மாஜி அதிபரின் பதவி நீக்கத்துக்கு காரணமான குப்தா சகோதரர்கள் கைது| Dinamalar

துபாய்:தென்னாப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி நீக்கத்துக்கு காரணமாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர்களான ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா ஆகியோர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கைது செய்யப்பட்டனர்.உத்தர பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா, அஜய் குப்தா மூவரும் தென்னாப்ரிக்காவில் ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.கடந்த, 2009ல் தென்னாப்ரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஜூமா பதவியேற்றார். அவருடன் குப்தா சகோதரர்களுக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது. … Read more

ரூ.115 கோடி இழப்பீடு பெற்ற நடிகர்| Dinamalar

லண்டன்:முன்னாள் மனைவி மீதான அவதுாறு வழக்கில், 115 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற, ‘ஹாலிவுட்’ நடிகர் ஜானி டெப், அதை கொண்டாடும் விதமாக பிரிட்டனில் உள்ள இந்திய உணவகத்தில் தன் நண்பர்களுக்கு, 48 லட்சம் ரூபாய் செலவு செய்து விருந்தளித்தார்.ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், 58, தன் முன்னாள் மனைவியும், நடிகையுமான ஆம்பர் ஹேர்ட், 36, மீது அவதுாறு வழக்கு பதிவு செய்தார். இதன் விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வந்தது. பரபரப்பான … Read more

தந்தை பலி: தாய்க்கு தண்டனை| Dinamalar

ஆர்லண்டோ:அமெரிக்காவில், இரண்டு வயது குழந்தை, தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில், அஜாக்கிரதையாக இருந்த தாய் குற்றவாளி என, நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருக்கும் ஆர்லண்டோ நகரைச் சேர்ந்தவர் ரெக்கி மப்ரி, 26. இவர் ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரின் இரண்டு வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.இந்த வழக்கில் துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல் குழந்தையின் கைக்கு கிடைக்கும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் ரெக்கி மப்ரியின் மனைவி, அயலா கைது செய்யப்பட்டார்.அவர் மீது, … Read more

டொமினிக்கன் அமைச்சர்சுட்டுக் கொலை| Dinamalar

சான்டோ டொமிங்கோ:வட அமெரிக்காவில், கரீபிய கடல் தீவு நாடான டொமினிக்கன் குடியரசின் அதிபராக லுாயிஸ் அபினாடர் உள்ளார்.இவரது அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராக ஆர்லாண்டோ ஜார்கே மெரா, 55, பதவி வகித்து வந்தார். இவர் முன்னாள் அதிபர் சால்வதோர் ஜார்கே பிளாங்கோவின் மகன். இவரது சகோதரி, துணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மகன், எம்.பி.,யாக உள்ளார். செல்வாக்கு மிகுந்த அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஜார்கே, தன் நெருங்கிய நண்பரான பவுஸ்டோ மிகேல், 57, … Read more

முன்னாள் அதிபரின் பதவி நீக்கத்துக்கு காரணமான குப்தா சகோதரர்கள் கைது

துபாய்:தென்னாப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி நீக்கத்துக்கு காரணமாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர்களான ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா ஆகியோர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கைது செய்யப்பட்டனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா, அஜய் குப்தா மூவரும் தென்னாப்ரிக்காவில் ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.கடந்த, 2009ல் தென்னாப்ரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஜூமா பதவியேற்றார். அவருடன் குப்தா சகோதரர்களுக்கு நெருக்கமான உறவு … Read more

கைக்கு எட்டிய துப்பாக்கி.. தவறுதலாகத் தந்தையை சுட்டுக் கொன்ற 2 வயது மகன்.. தாய் கைது.!

அமெரிக்காவில், 2 வயது சிறுவன் ஒருவன் தன் தந்தையை தவறுதலாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மியாமி நகரில் வசித்து வந்த ரெக்கி மாப்ரி என்பவர் கணிணியில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்த போது அவரது பையில் இருந்த கை துப்பாக்கியை விளையாட்டாக எடுத்து அவரது 2 வயது மகன் சுட்டுள்ளான். முதுகில் தோட்டா பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தைக்கு துப்பாக்கி கிட்டும் வகையில் … Read more

என்ன ஒரு ஆனந்தம்… விவகாரத்து வெற்றியை விருந்து வைத்து கொண்டாடிய நடிகர் ஜானி டெப்… பல லட்சங்களை அளித்து மகிழ்ச்சி..!

முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட்டிற்கு எதிரான வழக்கில் பெற்ற வெற்றியை கொண்டாடிய நடிகர் ஜானி டெப், இங்கிலாந்தில் உள்ள இந்திய உணவகத்தில் 48 லட்ச ரூபாயை செலவழித்து விருந்து வைத்துள்ளார். பர்மிங்ஹாமில் உள்ள வாரணாசி என்ற அந்த உணவகத்தில், 21 நண்பர்களுடன் உணவருந்திய அவர், இந்திய உணவுகளை சாப்பிட்டதுடன் மது வகைகளையும் அருந்தியதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 3 மணி நேரத்திற்கு மேல் உணவகத்தில் செலவிட்டதுடன், உணவை பார்சலும் வாங்கிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு உணவு பரிமாறியவர்களுக்கு … Read more

தமிழில் பேசிய அமெரிக்கருக்கு கிடைத்தது இலவச உணவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இந்திய உணவகம் ஒன்றில் தமிழில் ‘ஆர்டர்’ கொடுத்ததால் நெகிழ்ந்துபோன உரிமையாளர், அவருக்கு இலவசமாக உணவு வழங்கியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில், ஸியோமா என்பவர் உணவுகளை ருசித்து, அதை ‘யு டியூப்’ வலைதளத்தில் பதிவேற்றி வருகிறார். இவர், சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள ஒரு இந்திய உணவகத்திற்குச் சென்று தமிழில் உணவுகளின் பெயரைக் குறிப்பிட்டு எடுத்து வரச் சொல்லியுள்ளார். அமெரிக்கர் ஒருவர் … Read more

தவறான திசையில் செல்லும் தாலிபான் அரசு.. சர்வதேச சமூகம் உணர்த்த வேண்டும்.. ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு.!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு தவறான திசையில் செல்வதாகவும் இதனை சர்வதேச சமூகம் சொல்ல வேண்டும் என்றும் ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாலிபான்களால் தங்கள் அரசாங்கம் தூக்கி எறியப்பட்டது ஆப்கானிஸ்தான் மக்களின் தவறு அல்ல என்றும், ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான பேரழிவு உருவாகி இருப்பதாகவும் எச்சரித்தார்.  Source link