ளார். எனினும் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பொறியியல், தொழில்நுட்ப பிரிவுகளில் ஆட்களை சேர்க்க கவனம் செலுத்தப்படும் என்றும் சுந்தர்பிச்சை கூறியுள்ளார். அதேநேரத்தில் மற்றொரு தகவல்தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் ஆட்குறைப்பை தொடங்கியுள்ளது. நிறுவனத்தில் மொத்தமுள்ள 1.81 லட்சம் ஊழியர்களில் ஒரு சதவிகிதம் … Read more

தண்ணீர் உள்ள மற்றொரு கோளைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பிரபஞ்சத்தில் பல்வேறு அதிசயங்களை வெளியிட்டு நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பால்வெளி அண்டத்தில் சிதறிக் கிடந்த ஒளிகளை ஒன்றிணைத்த புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டது.  இதனைத் தொடர்ந்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பல்வேறு வியப்பூட்டும் புகைப்படங்களை  நாசா வெளியிட்டு வருகிறது. பூமியின் தோற்றம் குறித்து எவ்வாறு நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறதோ, அதே போல … Read more

குறுகலான இடைவெளிகளில் செல்லத்தக்க வகையில் பாம்பு வடிவ ரோபோவை உருவாக்கிய ஜப்பான் விஞ்ஞானிகள்..!

ஜப்பானில் பாம்பு வடிவ ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 5.5 அடி நீளம், 10 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, உயரமான படிகளில் ஏறி, குறுகலான இடைவெளிகளில் செல்லத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மூலம் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மனிதர்களை கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.  Source link

‘‘ராஜினாமா கடிதம் அனுப்புகிறேன்’’- சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோத்தபய: விவரங்களை வெளியிட மாலத்தீவு மறுப்பு

மாலே: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாடாளுமன்ற சபாநாயகருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது ராஜினாமா கடிதம் அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் இருக்கும் விவரத்தை வெளியிட மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் மறுத்து விட்டது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். ஆனால் அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய … Read more

இலங்கையில் பெரும் கலவரம்; அரசியல் குழப்பம்: போராடும் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவம் திணறல்

கொழும்பு: இலங்கையில் பெரும் கலவரம் நடந்து வருகிறது. அரசியல் குழப்பம் ஏற்பட்டு மக்களை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவம் திணறுகிறது. பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய, ராணுவத் … Read more

கொதி நிலையில் இலங்கை; தப்பி ஓடிய ராஜபக்ச; அடுத்த அதிபர் யார்?

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இன்றைய இலங்கையில் நிலைக்கு, அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் தாம் முக்கிய காரம என மக்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையையும், பிரதமர் இல்லத்தையும் சூரையாடியதைத் தொடர்ந்து,  கோத்தபய ராஜபக்ச சிறிது நாட்கள் தலைமறைவாக இருந்தார்.    பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று  அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிரபார்க்கப்பட்ட நிலையில்,  கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை அதிகாலை நாட்டை விட்டு தப்பிச் சென்றார். மாலத்தீவின் … Read more

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் திறனை அமெரிக்க ராணுவம் குறைத்துவிட்டது – அதிபர் ஜோ பைடன்.!

சிரியாவின் தீவிரவாத தலைவரை அழித்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் திறனை அமெரிக்க ராணுவம் குறைத்துவிட்டதாக அதிபர் பைடன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மெஹர் அல் அகலை வான்வழி தாக்குதலில் வீழ்த்தியதில் அமெரிக்க ராணுவத்தின் நுண்ணறிவு திறன் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வான்வழி தாக்குதல் அமெரிக்க ஆயுத படைகளின் துணிச்சல் மற்றும் திறமைக்கான சான்றாக விளங்குகிறது என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார். Source link

இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நியமனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனா கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே, இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதனால், அங்கு அவசர நிலையை அமல்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே … Read more

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில், இலங்கையில் அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய, ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்பட்டது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, கோத்தபய ராஜபக்ச தனது அதிபர் பதவியை … Read more

பனாமாவில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்.!

பனாமாவில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை 15-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதாக அதிபர் லாரன்டினோ கார்டிசோ சமீபத்தில் அறிவித்தார். கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான விலையை கட்டுப்படுத்தக்கோரியும், அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   Source link