2023ல் மக்கள் தொகையில் இந்தியா சீனாவை விஞ்சும்| Dinamalar
நியூயார்க் : ‘இந்தியா, 2023ல், மக்கள் தொகையில் சீனாவை விஞ்சி, உலகளவில் முதலிடத்தை பிடிக்கும்’ என, ஐ.நா., தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ஐ.நா., ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 1950 முதல் உலக மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் குறைந்து, 2020ல் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக சரிவடைந்துள்ளது. வரும், நவ.,15ல் உலக மக்கள் தொகை, 800 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2030ல், 850 கோடியாகவும், 2050ல், 970 கோடியாகவும் உயரும். … Read more