அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றம்.!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் 19 குழந்தைகள் சுட்டுக் கொலை செய்தது அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  அதன்படி, 21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மனநல ஆலோசனைக்காகவும், பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க கீழவையான பிரதிநிதிகள் அவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அதிபர் பைடன் கையெழுத்திட்டப்பிறகு சட்டமாக அமலுக்கு வரும். Source link

செலவை குறைக்க 300 பேர் வேலையை காலி செய்த நெட்பிளிக்ஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் குறைந்து வருவதால், அதன் வருமானம் குறைவதாக கூறி 300 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. உலகின் முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ், பல பிரபலமான திரைப்படங்கள், தொடர்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக அமேசான், வால்ட்டிஸ்னி போன்ற பல நிறுவனங்களும் இருந்துவருவதால், சந்தையில் தன்னை நிலைநிறுத்துக்கொள்ள நெட்பிளிக்ஸ் தடுமாறுகிறது. இதனால் சமீபகாலமாக சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் என்ன செய்வது என்று … Read more

ஆப்கன் நிலநடுக்கத்தால் உடைமைகளை இழந்த மக்கள் – நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் அம்மக்களுக்கான உதவியை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் பூமியில் 51 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது, … Read more

கொரோனா தடுப்பூசிகளால் ஓராண்டில் 2 கோடி உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது – ஆய்வறிக்கை!

கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வருடத்தில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மொத்தம் 185 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் இல்லையென்றால் சுமார் 3 கோடி பேருக்கும் மேல் உயிரிழந்திருக்க கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

தரையிறங்கும் போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ள ராணுவ சரக்கு விமானம்.. 4 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் ரியாசான் நகருக்கு அருகே இராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும் போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். Ilyushin Il-76 என்ற சரக்கு விமானத்தில் மொத்தமாக 9 பேர் பயணித்துள்ளனர். ரியாசான் பகுதியில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் தீப்பற்றியதில் அதில் சிக்கி 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானத்தின் என்ஜின் கோளாறால் இந்த விபத்து நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு.!

இஸ்ரேலில் உள்ள நெகேவ் பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்கள் கிறித்தவ மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருப்பதை வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பெடோயின் அரபு பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ரஹாட் நகரத்தில் நெகேவ் பாலைவனம் அமைந்துள்ளது. Source link

வேலைப்பளு, ஊதியக் குறைவு காரணமாக விமானிகள் வேலைநிறுத்தம்..40,000 பயணிகள் கடும் அவதி

வேலைப் பளு, ஊதியக் குறைவு காரணமாக பிரசெல்ஸ் ஏர்லைன்ஸ் விமானிகள், விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெல்ஜியத்தில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனாவுக்கு பின் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஊழியர்கள் பற்றாக்குறையால் வேலைப்பளு அதிகரித்துள்ளதாகவும் அதற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை என பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாளுக்கு மேலாக போராட்டம் தொடர்வதால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளகினர். Source link

உயிரிழந்த கணவர் மூலம் 2 வருடங்கள் கழித்து குழந்தை! கணவரே பிறந்ததாக கொண்டாடும் பெண்!

இங்கிலாந்து லிவர்பூலில் வசித்து வருகிறார் லூரான். இவரது கணவர் ஜெரிஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சமயத்தில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள இந்த ஜோடி திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. அப்போது ஜெரிஷ்க்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை சென்று பரிசோதித்த போது அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனலிக்காமல் அவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்தார். மேலும் … Read more

வெனிசுலாவில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி.!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். லியர்ஜெட் 55சி என்ற தனியார் விமானம் வெனிசுலா தலைநகர் Caracas நோக்கி சென்ற போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிக்னல் துண்டிப்பதற்கு 29 நிமிடங்கள் முன் வரை விமானம் வானில் பறந்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 4 பயணிகள் உள்பட 6 பேர் விமானத்தில் பயணித்துள்ளனர்.    Source link

Monkeypox virus: குரங்கு காய்ச்சலை Pandemic என்று குறிப்பிதிட்ட WHN

கொரோனா வைரஸுடன் குரங்கு காய்ச்சலும் தொடர்ந்து வருகிறது. இந்த ஆபத்தான வைரஸ் உலகம் முழுவதும் 58 நாடுகளில் பரவியுள்ளது மற்றும் இதுவரை சுமார் 3,417 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் பதிவாகி உள்ளன. இதற்கிடையில், உலக சுகாதார நெட்வொர்க் இதை ஒரு பாண்டமிக் என்று அறிவித்துள்ளது. ஒரு அறிக்கையின் படி இந்த குரங்கு காய்ச்சலின் பரவல் பல கண்டங்களில் வேகமாகப் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் குரங்கு காய்ச்சலை ஒரு தொற்றுநோயாக (பாண்டமிக்) அறிவிப்பதன் நோக்கம், அதனால் ஏற்படும் … Read more