பெரு நாட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்.. கண்ணீர் புகை வீசி கலைத்த போலீசார்..!

தென் அமெரிக்க நாடான பெருவில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர். உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், பெரு உள்ளிட்ட பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை விலை ஏற்றம் கண்டுள்ளன. இந்நிலையில், தலைநகர் லிமாவில் ஒன்றிணைந்த மக்கள், அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பதவி விலகுமாறு பதாகைகளை ஏந்திக் கொண்டு பேரணியாக … Read more

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு சிக்கல்; பணமோசடி வழக்கில் கைது செய்ய புலனாய்வு அமைப்பு கோர்ட்டில் முறையீடு!

இஸ்லாமாபாத், பணமோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகனை கைது செய்ய பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு (எப் ஐ ஏ) கோரியுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியது. இதனையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், பல நூறு கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை கைது செய்ய புலனாய்வு அமைப்பு அனுமதி கோரியுள்ளது. முந்தைய இம்ரான்கான் … Read more

மவுண்ட் புலூசன் எரிமலை வெடித்துச்சிதறல்.. 4 கி.மீ சுற்றுப்பரப்பில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்..!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு தெற்கே உள்ள மவுண்ட் புலூசன் எரிமலை வெடித்துச்சிதறி வருகிறது. பல அடி உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறி வரும் நிலையில் முதல் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதுடன் எரிமலையை சுற்றி 4 கிலோமீட்டர் சுற்றுப்பரப்பிற்குள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிலாவுக்கு தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த எரிமலை அந்நாட்டில் உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. Source link

இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்படுவதாக பரவிய தகவலால் பாகிஸ்தானில் பரபரப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியது. இதனையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்லாமாபாத் போலீசாா் கூறுகையில், பாகிஸ்தானின் தலைநகா் இஸ்லாமாத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான், பானி காலா பகுதிக்கு வருவார் என கூறப்படுவதை அடுத்து அந்த பகுதியில் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவா் அங்கு வருவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இம்ரான்கானுக்கு சட்டப்படி என்ன பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமோ அது … Read more

Sri Lanka Crisis: பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள்; நெஞ்சை உருக்கும் அவல நிலை

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் விபச்சாரத்தின் பாதையை தேர்ந்தெடுப்பதாக ஊடக அறிக்கை ஒன்றன் மூலம் தெரியவந்துள்ளது. தி டெலிகிராப் நாளிதழில் வெளியான செய்தியின்படி, நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் பெண்கள் பாலியல் தொழிலுக்கும் விபச்சாரத்துக்கும் தள்ளப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இலங்கை நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உணவு, பானம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட மக்கள் கைக்கு எட்டாமல் , அதன் விலைகள் விண்ணை தொடும் நிலையில் உள்ளது. பணவீக்கம் தினம் தினம் புதிய … Read more

சுவிட்சர்லாந்தில் பிறந்த ஆமைக்குஞ்சு ஒன்றுக்கு அல்பினிசம் எனப்படும் உடல் வெளிறிப்போதல் நோய்..!

சுவிட்சர்லாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த மே மாதத்தில் பிறந்த காலபெகோஸ் ஜெயண்ட் வகை ஆமைக்குஞ்சு ஒன்று அல்ஃபினிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. உடன் பிறந்த மற்ற ஆமைக்குஞ்சுகளின் நிறத்துடன் ஒத்துப்போகாமல் அதன் உடல் மிகவும் வெளிறிப்போயிருப்பதுடன், அதன் கண்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன. 50 கிராம் மட்டுமே எடை கொண்ட அந்த ஆமை ஒருவரது உள்ளங்கை அளவிலேயே உள்ளது. ஆனால் அது பலவீனமாக இல்லை என்றும், 200 வருடங்கள் வரை வாழும் என்றும் பூங்கா மேலாளர் தாமஸ் … Read more

வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு-450 பேர் காயம்

டாக்கா, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் முக்கிய கடல் துறைமுகமான சிட்டகாங் பகுதி வெளியே 40 கி.மீ தொலைவில் சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட சுமார் 450 பேர் … Read more

வங்கதேசத்தில் தனியார் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலி, 450-க்கும் அதிகமானோர் காயம்

டாக்கா: வங்கதேசத்தின் சீதகுண்டா பகுதியில் உள்ள கப்பல் கண்டெய்னர் டிப்போ ஒன்றில் நேற்று (சனிக்கிழமை) இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 25 பேர் உயிரிழந்தனர். 450-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வங்கதேசத்தின் சிட்டகாங்கின் சீதகுண்டா உபாசிலாவின் கடம்ராசூல் பகுதியில் உள்ள பிஎம் கண்டெய்னர் டிப்போவில் நேற்று இரவு 9 மணிக்கு தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சிட்டகாங் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் போலீஸ் அவுட்போஸ்ட் காவல்ஆய்வாளர் நூருல் ஆலன் கூறுகையில், “தீ விபத்து குறித்த … Read more

வடகொரியா மீண்டும் 8 குறுகிய தூர ஏவுகணை சோதனை – ஜப்பான் பிரதமர் கண்டனம்..!

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். சமீபத்தில் வடிகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை நடத்திய நிலையில் இன்று மீண்டும் 8 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. Source link

அல்பேனியாவின் புதிய ஜனாதிபதியாக ராணுவ தலைமை அதிகாரி தேர்வு!

டிரானா(அல்பேனியா), அல்பேனியாவின் புதிய ஜனாதிபதியாக அல்பேனியா ஆயுதப்படையின் (ஏஏஎப்) தலைமைப் பணியாளர் பதவி வகித்த பஜ்ராம் பெகாஜ் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் உள்ள அல்பேனியா ஒரு சிறிய நாடு ஆகும். மூன்று சுற்று வாக்கெடுப்பில் வேட்பாளர்கள் யாரும் பரிந்துரைக்கப்படாததை அடுத்து, அல்பேனியாவின் பாராளுமன்றம் நாட்டின் புதிய ஜனாதிபதியாக உயர் இராணுவ அதிகாரி பெகாஜை தேர்ந்தெடுத்தது. பெகாஜ் ஜூலை 2020 முதல் ராணுவத்தின் தலைமை அதிகாரியாக இருந்து வருகிறார். ஆளும் இடதுசாரி சோசலிஸ்ட் கட்சி, … Read more