முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்த மீண்டும் கடன்வாங்கும் பாகிஸ்தான்
முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்த மீண்டும் கடன்வாங்கும் மோசமான சுழலில் பாகிஸ்தான் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துனியா டெய்லி நாளிதழில் ஆயாஸ் அமீர் என்பவர் எழுதிய கட்டுரையில், திறமையற்ற ஆட்சியாளர்கள் அனைவரும் சிக்கலைத் தீர்க்கக் கடன் வாங்குவது, அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த மீண்டும் கடன் வாங்குவது என்கிற செயல்களையே செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இனிமேல் கடன் வழங்க யாரும் முன்வர மாட்டார் என்கிற நிலைக்குப் பாகிஸ்தானை இந்தக் கடன் சுழல் கொண்டு சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். Source link