ஜப்பான் கடல்பகுதியில் பறந்த சீனா- ரஷ்யா ஜெட் விமானங்கள்.. வழக்கமான ரோந்து பயிற்சிதான் என்று சீனா விளக்கம்..!

குவாட் மாநாடு நேற்று நடைபெற்றபோது, ஜப்பான் விமானப் பரப்பு அருகே கடல் மீது திடீரென சீனா மற்றும் ரஷ்யாவின் போர் விமானங்கள் வட்டமிட்டன. இது வழக்கமான ரோந்துப் பணிதான் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் கடல்பகுதி, கிழக்கு சீனா கடல் பகுதி மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதி ஆகியவற்றில் ரோந்து நடந்ததாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு ஜப்பான் தனது ஜெட் விமானங்களைத் தயார் நிலையில் வைக்க நேர்ந்தது. இதே போல் சீனாவின் … Read more

'குரங்கு காய்ச்சல்' கொரோனா போல பெருந்தொற்றாக பரவுமா?

உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம். காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கும் … Read more

மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா: தென் கொரியா தகவல்

சியோல், வடகொரியா அதன் கிழக்கு கடற்கரையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஜப்பானின் கடலோரக் காவல்படையும் வடகொரியா ஏவுகணையை ஏவியதாக சந்தேகிக்கிறது. தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, வட கொரியா இன்று அதன் கிழக்கு கடற்கரையில் குறிப்பிடப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று சியோலின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர். தினத்தந்தி Related Tags : வடகொரியா ஏவுகணை North Korea missile

அமெரிக்கா: டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 18 குழந்தைகள் உட்பட 20 பேர் கொலை

அமெரிக்காவில் மீண்டும் ஒரு பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தக் கொடூரச் செயலை செய்த நபர் 18 வயது மதிக்கத்தக்க நபர் ஆகும். மேலும் இந்த நபர் … Read more

படுகொலை முயற்சியிலிருந்து தப்பினார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் – உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவல்

கீவ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை படுகொலை செய்யும் முயற்சி கடந்த, பிப்ரவரி 24-ம் தேதிக்குப் பின் காகாசஸ் என்ற பகுதியில் நடந்ததாக உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் கிரிலோ புடாநவ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இணைய உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாட்டு மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. இருதரப்பினர் இடையே சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து வதந்திகளும் வெளியாகின்றன. அவர் … Read more

விமானநிலையத்தில் வசித்த 15ஆயிரம் தேனீக்கள்.. நிபுணர் குழு உதவியுடன் கூண்டோடு அகற்றம்..!

அமெரிக்காவின் Louisiana மாகாணத்தில் அமைந்துள்ள விமானநிலையத்தில் இருந்து 15ஆயிரம் தேனீக்கள் கூண்டோடு அகற்றப்பட்டது.  New Orleans விமானநிலையத்தில் விமானங்களில் சரக்கு ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் பயன்படுத்தும் உபகரணங்களில் சுமார் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்கள் கூடு கட்டி இருந்து வந்துள்ளன. இதனால் அந்த பொருட்களை கையாள்வதில் சிரம ம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தேனீ அகற்றும் நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தேனீக்கள் யாவும் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. Source link

மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு தஞ்சம் அளிக்கிறதா?

கொழும்பு, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி விலகினார். அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். அதனால் சில நாட்கள், கடற்படை முகாமில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்த அவர், வெளியே தலைகாட்டாமல் இருந்தார். சமீபத்தில் நாடாளுமன்றத்துக்கு வந்தார். இதற்கிடையே, மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நஷீத், மாலத்தீவில் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாலத்தீவு பத்திரிகையில் வெளியான தகவலை மேற்கோள் காட்டி, இலங்கை பத்திரிகை … Read more

அமெரிக்கா: டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 18 குழந்தைகள் உட்பட 20 பேர் கொலை

டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தக் கொடூரச் செயலை செய்த நபர் 18 வயது மதிக்கத்தக்க நபர் என்பதும், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் கவர்னர் கிரெக் அபோட் … Read more

இலங்கையின் பணவீக்கம் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்று ரணில் விக்ரம்சிங்கே எச்சரிக்கை

இலங்கையின் பணவீக்கம் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே எச்சரித்துள்ளார். பெட்ரோல் டீசல் உள்பட அடிப்படை தேவைகளை இறக்குமதி செய்ய அந்நியச் செலாவணி போதாமல் தடுமாறும் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது.  மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததையடுத்து புதிய பிரதமராக பொறுப்பு ஏற்றுள்ள ரணில் விக்ரம்சிங்கே அமைச்சரவையில் இன்னும் நிதியமைச்சர் யாரும் நியமிக்கப்படவில்லை. சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளுடன் இலங்கையின்  நெருக்கடிக்குத் தீர்வுகாண நிதி உதவி கோரி யார் பேச்சுவார்த்தை நடத்துவார் … Read more

#லைவ் அப்டேட்ஸ்: மரியுபோல் நகரில் 200 உடல்கள் கண்டெடுப்பு

Live Updates 25 May 2022 12:04 AM GMT ஜெலன்ஸ்கிக்கு செல்வாக்கு உக்ரைனில் ரஷியாவசம் போய்விட்ட கெர்சன் நகரில் ரஷிய மொழி அரசு மொழியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பள்ளி, பல்கலைக்கழகங்களில் ரஷிய மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படும். ஆனால் பெற்றோர்கள் வேண்டுகோளின்பேரில் உக்ரைனிய மொழியிலும் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் உலக அளவில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பிரபலமாகி வருகிறார். அவர், அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை … Read more