இந்தோ- பசிபிக் பகுதியில் அமைதியை உறுதி செய்த குவாட் அமைப்பு: பிரதமர் மோடி

டோக்கியோ, இந்தியா, அமெரிக்கா, அஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் ஒன்றினைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாகியுள்ளன. இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றனர். குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்பது இது 2-வது முறையாகும். அதன்படி, இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ … Read more

உக்ரைன் – ரஷ்யா போர் உலகளாவிய பிரச்சனை.. ரஷ்யா போர் தொடுப்பால் மனித பேரழிவு ஏற்பட்டுள்ளது – அதிபர் ஜோ பைடன்!

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் உலகளாவிய பிரச்சனை எனக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தோ – பசிபிக் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் பொறுப்பை ஏற்று வழிநடத்தும் என தெரிவித்தார். குவாட் உச்சி மாநாட்டில் பேசிய பைடன், ஜனநாயகத்திற்கும், எதேச்சதிகாரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டினார். ரஷ்யா, உக்ரைன் உடனான போரை தொடரும் வரை  இந்தோ-பசிபிக் நாடுகள் உலகளவில் பொறுப்புகளை ஏற்று வழிநடத்தும் என குறிப்பிட்டார். ரஷ்யாவின் போர் நடவடிக்கை மனித பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், அப்பாவி … Read more

இலங்கையில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450

அண்மையில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வு, எரிபொருல் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக, தீவிரமடைந்த மக்கள் போராட்ட்டத்தை ஒடுக்கும் வகையில், ஆட்சி ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கினர். அதனை தொடர்ந்து வன்மூறை தீவிரமடைந்து  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்களின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதையடுத்து மஹிந்தா ராஜபக்‌ஷே பதவி விலகி, அங்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றத்தில் ரனில் விக்ரமசிங்க பிரதமரானார்.  ஆனால், அவர் ராஜபக்சே … Read more

நீரில் மூழ்கிய ஹோண்டுராஸ் அகதிகள் படகு… கரை ஒதுங்கிய அகதிகளின் சடலங்கள்.!

மெக்சிகோ வளைகுடாவில் அமைந்துள்ள வெராக்ரூஸ் மாகாணத்தில் 3 அகதிகளின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் மெக்சிகோ நோக்கி வந்த ஹோண்டுராஸ் அகதிகள் படகு நீரில் மூழ்கியதையடுத்து அந்த சடலங்கள் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயது குழந்தை உட்பட 4 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டு அவர்களுக்கு கடற்கரையில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 4 பேர் மாயமாகி இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளதையடுத்து அவர்களை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். Source link

நரேந்திர மோடியை பாராட்டிய ஜோ பைடன் – என்ன காரணம்?

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், ஜனநாயக முறையில் இந்தியா வெற்றிகரமாக கையாண்டதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டுத் தெரிவித்து உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மக்களுக்கு இடையிலான உறவுகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை … Read more

சுமார் 8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத பறக்கும் ஊர்வனையின் புதைபடிவம் கண்டுபிடிப்பு.!

எட்டரை கோடி ஆண்டுகளுக்கு முன், டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறக்கும் ஊர்வன ஒன்றின் புதைபடிவ எச்சங்கள் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அண்டிஸ் மலைப்பகுதியில் டெரோசர் என்றழைக்கப்படும் இந்த பறக்கும் ஊர்வன இனத்தின் புதைபடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பறவைகள் தோன்றுவதற்கு முன், பூமியில் பறந்து திரிந்த இந்த 30 அடி நீள ராட்சத ஊர்வனைக்கு, மரணத்தை ஏற்படுத்தும் டிராகன் என்பதை குறிக்கும் விதமாக தனடோஸ்-டிராகன் என பெயரிடப்பட்டுள்ளது. Source link

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: தாம்ப்சனை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வெற்றி..!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நோவாக் ஜோகோவிக், ரபேல் நடால் ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றனர். ஜப்பானின் யொஷிஹிடோ நிஷிஒகாவை 6-க்கு 3, 6-க்கு 1, 6-க்கு பூஜ்ஜியம் என்ற நேர் செட்களில் ஜோகோவிக் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்சனை 6-க்கு 2, 6-க்கு 2, 6-க்கு 2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார். மகளிர் ஆட்டத்தில், இகா சிவியடெக், அமண்டா ஆகியோர் … Read more

தைவான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் சீன ராணுவம்- அதிபர் ஜின்பிங் பேசிய ஆடியோவால் பரபரப்பு

பீஜிங்: தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருகிறது. தைவானை அச்சுறுத்தும் விதமாக அந்நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து வருகின்றன. தென்சீன கடல் பகுதியில் சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தேவை ஏற்பட்டால் தைவான் மீது ராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தைவான் மீது தாக்குதல் நடத்த … Read more

இந்தியாவின் வெற்றியும், சீனாவின் தோல்வியும்…! பிரதமர் மோடியைப் பாராட்டிய ஜோ பைடன்

2-வது குவாட் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய பிரதமர் மோடி, குவாட் அமைப்பின் செயல்பாடு விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும், மிகக் குறுகிய காலத்தில் குவாட் உலகில் முக்கியமான பங்களிப்பை செய்து வருவதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது, கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்டதாக பிரதமர் மோடிக்கு … Read more

பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட நபரை ஹெலிக்காப்டர் மூலம் பத்திரமாக மீட்ட மீட்புப்படையினர்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள டாலி நகரில் 500 அடி உயரமுடைய குன்றின் நடுவே பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட நபரை ஹெலிகாப்டரில் சென்று மீட்புப்படையினர் மீட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அந்த நபர் குன்றின் நடுவே சிக்கிக்கொண்டிருந்ததை பார்த்த மீனவர் ஒருவர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற மீட்புப்படையினர் சிக்கிக்கொண்டிருந்த நபரை மீட்டு பத்திரமாக தரையிறக்கினர். அந்த நபர் பாறை இடுக்கில் எப்படி சிக்கினார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. Source … Read more