கத்தார் தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு..!

கத்தார் சென்றுள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தோஹாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். முன்னதாக கத்தார் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கையா நாயுடு வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். Source link

60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் வேலையை துறந்து விட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார் அமெரிக்க பெண்

ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் வேலையை துறந்து விட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார் அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர். நிக்கி என்ற பெயருடைய அந்த 33 வயது பெண், பிராணிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க அவற்றுடன் பேசும் கலையை 2 ஆண்டுகளுக்கு முன் கற்றதாக கூறுகிறார். தற்போது ஒரு மணி நேர கவுன்சிலுக்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார் இவர். தங்களது செல்லப்பிராணிகளின் மன அழுத்தத்தை போக்க நினைக்கும் … Read more

பழங்கால மனிதர், மலம், மலம் கண்டுபிடிப்பு, உணவுப் பழக்கம்| Dinamalar

இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள ஸ்டோன்ஹென்ஜ் அகழ்வாய்வு பகுதியில் பழங்கால மனிதர்களின் பதப்படுத்தப்பட்ட மலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களது உணவுப் பழக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுமார் 4,500 அண்டுகளுக்கு முன்னர் நியோலிதிக் காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் மக்கள் விவசாயம், வணிகம் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வாழ்ந்துவந்தனர். அப்போது இங்கிலாந்தில் வசித்த பழங்குடி மக்கள் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடி வந்தனர். அவர்கள் தங்களது மலத்தையும் அவர்கள் வளர்த்துவந்த காவல் நாய்களின் மலத்தையும் தங்கள் வசிப்பிடங்களில் பதப்படுத்தி … Read more

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ராக்கெட் லாஞ்சர்களை வழங்க பிரிட்டன் முடிவு.!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நீடித்துவரும் நிலையில், எம் 270 ரக ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. 80 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது இந்த ராக்கெட் லாஞ்சர்கள். ரஷ்யாவின் தாக்குதலை திறம்பட எதிர்கொள்ள இந்த தளவாடங்கள் உக்ரைன் நண்பர்களுக்கு மிகவும் உதவும் என்று லண்டனில் பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்தார். Source link

இது மிதக்காது.. பறக்கும்.. உலகின் முதல் பறக்கும் மின்சார படகை அறிமுகப்படுத்திய கனடா.!

மாசு ஏற்படுத்தாத உலகின் முதல் பறக்கும் மின்சார வாடகை படகை கனடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புகைவெளியிடாத, ஒலி எழுப்பாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நவீன படகில் ஆறு பேர் பயணிக்க முடியும். அதி வேகத்தில் செல்லும் போது இந்த படகு தண்ணீரில் படாமல் மேலெழும்பி செல்வதால் பயணிகள் பறக்கும் அனுபவத்தை பெற முடியும். Source link

பெய்ஜிங்கில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு : இயல்பு நிலை திரும்புகிறது..!!

பெய்ஜிங், சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்ததாக கூறப்பட்டது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததால் அங்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஷாங்காயில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் … Read more

Imran Khan: இம்ரான் கான் கைது செய்யப்படுவார் – உள்துறை அமைச்சர் தகவல்!

பாதுகாப்பு ஜாமின் முடிந்ததும் இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்து உள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், ஆளும் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்த போராட்டங்களின் போது வன்முறையை தூண்டியதாக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் ஜாமின் கோரி பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் தரப்பில் … Read more

‘வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்’ – தென் கொரியா அதிபர் கவலை

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்கள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலையை எட்டியுள்ளதாக தென்கொரியா அதிபர் யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார். வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய பிறகு இன்று காலை சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். Source link

நைஜீரியாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் பலி

ஓவோ, நைஜீரியா நாட்டின் வடமேற்குப் பகுதி ஒண்டோ மாநிலத்தில் உள்ள ஓவோவில் செயின்ட் பிரான்சிஸ் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று பெந்தகோஸ்தே ஞாயிறு பிரார்த்தனை நடைபெற்றது. அதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்று வழிபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தேவாலயத்துக்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 50 பலர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் … Read more