இங்கிலாந்தில் பழமையான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி வரும் எலெக்ட்ரிக் கார் நிறுவனம்.!

இங்கிலாந்தில் உள்ள எலெக்ட்ரிக் கார் நிறுவனம் ஒன்று பழமையான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி வருகிறது. லண்டன் எலெக்ட்ரிக் கார்ஸ் என்ற அந்த நிறுவனம் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின்களை அகற்றிவிட்டு அவற்றுக்கு பதிலாக நிஸான் லீஃப் அல்லது டெஸ்லாவின் எலெக்ட்ரிக் என்ஜின்களை பொருத்துகிறது. இதன் மூலம் வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்படுகின்றன. தற்போது புழக்கத்தில் உள்ள கார்களை பயன்படுத்துபவர்களும் சைலன்சரில் புகை வெளியேற்றத்தை நிறுத்தவும், காரின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கிலும் அவற்றை அனுப்பி எலக்ட்ரிக் கார்களாக … Read more

பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு புதிய உத்தரவு: தலிபான்கள் அடுத்த அதிரடி!

ஆப்கனை கைபற்றியுள்ள தலிபான்கள், அங்கு புதிய அரசை அமைத்துள்ளனர். ஆனால், அவர்களது செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் அந்நாடுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளன. மேலும், ஆட்சி அமைத்த பின்னர் தலிபான்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெண்களுக்கான உரிமைகள் மறுப்பு, ஆண்கள் முகச்சவரம் செய்யக் கூடாது என்பன போன்ற பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆட்சி அமைப்பதற்கு முன்னர் தலிபான்கள் பேசியதற்கும், … Read more

இலங்கையில் 2 வாரங்களாக நீடித்து வந்த அவசர நிலை நீக்கம்

கொழும்பு: பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளுங்கட்சிக்கு எதிராக இலங்கையில் நடந்து வந்த போராட்டங்களைத் தொடர்ந்து, அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அவசர நிலை 2 வாரங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச மே 6-ம் தேதி முதல் நாட்டில் அவரச நிலையை பிரகடனம் செய்தார். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக … Read more

இந்த வாரம் ரத்த மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் வார்னிங்!

பிரிட்டன் நாட்டில் இந்த வாரம் ரத்த மழை என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்வதுடன், இடி மின்னலுடன் கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த ரத்த மழை என்பது, அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும் போது உருவாகுவதாகும். … Read more

உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டோம்- ரஷியா தகவல்

லண்டன்: உக்ரைனின் ஜிடோமிர் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டதாக ரஷிய ராணுவம் கூறி உள்ளது. கப்பலில் இருந்து  ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் … Read more

கேன்ஸ் திரைப்பட விழாவில் மேலாடையின்றி ஓடிய பெண்ணால் பரபரப்பு

கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்பெட் எனப்படும் சிவப்பு கம்பளத்தில் உலக திரை பிரபலங்கள் நடந்துசெல்லும் நிகழ்வு மிகவும் பிரபலமான ஒரு நிகழ்வாகும். இதில் பிரபலங்களின் உடைகள் முதல் அவர்களது அலங்காரம் வரை அனைத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். இந்த அண்டு கேன்ஸ் திரைப்பட விழா ரெட் கார்பெட்டில், உண்மையில் உலகம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு பெண்மணி உணர வைத்தார். ரெட் கார்பெட்டில் தோன்றிய பெண் ஒருவர் உக்ரேனிய கொடியின் வண்ணங்கள் … Read more

இரண்டு வாரங்களுக்கு பிறகு அவசர நிலை பிரகடனத்தை திரும்பப் பெற்றது இலங்கை

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.  மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்.பிக்களின் வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன.  இந்த போராட்டத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர்.  இதற்கிடையில் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றார்.  … Read more

சிரியாவில் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதல்களில் 3 பேர் பலி.!

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் கோலான் மலைப்பகுதியில் இருந்து, டமாஸ்கஸில் உள்ள ஆயுதக் கிடங்கை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் டமாஸ்கஸ் விமான நிலையத்தின் அருகிலிருந்த கட்டிடம் தீப்பற்றி எரிந்ததாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.  Source link

தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்களின் பேச்சுவார்த்தையின் மையம் வடகொரியா

தென்கொரியாவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பல முக்கிய முடிவுகளை எடுப்பார்.சியோலில் நடைபெறும் அமெரிக்கா-தென்கொரியா சந்திப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறும்.  சுற்றுப்பயணத்தில், இன்று, (2022 மே 20) தென் கொரியாவின் பியோங்டேக்கில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் பியோங்டேக் வளாகத்தில் உள்ள செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சென்றிருந்தார்.  அப்போது அவருடன் இருந்த தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், அங்குள்ள விஷயங்களை எடுத்துரைத்தார். … Read more

உலக அளவில் 11 நாடுகளில் 80 பேருக்கு, குரங்கு அம்மை நோய் உறுதி – உலக சுகாதார அமைப்பு

உலக அளவில் 11 நாடுகளில் 80 பேருக்கு, குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 11 நாடுகளில் இந்நோய் பரவியுள்ளது. அரிதான இந்நோய் குறித்து ஆய்வு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. Source link