ரஷ்ய ராணுவத்தின் Ka-52 வகை ஹெலிகாப்டர் சாகச முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து.!

ரஷ்ய ராணுவத்தின் Ka-52 வகை ஹெலிகாப்டர் சாகச முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாக இருந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. உக்ரைன் லுகான்ஸ்க் பகுதியில் வேவு பணியில் ஈடுபட்ட இரு Ka-52 வகை ஹெலிகாபடர்களின் பைலட்டுகள், சுற்றியிருந்த பொது மக்களிடையே ஹெலிகாப்டர்களின் அம்சங்களை எடுத்துக் காட்ட சாகச முயற்சியில் ஈடுபட்டனர். பக்கவாட்டில் சாயந்து பறந்த ஒரு ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ இருந்தது. விமானியின் துரித நடவடிக்கையால் விபத்தில் இருந்து ஹெலிகாபடர் … Read more

ஆஸ்திரேலிய கடலில் உலகின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த அபூர்வமான தாவரத்தை கண்டுபிடித்தனர். மரபணுக் கருவிகளை பயன்படுத்தி ஷார்க் விரிகுடாவில் உள்ள கடற்புல்வெளிகளின் பன்முகத்தன்மையை அறிந்துகொள்ள முயன்றபோது, 180 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த தாவரத்தை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். இந்த கடற்புல் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.42 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 33 லட்சத்து 67 ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே … Read more

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி; மர்ம நபர் தற்கொலை

அமெரிக்காவில் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அகல்வதற்குள் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள டுஸ்லா எனுமிடத்தில் உள்ள மருத்துவமனையில் தான் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இது குறித்து டுஸ்லா காவல்துறை துணை தலைவர் எரிக் டல்க்லேஷ் கூறுகையில், இந்த துப்பாக்கிச் சூட்டில் … Read more

அமெரிக்காவில் காருக்கு அடியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி.!

அமெரிக்கா தெற்கு கரோலினாவில் சாலையில் சென்ற இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கடற்கரை சாலையில் சென்ற இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் மோதிய கார், வாகனத்தின் மீது ஏறியது. இதில் டுவீலரின் பின்னால் அமர்ந்திருந்தவர் அருகில் வீசப்பட்ட நிலையில், வாகன ஓட்டி காரின் அடியில் சிக்கிக் கொண்டார். அருகில் இருந்தவர்களின் துரித நடவடிக்கையால் வாகன ஓட்டி லேசான … Read more

வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா மந்திரி சபையில் 13 பெண்கள்

கான்பெர்ரா : ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்து முடிந்த பொது தேர்தலில் ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆளும் தாராளவாத கட்சியை வீழ்த்தி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இந்த நிலையில் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான புதிய மந்திரிசபை நேற்று பதவி ஏற்றது. தலைநகர் கான்பெர்ராவில் உள்ள அரசு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் புதிய மந்திரிகள் 30 பேருக்கு கவர்னர் … Read more

உயிர் கொல்லும் ரசாயன ஆயுதம்ஐ.நா.,வில் இந்தியா எச்சரிக்கை| Dinamalar

நியூயார்க்:உயிர் கொல்லும் ரசாயனங்களை பயங்கரவாதிகள் பேரழிவு ஆயுதங்களாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா எச்சரித்து உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அணு ஆயுதங்கள், ரசாயனம், வைரஸ்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பேரழிவு ஆயுதங்களின் பரவலை தடுக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதில் ஐ.நா.,விற்கான இந்திய துாதரக குழு ஆலோசகர் அமர்நாத் பேசியதாவது: பயங்கரவாதிகள், உள்நாட்டு போராளிகள் உள்ளிட்டோருக்கு பேரழிவு ஆயுதங்களை தயாரிப்பதற்கான … Read more

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்- 4 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீஜிங், தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரித்தது. பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகி உள்ளது. 17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. … Read more

டென்மார்க்கிற்கு எரிவாயு கட் : ரஷ்யா அதிரடி நடவடிக்கை| Dinamalar

கோபன்ஹேகன் : பின்லாந்து, போலந்து, பல்கேரியாவைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டிற்கும் இயற்கை எரிவாயு சப்ளையை ரஷ்யா நிறுத்தியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதனால், டாலருக்கு பதிலாக, ரஷ்யா அதன் ரூபிள் கரன்சி வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது. இதையடுத்து, ‘ஐரோப்பிய நாடுகள் இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான தொகையை, ரூபிள் கரன்சியில் செலுத்த வேண்டும்’ என, ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார்.ஐரோப்பிய நாடுகள், … Read more

அமெரிக்கா மருத்துவமனையில் நடத்திய துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி.. கொலையாளியை சுட்டு வீழ்த்திய போலீசார்..!

அமெரிக்கா ஒக்லஹோமா மாகாணத்தில் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.  5 மாடி கட்டிட மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் கொலையாளி கொல்லப்பட்டார். தம்பதி உள்பட 4 பேர் சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மருத்துவமனையின் ஒவ்வொரு அறையிலும் சோதனையில் ஈடுபடும் போலீசார் வேறேதும் கொலையாளிகள் உள்ளனரா என்றும் காயமடைந்தவர்களை மீட்டும் வருகின்றனர். Source … Read more