5 பேர் உயிரிழப்பு; 200 பேர் காயம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கிஉள்ளது.இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் பிரதமர் ராஜபக்சேயின் வீட்டினை தீயிட்டுக் கொளுத்தினர். அந்நாட்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர். இலங்கை எதிர்கட்சி தலைவர் … Read more

விண்வெளி நிலையத்தை இந்த ஆண்டுக்குள் முடிக்கத் திட்டம்.. கட்டுமான பொருட்கள், வீரர்களுக்கு உணவு ராக்கெட்டில் சப்ளை..!

தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கி வரும் சீனா அதற்கு தேவையான பொருட்களை Tianzhou-4 சரக்கு ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பியது. இந்த ஆண்டுக்குள் தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கி முடிக்க சீனா திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு விண்வெளி வீரர்களுக்கு தேவையான உயிர் காக்கும் கருவிகள், உணவுப் பொருட்கள், நிலைய கட்டுமான பணிக்கான உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு ஹைனான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டது. Source link

லைவ் அப்டேட்ஸ்: இன்று கொண்டாடுவதை போல இன்னும் ஒரு வெற்றி நாளை விரைவில் கொண்டாடுவோம் – அதிபர் ஜெலன்ஸ்கி

10.5.2022 04.00: இரண்டாம் உலகப்போரின் வெற்றி தினத்தையொட்டி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இரண்டாம் உலகப் போரில் நம் முன்னோர்கள் செய்ததை நாம் மறக்கமாட்டோம். இன்று கொண்டாடுவதை போல இன்னும் ஒரு வெற்றி நாளை விரைவில் கொண்டாடுவோம். அப்போது வென்றோம், இப்போதும் நாம் வெல்வோம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேக் இன் இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் மோடி; செவிசாய்க்கும் மேக்ரான்| Dinamalar

பாரிஸ்: ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி ஆதரித்துவரும் நிலையில் பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் இதனை ஏற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாராகும் பொருட்களை வாங்கி பயன்படுத்த அவர் வலியுறுத்தி வரும் நிலையில் இதனால் உள்நாட்டில் உள்ள சிறு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிக பயன் பெறுவர் என்று கூறியுள்ளார். தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் … Read more

மெக்சிகோவில் துணிகரம் – மேலும் 2 பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொலை

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டின் வெராகுருஸ் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். யெஸ்சினியா மொலிண்டோ பால்கனி, ஷீலா ஜோஹானா கார்சியா ஒலிவரா ஆகியோர் ஆன்லைன் மீடியாவில் இயக்குனர் மற்றும் நிருபராக வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.  நடப்பு ஆண்டில் பத்திரிகையாளர் மீது நடைபெற்ற 10 மற்றும் 11வது தாக்குதல் இதுவாகும். 2022-ம் ஆண்டில் மட்டும் 11 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2000 ஆண்டு முதல் தற்போதுவரை 100க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் … Read more

ஆளும் கட்சி எம்.பி. உட்பட 3 பேர் உயிரிழப்பு, பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா: இலங்கை நிலவரம் முழுவிவரம்

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட நாடு முழுவதும் நேற்று பெரும் கலவரம் வெடித்தது. இதில் ஆளும் கட்சி எம்.பி. உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று மாலை பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக உணவு வகைகள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு … Read more

லைவ் அப்டேட்ஸ் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமா ஏற்பு

10.5.2022 04.30: இலங்கையில் சமையல் கியாஸ் கையிருப்பு தீர்ந்து விட்டதால் நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. புதிய கையிருப்பு வரும் வரை கியாஸ் வினியோகம் செய்ய முடியாது என இலங்கையின் முன்னணி கியாஸ் நிறுவனமான லிட்ரோ கியாஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 00.10: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டதாக அந்நாட்டு அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இலங்கையில் மறு உத்தரவு வரும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக … Read more

ஹவானா ஓட்டல் வெடி விபத்து – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

ஹவானா: கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. 86 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இந்த ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டல் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழுந்தது. இயற்கை எரிவாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது விசாரணையில் தெரியவந்தது. சக்திவாய்ந்த வெடிவிபத்தால் ஓட்டலைச் சுற்றியுள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன. தகவலறிந்த மீட்புக்குழு அங்கு … Read more

போலந்து வெற்றிதின கொண்டாட்டம்: ரஷ்ய தூதர் மீது சிவப்பு சாயம் வீசிய போராட்டக்காரர்கள்

வார்சா: போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த ரஷ்யாவின் வெற்றிதினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய தூதர் மீது எதிர்பாளர்கள் சிவப்பு சாயம் வீசினர். இரண்டாம் உலகப்போரில் நாஜிப் படைகளுக்கு எதிராக ரஷ்யா பெற்ற வெற்றியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 9-ம் தேதியை ரஷ்யா வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. அதன்படி, போலந்து நேற்று ரஷ்யாவின் வெற்றி தினத்தை நினைவு கூறும்விதமாக வார்சாவில் உள்ள சோவியத் ராணுவ நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக போலந்துக்கான ரஷ்ய … Read more

“எந்தப் பகுதியையும் ரஷ்யாவிடம் விட்டுக்கொடுக்காமல் போரில் வெற்றி பெறுவோம்”-அதிபர் செலன்ஸ்கி

ரஷ்யா வசம் எந்த ஒரு பகுதியையும் விட்டுக்கொடுக்காமல் போரில் வெற்றி பெறுவோம் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜி படைகள், சோவியத் படைகளால் வீழ்த்தப்பட்ட தினம் உக்ரைனில் அனுசரிக்கப்பட்டது. அப்போது பேசிய செலன்ஸ்கி, உக்ரைன் மண்ணில் எதிரிகளால் தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகளை விதைக்க முடியுமே தவிர ஒருபோதும் வேரூன்ற முடியாது எனத் தெரிவித்தார். Source link