டீக்கு பதில் லஸ்சி குடிக்குமாறு பாகிஸ்தான் மக்களுக்கு உயர்கல்வி ஆணையம் அறிவுறுத்தல்.!
பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணையம், தேயிலை இறக்குமதிக்கான செலவைக் குறைப்பதற்கு மக்களை தேனீருக்கு பதிலாக லஸ்சி மற்றும் சட்டு சர்பத் போன்றவற்றை குடிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மக்களிடம் இதை ஊக்கப்படுத்தும்படி பொதுத்துறை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றையும் அந்த ஆணையம் அனுப்பி உள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த நடவடிக்கையானது வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு வருமானத்தையும் ஈட்டித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Source link