மழையில் ஒழுகும்லட்ச ரூபாய் குடை| Dinamalar

பீஜிங்-சீனாவில், 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படும் ‘குசி – அடிடாஸ் பிராண்டு’ குடையில் மழை நீர் ஒழுகுவதாக வெளியான செய்தியை, 14 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் படித்துள்ளனர். இத்தாலியைச் சேர்ந்த குசி நிறுவனம், விலையுயர்ந்த கைப்பைகள், ஆயத்த ஆடைகள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறது.அதுபோல ஜெர்மனியைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், உடைகள் விற்பனையில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், குசி மற்றும் அடிடாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் … Read more

பகாவனே… கொரோனா… குரங்கு அம்மை… இதுக்கெல்லாம் ஒரு என்டே கிடையாதா?

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வந்த உலக நாடுகள், சில மாதங்களுக்கு முன்பிருந்துதான் அதன் தாக்கத்தில் இருந்துதான்மெல்ல மெல்ல விடுப்பட்டு வருகின்றன. இதனால், மாதக்கணக்கில் பொதுமுடக்கம், ஊரடங்கு என்று இன்னல்களை அனுப்பவித்து வந்த உலக மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், உலக மக்களின் துக்கத்தை கெடுக்கு்ம் விதமாக மற்றொரு வைரஸ் நோய் தற்போது பரவ தொடங்கியுள்ளது. பிரிட்டனில் கடந்த வாரம் குரங்ரு அம்மை எனும் வைரஸ் தொற்று நோய் … Read more

உக்ரைனை வீழ்த்த வல்லமை படைத்த கூடிய அதிசிய ஆயுதத்தை ரஷ்யா தேடி வருகிறது – செலன்ஸ்கி கிண்டல்

உக்ரைன் படைகளை வீழ்த்தும் வல்லமை படைத்த அதிசய ஆயுதத்தை ரஷ்யா தேடி வருவதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கிண்டலடித்துள்ளார். 5 கிலோமீட்டர் தொலைவிலேயே உக்ரைன் நாட்டு டிரோன்களை சுட்டெரிக்கும்  லேசர் ஆயுதங்களையும், பூமியில் இருந்து 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயற்கைகோள்களை கூட கண்காணிக்க விடாமல் செய்யக்கூடிய பெரஸ்வெட் (Peresvet) என்ற வான் தடுப்பு அமைப்பையும் களமிறக்கி உள்ளதாக ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவ் (Yury Borisov) தெரிவித்திருந்தார். இந்நிலையில், தோல்வி பயத்தில் ரஷ்யா இவ்வாறு … Read more

பாமாயில் ஏற்றுமதி தடை நீக்கம்இந்தோனேஷியா அறிவிப்பு| Dinamalar

ஜாகர்தா,-இந்தோனேஷிய அரசு, 23ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உள்ளதாக அறிவித்துஉள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, பாமாயில் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் உள்நாட்டில் பாமாயில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மாதம் அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து பனை விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் பாமாயில் கையிருப்பு உச்சத்தை எட்டியுள்ளது. அடுத்த 10 நாட்களில் தேவைக்கு மேல் பாமாயில் உற்பத்தியாகி, … Read more

ஒரே நாளில் ஒரே சமயத்தில் ஆண் குழந்தைகளை பெற்ற இரட்டை சகோதரிகள்..

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில்  ஒரே மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. Jill Justiniani  மற்றும் Erin Cheplak பெயர் கொண்ட அந்த இரட்டை சகோதரிகள் ஒன்றாக கருவுற்ற நிலையில் பிரசவத்திற்காக ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் ஒரே நாளில் பிரசவ வலி ஏற்பட்டதால் ஒரே சமயத்தில் மருத்துவர்களால் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது இருவருக்கும் ஒரே சமயத்தில் இரு அழகான ஆண்குழந்தைகள் பிறந்தன. இரு குழந்தைகளும் தலா … Read more

பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தோனேஷியா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகர்தா: பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை வரும் 23ல் இருந்து விலக்கிக் கொள்வதாக இந்தோனேஷியா அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28 ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்தார். இதன் காரணமாக அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் பாமாயில் விலை உயர்ந்தது. உலக அளவில் பாமாயில் ஏற்றுமதியில் இந்தோனேஷியா முதலிடத்தில் உள்ளது. அரசின் முடிவின் காரணமாக பாதிப்பு அடைந்த … Read more

உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள அமெரிக்க தூதரகம், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிப்பு.!

உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள அமெரிக்க தூதரகம், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. கீவ் நகரம் மீதான தாக்குதலை ரஷ்யா சில வாரங்களாக நிறுத்தியிருப்பதால் தூதரகம் மீண்டும் செயல்படவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். கீவ்-வுக்கு திரும்பும் ஊழியர்களின் பாதுகாப்பை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Source link

உலகில் ஒரு கோடி பேர் உணவின்றி தவிக்கும் அபாயம்: ஐ.நா.,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: உலகில் ஒரு கோடி பேர் உணவின்றி தவிக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடர்ந்து 3 மாத காலமாக நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்பு அடைந்துள்ளது. ‘போரின் காரணமாக வரும் காலத்தில் உலகில் ஒரு கோடி பேர் உணவின்றி தவிக்கும் அபாயம் உள்ளது. … Read more

அமெரிக்கா | டாப்ஸ் சூப்பர் மார்க்கெட்டும், திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலும்!

“எங்கள் விசாரணையிலிருந்து உங்களுக்கு ஒன்றை நான் தெளிவாக கூறுகிறேன்… இது வெறுப்பினால் நடத்தப்பட்ட குற்றம், இனரீதியாக தூண்டப்பட்ட தீவிரவாத செயல்” – டாப்ஸ் சூப்பர் மார்க்கெட் துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்க எப்பிஐ (FBI) இயக்குநர் கிறிஸ்டோபர் செய்தியாளர்களிடம் கூறியது. கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் நடந்த அந்த பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டினால் கருப்பின அமெரிக்கர்கள் பெரும் பதற்றதிற்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாகி இருக்கிறார்கள். ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு பின் நடந்த போராட்டங்கள் அமெரிக்காவில் நிலவும் இன வெறி … Read more

போரின் போது முதியவரை கொலை செய்த ரஷ்ய வீரர்… உக்ரைன் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்..

உக்ரைன் போரில் முதியவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ரஷ்ய வீரர், கீவ் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். வாடிம் ஷிஷிமரின் என்ற 21 வயதான ரஷ்ய வீரர், வடகிழக்கு உக்ரைனிய கிராமமான சுபாகிவ்காவில் (Chupakhivka) போர் புரிந்த போது 62 வயதான முதியவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் கீவ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்தவரின் மனைவியிடம் மன்னிப்புக் கோரிய ரஷ்ய வீரர், தான் செய்த அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக் கொள்வதாக கூறினார். படையெடுப்பின் போது மக்களுக்கு எதிரான … Read more