நெதர்லாந்துக்கு கேஸ் விநியோகம் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு

நெதர்லாந்துக்கு வழங்கிவந்த கேஸ் விநியோகத்தை ரஷ்யா இன்றுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. நெதர்லாந்தின் எரிசக்தி நிறுவனமான GasTerra கேஸ் விலையை ரஷ்ய நாணயமான ரூபிளில் செலுத்த மறுத்ததால் எரிவாயு வினியோகத்தை ரஷ்யா நிறுத்துகிறது. ஏப்ரல் மாதத்திற்கான பணத்தை இன்றுவரை GasTerra வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள ரஷ்யாவின் Gazprom நிறுவனம், இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள கேஸ் விநியோகத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.  Source link

'3 ஆண்டுகள் மட்டுமே புடின் உயிருடன் இருப்பார்' – உளவுத்துறை ஷாக்!

புற்றுநோய் முற்றி விட்டதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வாழலாம் என்று மருத்துவர்கள் கணித்துள்ளதாக உளவாளி கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. இதுவரை எதையுமே ரஷ்ய அரசு தரப்பு உறுதி செய்யவில்லை. அண்மையில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் முற்றி விட்டதால் அறுவை சிகிச்சை செய்யப் போகிறார். அதனால், அவர் தனது அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் … Read more

போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினம்.. மரக்கன்று நட்டு துக்கம் அனுசரித்த அதிபர் ஜோ பைடன்..!

அமெரிக்காவில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். பைடன் உட்பட அனைவரும் மண்வெட்டியால் மண்ணை வாரி குழியில் போட்டு மங்கோலியா மரக்கன்றை நட்டுவைத்த பின்னர், கைகளை கோர்த்து நின்று பிரார்த்தனை செய்தனர். முன்னதாக ஆர்லிங்டனில் உள்ள வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பைடன் அஞ்சலி … Read more

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி; கை விரித்த வெளிநாட்டு வங்கிகள்

பாகிஸ்தான் எரிபொருள் நெருக்கடி: பாகிஸ்தானில் கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் எரிபொருள் சப்ளை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு வங்கிகள் கடன் கொடுக்க முடியாது என அதிர்ச்சி கொடுத்துள்ளன. அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலைகளும் சாமான்யர்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.  இதற்கிடையில் தற்போது, எரிபொருள் விலை விண்ணை தொட்டுள்ள நிலையில்,  பெட்ரோல் டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், … Read more

எகிப்தில் அகழ் வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களை வெளியிட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.!

எகிப்து தலைநகர் கெய்ரோவின் சக்காரா நெக்ரோபோலிஸில் பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏப்ரல் 2018-ல் நடந்த அகழ்வராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 250 சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள், 150 பழங்கால கடவுள்கள், தெய்வங்களின் வெண்கல சிலைகள் பிற தொல்பொருட்களை பொது மக்கள் பார்வைக்காக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.  Source link

வாழைப்பழத்தை வெறுக்கும் ஆண் எலிகள்; ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்

ஆண் சுண்டெலிகள் வாழைப்பழத்தை வெறுக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இருப்பினும், பெண் எலிக்கு வாழ்ப்பழத்தின் மீது வெறுப்பு ஒன்றும் இல்லை. கியூபெக்கின் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆச்சர்மான விஷயத்தை ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர்.  விஞ்ஞானிகள் நடத்திய அய்வு ஒன்றில், வாழைப்பழத்தின் வாசனை ஆண் சுண்டெலிகளுக்கு பிடிக்காது என்பது தெரிய வந்தது. இதற்கான காரணம் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் அளித்துள்ளனர். வாழைப்பழத்தைப் பார்த்தவுடன் எலிகள் ஏன் ஓடுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வோம். ஆண் … Read more

ஷாங்காய் நகரம் நாளை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என அறிவிப்பு

கொரோனா தொற்றால் முடக்கப்பட்டுள்ள சீனாவின் ஷாங்காய் நகரம் நாளை முதல் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரத்தில் நாளை முதல் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் முழுமையாக தொடங்கும் என துணை மேயர் சோங் மிங் தெரிவித்துள்ளார். அதிக ஆபத்துள்ள பகுதிகள் மற்றும் தொற்று கட்டுப்பாடுகள் உள்ள இடங்களை தவிர மற்ற பகுதிகளில் வாடகை கார் சேவைகள் மற்றும் ஆன்லைன் வர்த்தகங்கள் செயல்படும் என்றும், ஷாங்காய் நகரில் உள்நாட்டு விமான … Read more

சிறிய விமானம் கரடுமுடனான நிலப்பரப்பில் விழுந்து விபத்து.. விமானத்தில் பயணித்த 4 பேர் சடலமாக மீட்பு..!

குரோஷியா நாட்டில் சிறிய விமானம், கரடுமுரடான நிலப்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ப்லிட் நகரத்தில் இருந்து ஜெர்மனி நோக்கி புறப்பட்ட செஸ்னா நிறுவனத்தின் விமானம் திடீரென மாயமானது. அந்த விமானத்தின் ரேடார் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில், ஜாக்ரெப் பகுதிக்கு தெற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 4 பேரும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக இந்த … Read more

சரிவுப்பாதையில் சீன மக்கள் தொகை: குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத மக்கள்

பீஜிங் : மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் சீனா இருக்கிறது. உலக மக்கள்தொகையில் 6-ல் ஒரு பங்கு சீனாவில்தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு சீன மக்கள்தொகை 66 கோடியாக இருந்தது. தற்போது 140 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 1959 முதல் 1961-ம் ஆண்டு வரை பஞ்சம் காரணமாக சீன மக்கள்தொகை குறைந்தது. அதன் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டு மக்கள்தொகை சரிவுப்பாதையில் செல்ல தொடங்கி உள்ளது. சீனாவின் தேசிய புள்ளியியல் பிரிவின் கணக்குப்படி, சீன … Read more

அமெரிக்க துப்பாக்கிச்சூடு எதிரொலி: கனடாவில் கை துப்பாக்கிகளுக்கு வருகிறது தடை

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, கனடாவில் கை துப்பாக்கிக்கள் வைதிருப்பதற்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் டியூடெர்ட் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “ கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமையில் தேசிய முடக்கத்தை அமல்படுத்துவதற்கான சட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இது தொடர்பாக மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இனி கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது. கைதுப்பாக்கி களுக்கான சந்தையை நாங்கள் … Read more