ஒரே நாளில் பெண் உள்பட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்: அதிர்ச்சி ரிப்போர்ட்
டெஹ்ரான்: ஒரே நாளில் பெண் உள்பட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தைப் பெற்றுள்ளது ஈரான் அரசு. இந்தத் தண்டனை பற்றி அரசோ, உள்ளூர் ஊடகங்களோ எதுவும் சொல்லாத நிலையில், நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு Iran Human Rights (IHR) இத்ததகவலை உலகின் பார்வைக்குக் கொண்டுவந்துள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 12 பேரும் ஈரானின் மதச் சிறுபான்மையினரான பாலுச் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more