சவுதியில் ரூ. 38 லட்சம் கோடியில் இரட்டை கோபுரங்கள்| Dinamalar

ரியாத்: சவுதி அரேபியாவில், 38.5 லட்சம் கோடி ரூபாய் செலவில், உலகின் மிக நீண்ட இரட்டை கோபுரங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவசரசராக முகமது பின் சல்மான் உள்ளார். உலகிலேயே மிக நீளமான கட்டடங்கள் கட்ட வேண்டும் என்பது, இவரது விருப்பம்.‘ஸ்கை ஸ்ராப்பர்ஸ்’ என அழைக்கப்படும், வானுயுர கோபுரங்கள், விண்ணை நோக்கி செங்குத்தாக கட்டப்படுவது வழக்கம். ஆனால், சவுதியில் புதிய முயற்சியாக வானுயுர இரட்டை கோபுரத்தை, பூமியில் நீளவாக்கில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. … Read more

கத்தியுடன் வந்த பெண்துப்பாக்கியால் சுட்டுக் கொலை| Dinamalar

ஜெருசலம்:பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதியில் கத்தியுடன் வந்த பெண்ணை இஸ்ரேல் ராணுவ வீரர் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. சமீபத்தில் ‘அல் ஜசீரா டிவி’யின், பாலஸ்தீன பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லெ சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இரு தரப்பிலும் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனியர்களின் தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில், … Read more

எலிசபெத் ராணி பவள விழாபிளாஸ்டிக் சேலை தயாரிப்பு| Dinamalar

லண்டன்:பிரிட்டன் ராணி எலிசபெத்தின் பவள விழாவை முன்னிட்டு இந்திய கலாசாரப் பின்னணியில் ‘பிளாஸ்டிக்’ சேலை உருவாக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி எலிசபெத் முடிசூட்டி, 70 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்களுக்கு பிரமாண்ட விழா, கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.முப்படையினரின் ராணுவ அணிவகுப்பு, பங்கிங்ஹாம் அரண்மனையில் இசை, நடனம் உட்பட ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதி நாளில் பிரமாண்ட பேரணி நடக்க உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். … Read more

இலங்கைக்கு இந்தியா மேலும், 4 கோடி கிலோ டீசலை நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ளது| Dinamalar

அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் கட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அந்நாடு சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா இந்தாண்டு மட்டும், 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, மார்ச், ஏப்ரல் மாதங்களில், 40 கோடி கிலோ பெட்ரோலிய பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து மே, 23ல், 4 கோடி கிலோ பெட்ரோல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம், மேலும் … Read more

உக்ரைனுக்கு நவீன ராக்கெட் : அமெரிக்கா ஒப்புதல்| Dinamalar

வாஷிங்டன் :ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு நவீன தொழில்நுட்பத்திலான நடுத்தர ராக்கெட்டுகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், பீரங்கி எதிர்ப்பு தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்க பார்லி., ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் உக்ரைனின் மிக முக்கியமான டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக ஏவுகணை … Read more

தீக்குளித்த நபர் அருகே நின்று “செல்பி” எடுக்க முயற்சி

துருக்கி நாட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் அருகே நின்று சிலர் செல்பி எடுக்க முயன்றனர். இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கலாட்டா கோபுரத்தின் எதிரே நீண்ட நேரமாக ஒருவர் அரிவாள் மற்றும் பெட்ரோல் கேனுடன் சுற்றித் திரிந்துள்ளார். விரக்தியுடன் அலைந்த அந்த நபர் திடீரென தீக்குளித்தார். அப்போது சிலர் அவர் அருகே நின்று செல்பி எடுக்க முயன்றனர். தீ அணைப்பான்கள் மூலம் நெருப்பு அணைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source … Read more

பள்ளிப் புத்தகங்களில் ஆபாச ஓவியங்கள்;சீனாவில் சர்ச்சை

சீனாவில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், கணிதப்பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஓவியங்களுக்கு பெற்றோர்களிடையேயும், நிபுணர்கள் இடையேயும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த பாடப்புத்தகங்களில் உள்ள ஓவியங்களில் சில ஓவியங்கள், சிறுவர்கள், சிறுமிகளின் உடையைப் பிடித்து இழுப்பது போலவும், ஆபாச சைகைகளை காண்பிப்பது போலவும் அமைந்துள்ளன. அதே போன்று, குழந்தைகள் சிறிய கண்கள், அகன்ற நெற்றியுடன் இருப்பது போன்ற ஓவியங்கள் உருவகேலியையும், இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து … Read more

சீனா அச்சுறுத்தல்.. தைவானில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

உக்ரைன் – ரஷ்யா போர், அண்டை நாடான சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக தைவானில் ஏராளமானோர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக போர் திறன் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போரை விரும்பவில்லை என்று தெரிவிக்கும் அவர்கள் எதற்கும் தயாராக இருக்க பயிற்சி பெறுவதாக தெரிவித்துள்ளனர் Source link

ப்ளீஸ் அட்வைஸ்: ஜெசிண்டா அர்டர்னிடம் யோசனை கேட்ட ஜோ பைடன்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 25ஆம் தேதி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் சிக்கி 19 குழந்தைகள் குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள் என மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூரச் செயலை செய்த 18 வயதான இளைஞர் சால்வடர் ராமோஸ் என்பவர், பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 10 … Read more

பிரேசிலில் டிரக் விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்.!

பிரேசிலில் டிரக் விபத்தில் இருந்து இளைஞர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மரகானா நகரில் சென்ற டிரக்கின் பின் பகுதி மரத்தில் தட்டி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடத் தொடங்கியது. சாலையோரம் நின்ற இளைஞர் மீது டிரக் மோத இருந்த நிலையில், அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் விலகி உயிர் தப்பினார். இணையத்தில் தற்போது வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Source link