தரையிறங்கும் போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளான ராணுவ சரக்கு விமானம்.. 4 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் ரியாசான் நகருக்கு அருகே இராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும் போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். Ilyushin Il-76 என்ற சரக்கு விமானத்தில் மொத்தமாக 9 பேர் பயணித்துள்ளனர். ரியாசான் பகுதியில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் தீப்பற்றியதில் அதில் சிக்கி 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானத்தின் என்ஜின் கோளாறால் இந்த விபத்து நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

நிலவு துகள்கள், கரப்பான்பூச்சிகள் ரூ.4 கோடிக்கு ஏலம்; மறுத்து முரண்டுபிடிக்கும் நாசா

1969 ஆம் ஆண்டு நாசாவின் அப்போலோ 11 மிஷனாக நிலவில் இருந்து  இருந்து  47 பவுண்டுகள் (21.3 கிலோகிராம்) எடை கொண்ட பாறை பூமிக்கு கொண்டு வரப்பட்டது.  இந்த பாறையின் துகள்களை வைத்து நிலவின் மண் மற்றும் பாறைகளில் நச்சுத்தன்மையுள்ளதா என்ற ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சில பூச்சிகள், மீன்கள் மற்றும் பிற சிறிய உயிரினங்களுக்கு அந்த நிலவு பாறையின் துகள்கள் உணவாக அளிக்கப்பட்டன. பின்னர் அவை சாகும் வரை அவற்றை கண்காணித்தனர்.  பின்னர் … Read more

‘‘மறப்போம் மன்னிப்போம்’’ -ஜமால் கஷோகி படுகொலைக்குப் பின்பு முதன்முறை பயணம்: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் துருக்கிக்கு உதவும் சவுதி இளவரசர்

அங்காரா: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலைக்குப் பிறகு துருக்கி நாட்டிற்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முதன்முறையாக பயணம் மேற்கொண்டார். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துருக்கி, ஜமால் கஷோகி படுகொலையை மறந்து சவுதியின் உதவியை கைகுலுக்கி வரவேற்றுள்ளது. சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி … Read more

வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் 7 கிரகங்கள்.. இன்று முதல் 27 ஆம் தேதிவரை வானில் ஏற்படும் அற்புத நிகழ்வு

வானில் இன்று முதல் வருகிற 27 ஆம் தேதி வரை 7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அற்புதம் நிகழவுள்ளது. வெள்ளி, புதன்,செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 7 கிரகங்கள் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கின்றன. இந்த கிரகங்களின் அணிவகுப்பில் நெப்டியூன் மற்றும் யுரேனஸ்-ஐ தவிர ஏனைய 5 கிரகங்களையும் 24 ஆம் தேதி முதல் சூரிய உதயத்திற்கு முன்னால் வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். … Read more

கழிவு நீரில் போலியோ வைரஸ் : மீண்டும் பரவுகிறதா போலியோ?

1970  மற்றும் 1980-களில் உலகையே புரட்டிப்போட்ட நோய் இளம்பிள்ளை வாதம். தீவிர மருத்துவ நடவடிக்கைகளினாலும், பரவலான தடுப்பூசி பயன்பாட்டினாலும் போலியோ தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் லண்டன் நகரின் கழிவு நீரில் தற்போது வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் நகரில் கடந்த 1984-ம் ஆண்டு கடைசியாக போலியோ தொற்று கண்டறியப்பட்டது. 2003-ம் ஆண்டு பிரிட்டன் போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் நகரில் போலியோ பரவும் அபாயம் உள்ளதாக … Read more

ஆப்கன் நிலநடுக்கம்; உடைகளை இழந்த மக்கள்: உதவிக் கோரும் தலிபன்கள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் அம்மக்களுக்கான உதவியை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் பூமியில் 51 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரித்தது, இந்த … Read more

உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளில் 26 வீரர்கள் இடம்பெறுவார்கள் என அறிவிப்பு.!

உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளில் 26 வீரர்கள் இடம்பெறுவார்கள் என உலக கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. ] இதுவரை 23 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு போட்டியின் போது 15 மாற்று வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கால்பந்து தொடர் நவம்பர் 21 ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. Source link

முன்னாள் ‘மிஸ் பிரேசில்’ கிளேய்சி கார்ரியா 27 வயதில் மரணம்

பிரேசிலியா: மூளை ரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு பிரேசிலில் அழகிப் பட்டம் வென்றவரான கிளேய்சி கார்ரியா உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 27. பிரேசிலைச் சேர்ந்தவர் கிளேய்சி கார்ரியா. இவர் 2018-ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த அழகிப் போட்டியில் ‘மிஸ் பிரேசில்’ பட்டம் வென்றவர். கிளேய்சி கார்ரியா ஏப்ரல் மாதம் ‘டான்சில்ஸ்’ எனப்படும் தொண்டையில் வளர்ந்த சதையை அகற்றும் அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்து கொண்டிருக்கிறார். சிகிச்சைக்குப் பிறகு அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது அதன் … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா நிறைவேற்றம்!

அமெரிக்க நாடாளுமன்ற சென்ட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிக் கலாசாரம் தலைதூக்கி உள்ளது. இதனால் அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்த மர்ம நபர், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குழந்தைகள் உட்பட ஆசிரியர்கள் பலியாகினர். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த … Read more

அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றம்.!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் 19 குழந்தைகள் சுட்டுக் கொலை செய்தது அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  அதன்படி, 21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மனநல ஆலோசனைக்காகவும், பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க கீழவையான பிரதிநிதிகள் அவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அதிபர் பைடன் கையெழுத்திட்டப்பிறகு சட்டமாக அமலுக்கு வரும். Source link