உலக அளவில் 11 நாடுகளில் 80 பேருக்கு, குரங்கு அம்மை நோய் உறுதி – உலக சுகாதார அமைப்பு

உலக அளவில் 11 நாடுகளில் 80 பேருக்கு, குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 11 நாடுகளில் இந்நோய் பரவியுள்ளது. அரிதான இந்நோய் குறித்து ஆய்வு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. Source link

கறுப்பு பணம் பதுக்கும் இடமாக மாறுகிறதா துபாய்?| Dinamalar

கொழும்பு: கறுப்பு பணம் பதுக்கும் இடமாக துபாய் மாறியுள்ளதாகவும், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தை டென்மார்க் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளதாக இலங்கையை சேர்ந்த இணையதள சேனல் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கையில் இருந்து வெளியாகும் டியூப் தமிழ் என்ற இணையதள சேனலில் வெளியான வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: துபாய்க்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தை டென்மார்க் உள்ளிட்ட … Read more

பலாத்காரங்களை நிறுத்துங்கள் | உக்ரைன் மகளிருக்காக கேன்ஸ் விழாவில் பெண் நிர்வாணப் போராட்டம்

கேன்ஸ்: உக்ரைன் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேன்ஸ் திரைப்பட விழா சிவப்புக் கம்பள வரவேற்புப் பகுதியில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் மேலாடை இல்லாமல் நிர்வாணப் போராட்ட நடத்தினார். அவர் தனது மார்பு, வயிற்றுப் பகுதியில் உக்ரைன் கொடி நிறப் பின்னணியில் ‘எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள்’ என்று எழுதியிருந்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த பெண் போராளி சிவப்புக் கம்பளப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். அவர் முதுகில் ஸ்கம் (SCUM) என்றும் … Read more

முன்னாள் உலக செஸ் சாம்பியனுக்கு உளவாளி பட்டம் குத்திய ரஷியா

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ரஷியாவிற்கு உலக நாடுகல் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இதற்கிடையே ரஷியாவின் செயல்பாடுகளை அந்நாட்டை சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி கேஸ்பரோவ், முன்னாள் எண்ணெய் அதிபர் மிகெயில் கோதோர்வ்ஸ்கி ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.  இதையடுத்து ரஷிய நீதித்துறை அமைச்சகம், அவர்களை, ‘வெளிநாட்டு உளவாளிகள்’ என்ற … Read more

பாலியல் குற்றச்சாட்டு டெஸ்லா அதிபர் மறுப்பு| Dinamalar

வாஷிங்டன்: தன் மீது பாலியல் புகார் தெரிவித்த நபருக்கு, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவன அதிபர் எலான் மஸ்க் சவால் விட்டுள்ளார். அமெரிக்காவின், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மற்றும், ‘டெஸ்லா’ நிறுவன அதிபர் எலான் மஸ்க், 2016ல் ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தபோது அவருக்கு, ‘மசாஜ்’ செய்த விமானப்பணிப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய 2018ல் அந்த பெண் முடிவு செய்ததை அடுத்து, அவரை சமாதானம் செய்வதற்காக … Read more

உணவுப்பற்றாக்குறை அதிகரிப்பால் கோதுமை ஏற்றுமதியை நிறுத்திய தாலிபான் அரசு..

ஆப்கானிஸ்தானில் உணவுப்பற்றாக்குறை அதிகரித்திருப்பதன் காரணமாக கோதுமை ஏற்றுமதியை தாலிபான் அரசு நிறுத்தி வைத்துள்ளது. தாலிபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 22 மில்லியன் மக்கள் கடும் பசியால் வாடி வருவதாக உலக உணவு திட்டம் கூறியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் போர் தொடங்கியது முதலே ஆப்கானிஸ்தானில் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கோதுமை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு ஒவ்வொரு ஆண்டும், 6 மில்லியன் டன் கோதுமை தேவைப்படும் சூழலில் அந்நாட்டிற்கு மருந்துகளுடன் கூடுதலாக 50 ஆயிரம் டன் கோதுமையை மனிதாபினான … Read more

மேற்கு ஜெர்மனியை கடுமையான தாக்கிய சூறாவளிக்காற்று..

மேற்கு ஜெர்மனியை கடுமையான சூறாவளிக்காற்று தாக்கியுள்ளது. ஜெர்மனியில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக உயர் வெப்பநிலை நிலவி வருவதற்கு மத்தியில், வீசிய சூறாவளிக்காற்று வடக்கு ரைன் – வெஸ்ட்ஃபாலியா மாகாணத்தில் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூரைகள் தூக்கிவீசப்பட்டன. பாடெர்பான் (Paderborn) நகரை தாக்கிய சூறாவளியால் குடியிருப்புகள் சேதமடைந்தும், மரங்கள் முறிந்து விழுந்ததிலும் வெள்ளிக்கிழமை 10 பேர் காயமடைந்தனர். இதுவரை மொத்தம் 30 பேர் காயம் … Read more

கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீர் – நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரை

பியோங்கியான்: வடகொரியாவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 2.19 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  போதிய கொரோனா பரிசோதனை வசதிகள் இல்லாததால், அந்த நோயைப் போன்ற ‘காய்ச்சலால்’ பாதிக்கப்பட்டவா்கள் என்று மட்டுமே  அதிகாரிகள் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகின்றனா். மேலும் போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாமை, மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திணறி வருகிறது.  இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள இஞ்சி, மூலிகை தேநீா் போன்ற பாரம்பரிய மருந்துகளை மக்கள் பருக … Read more

இலங்கை வன்முறை: போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க தயார்- முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தகவல்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ராஜ பக்சேவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு கலவரம் முண்டது. இதில் 9 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வாகனங்கள் மற்றும் மகிந்த ராஜபக்சே, முன்னாள் மத்திரிகளின் வீடுகளுக்கு … Read more

ஐரோப்பாவில் மங்கிபாக்ஸ் பரவல் எதிரொலி: விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகரித்தது இந்தியா

ஐரோப்பிய நாடுகளில் மங்கிபாக்ஸ் (monkeypox) நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 100 பேருக்கும் மேல் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு அனைத்து சர்வதேச விமானநிலையங்களிலும் இதுதொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மத்தியில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் அவர்களிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு முழுக்க முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே … Read more