விசித்திர சம்பவம்: தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்

பாங்காக் : தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்து உள்ளார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் ஒன்று, அந்த மனிதரின் தொண்டைக்குள் விழுந்துள்ளது. 5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்து முன்னேறி உள்ளது. ஆனால், குறுகலான பகுதியில் அதனால் வெளியே வர … Read more

துப்பாக்கி கலாச்சாரம் குறித்து அதிபர் ஜோ பைடன் கவலை.. துப்பாக்கி வாங்கும் வயது வரம்பை 21 ஆக உயர்த்த நடவடிக்கை..!

துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை 18 லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அண்மையில் 18 வயது இளைஞன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி கலாச்சாரம் வளர்வது குறித்து கவலை தெரிவித்த ஜோ பைடன், துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வாங்குவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும், அது முடியாவிட்டால் சிறுவர்களைப் பாதுகாக்க அதன் வயது வரம்பையாவது உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். பள்ளிக்கோ … Read more

தேர்தல் அறிவிக்காவிட்டால் பாகிஸ்தான் உள்நாட்டுப்போரை நோக்கி செல்லும்: இம்ரான்கான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத் கிரிக்கெட் நட்சத்திரமாக இருந்து அரசியல்களத்தில் குதித்து, பாகிஸ்தான் தெஹரிக் இ இன்சாப் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, பாகிஸ்தானின் பிரதமராக உயர்ந்தவர் இம்ரான்கான் (வயது 69). ஆனால் அந்த நாட்டில் எந்தவொரு பிரதமரும் முழுமையாக 5 ஆண்டு காலம் பதவியில் தொடர்ந்தது இல்லை என்ற வரலாறு, இம்ரான்கானுக்கும் சொந்தமானது. அவருடைய ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர். இதனால் அந்த நாட்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் … Read more

100-வது நாளை எட்டியது ரஷ்ய தாக்குதல்: உக்ரைனிலிருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 100 நாட்கள் எட்டிய நிலையில், உக்ரைனிலிருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறிவிட்டனர். நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாடு மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தாக்குலை தொடங்கியது. தற்போது இந்த போர் 100 நாட்களை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் சீர்குலைந்து ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது. ரஷ்ய தாக்குதல் தொடங்கியதில் இருந்தே, அந்நாட்டு மக்கள் பாதுகாப்பு தேடி அண்டை … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.30 உயர்வு.. திடீர் விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய விலை உயர்வால் பெட்ரோல் 209.86 பாக். ரூபாய்க்கும், டீசல் 204.15 பாக். ரூபாய்க்கும் விற்கப்படுகிறது Source link

இலங்கைக்கு உரம் வழங்க பிரதமர் மோடி உறுதி: கோத்தபய ராஜபக்சே

கொழும்பு : பொருளாதார நெருக்கடியால் தத்தளித்து வரும் இலங்கையில் விவசாயமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இயற்கை விவசாயத்துக்காக வேதி உரங்களின் இறக்குமதிக்கு கடந்த ஆண்டு அரசு தடை விதித்ததால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் நெல், தேயிலை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் 50 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இதனால் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியும், விளைச்சல் இழப்பும் நீடித்தால் ஆகஸ்டு மாதத்தில் நாடு மிகப்பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்கும் என வேளாண் … Read more

இலங்கைக்கு உரம் சப்ளை: பிரதமர் மோடி உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையின் வேளாண் பாதிப்பை தடுக்க, பிரதமர் மோடி உரம் சப்ளை செய்ய உறுதி அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை, உர இறக்குமதிக்கு தடை விதித்ததால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதன் காரணமாக நெல் சாகுபடி குறைந்து உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, இலங்கை அரசு இந்தியாவிடம் உரம் வழங்கும்படி கோரிக்கை … Read more

நேட்டோ தலைவருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் சந்திப்பு..!

உக்ரைன் போர் நிலவரம் குறித்து நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டால்டன் பெர்க்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர்  ஆலோசனை நடத்தினர். இந்தப் போரால் இதர நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு நீடிக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாட்ரிட்டில் இம்மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நேட்டோ மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நேட்டோ அமைப்பில் இணைய பின்லாந்தும் ஸ்வீடனும் விண்ணப்பித்துள்ளதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் … Read more

ரஷ்யப் போரின் 100வது நாள்: 20 சதவீத உக்ரைனை ஆக்ரமித்த ரஷ்யா

உக்ரைனின் ‘சுமார் 20 சதவீதத்தை’ ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதல் 100வது நாளை எட்டியுள்ளது. இந்த ரஷ்ய படையெடுப்பிற்கு இதுவரை எந்தவித தீர்வோ, முடிவோ எட்டப்படவில்லை.  ரஷ்யப் படைகள் பல முனைகளில் உக்ரைனின் நகரங்களைத் தாக்கி வருகின்றன. இருந்தாலும், உக்ரைனின் இராணுவம் மற்றும் குடிமக்களின் ஆக்ரோஷமான எதிர்ப்பால் ரஷ்ய ராணுவம் எதிர்பார்த்த அளவு முன்னேற்றத்தை அடையமுடியவில்லை.  இந்த நிலையில், ரஷ்யா, உக்ரைனின் … Read more

இந்திய எழுத்தாளருக்கு பிரிட்டன் ராணியின் கவுரவம்| Dinamalar

லண்டன்:பிரிட்டன் ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றதன், 70ம் ஆண்டையொட்டி நடைபெறும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, 40 பேருக்கு கவுரவ பட்டம் வழங்கப்பட உள்ளது. இதில், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு உயர் கவுரவ பட்டம் வழங்கப்பட உள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இரண்டாம் எலிசபெத், 96, பதவியேற்று, 70 ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, பிரிட்டன் அரண்மனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவை பூர்வீகமாக உடைய 40 பேருக்கு … Read more