இலங்கையில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுமென அதிகாரிகள் எச்சரிக்கை.!

இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி நிலவும் இலங்கைக்கு கப்பல் மூலம் ஏப்ரல் முதல் இந்தியாவில் இருந்து எரிபொருள் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் எரிபொருள் நிரப்பிய கடைசிக் கப்பல் வரும் 16ம் தேதி இலங்கை சென்றடைய உள்ளது. இந்த சூழலில், இலங்கையில் டாலர் கையிருப்பிற்கு பற்றாக்குறை நிலவுவதால், மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக … Read more

மேற்கத்திய நாடுகளில் எகிறிய எண்ணெய் விலை.. ரஷ்யாவுக்கு ஒரு நாளைக்கு 80 கோடி டாலர் வருவாய்.!

மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளால் கச்சா எண்ணெய் விலை 50 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளதால் தங்களுக்குப் பெருமளவு இலாபம் கிடைத்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எண்ணெய் எரிவாயு விற்பனை மூலம் ரஷ்யாவுக்கு ஒரு நாளைக்கு 80 கோடி டாலர் வருவாய் கிடைப்பதால், இந்த ஆண்டில் விற்பனை 28 ஆயிரத்து 500 கோடி டாலர் என்னும் அளவை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 20 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. Source link

மாறி மாறி ஏவுகணை பரிசோதனை… கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்!

உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி, அவ்வபோது ஏவுகணை பரிசோதனை மேற்கொள்வதை வடகொரியா வழக்கமாக கொண்டுள்ளது. சில தினங்களுக்கு முன் ஒரே நாளில் 8 ஏவுகணை பரிசோதனை செய்து, தென்கொரியாவை மட்டுமன்றி, அந்நாட்டுடன் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவுக்கும் வடகொரியா அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்தது. இதனையடுத்து, அதன் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா 8 ஏவுகணைகளை சோதனை … Read more

ஜப்பான், அமெரிக்காவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கத் தைவான் நிறுவனம் திட்டம்.!

வாகனங்கள், செல்பேசிகள், மின்னணுக் கருவிகள், கணினிகள் என அனைத்துக்கும் செமிகண்டக்டர் சிப் தேவைப்படுகிறது. உலக நானோ சிப் சந்தையில் 84 விழுக்காட்டைத் தைவானும், 7 புள்ளி 6 விழுக்காட்டைச் சீனாவும் கொண்டுள்ளன. உக்ரைனை ரஷ்யா முற்றுகையிட்டதுபோல், தைவானைச் சீனா முற்றுகையிட்டால் செமிகண்டக்டர் வழங்கல் தடைபட்டு, உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். இத்தகைய காரணங்களால் 860 கோடி டாலர் மதிப்பீட்டில் ஜப்பானிலும், 1200 கோடி டாலர் மதிப்பீட்டில் அமெரிக்காவிலும் செமிகண்டக்டர் தயாரிப்புத் தொழிற்சாலைகளை அமைக்க டிஎஸ்எம்சி திட்டமிட்டுள்ளது. … Read more

போரிஸ் ஜான்சன் பதவி நீடிக்குமா?: பார்லி.யில் நம்பிக்கை வாக்கெடுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. பிரிட்டன் பிரதமராக 2019 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். 2020ல் கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு சட்டத்தை மீறி மே மாதம், லண்டனின் பிரதமரின் அலுவலக இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் நடத்தினர். இதற்கு கண்டனம் எழுந்ததால், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார். … Read more

கத்தார் தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு..!

கத்தார் சென்றுள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தோஹாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். முன்னதாக கத்தார் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கையா நாயுடு வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். Source link

60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் வேலையை துறந்து விட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார் அமெரிக்க பெண்

ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் வேலையை துறந்து விட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார் அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர். நிக்கி என்ற பெயருடைய அந்த 33 வயது பெண், பிராணிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க அவற்றுடன் பேசும் கலையை 2 ஆண்டுகளுக்கு முன் கற்றதாக கூறுகிறார். தற்போது ஒரு மணி நேர கவுன்சிலுக்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார் இவர். தங்களது செல்லப்பிராணிகளின் மன அழுத்தத்தை போக்க நினைக்கும் … Read more

பழங்கால மனிதர், மலம், மலம் கண்டுபிடிப்பு, உணவுப் பழக்கம்| Dinamalar

இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள ஸ்டோன்ஹென்ஜ் அகழ்வாய்வு பகுதியில் பழங்கால மனிதர்களின் பதப்படுத்தப்பட்ட மலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களது உணவுப் பழக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுமார் 4,500 அண்டுகளுக்கு முன்னர் நியோலிதிக் காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் மக்கள் விவசாயம், வணிகம் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வாழ்ந்துவந்தனர். அப்போது இங்கிலாந்தில் வசித்த பழங்குடி மக்கள் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடி வந்தனர். அவர்கள் தங்களது மலத்தையும் அவர்கள் வளர்த்துவந்த காவல் நாய்களின் மலத்தையும் தங்கள் வசிப்பிடங்களில் பதப்படுத்தி … Read more