சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்ஷு நகரில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பிஜீங் உள்ளிட்ட பல இடங்களில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. சீனாவில் கொரோனா பரவல் காரணமாக அங்கு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டு … Read more

உக்ரைன் மரியுபோல் நகரில் கடும் சண்டை – உருக்கு ஆலையை தகர்த்தது ரஷ்யா

கீவ்: உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நேற்று 71-வது நாளாக நீடித்தது. உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ரஷ்யா அறிவித்தது. எனினும் அந்த நகரில் உள்ள உருக்கு ஆலையில் சுமார் 2,000 உக்ரைன் வீரர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒரு நகரத்துக்கு ஒப்பான இந்த ஆலையின் கீழ் பல அடுக்கு பதுங்கு குழிகள் உள்ளன. உக்ரைன் வீரர்களோடு 1,000 அப்பாவி மக்களும் சிக்கியுள்ளனர். ஐ.நா. சபையின் தீவிர முயற்சியால் … Read more

உக்ரைன் – ரஷ்யா போர்: நோயாளிகளுக்கு மருந்து வழங்க முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர் – அதிபர் செலன்ஸ்கி!

போரால் உக்ரைனின் மருத்துவகட்டமைப்பு சேதமடைந்துள்ளதால், அறுவை சிகிச்சை செய்யமுடியாமலும், கேன்சர் நோயாளிகளுக்கு மருந்து வழங்க முடியாமலும் மருத்துவர்கள் தவித்து வருவதாக அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்காக, இங்கிலாந்தில் நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கானொளி மூலம் பேசிய செலன்ஸ்கி, ரஷ்ய தாக்குதலால் 400க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். தற்போது போர் உக்கிரமாக நடைபெற்று வரும் கிழக்கு உக்ரைனில் சாதாரண மருந்து மாத்திரைகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். Source link

கரோனா தொற்று தடுப்பு பெயரில் சீனாவில் மனித உரிமை மீறல்கள்: சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரல்

பெய்ஜிங்: சீனாவில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில், மக்களை அடித்து துன்புறுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சீனாவில் தற்போது கரானா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஷாங்காய், தலைநகர் பெய்ஜிங்கில் அதிகளவில் தொற்று பரவி உள்ளது. இந்நிலையில், தொடக்கம் முதலே கரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் திட்டம் என்ற பெயரில் சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது ஷாங்காயில் ஏராளமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், கரோனா தடுப்பு மையம்(தனிமைப்படுத்துதல்) என்ற … Read more

சாங்ஷா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரில் கடந்த வாரம் 8 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்ததாக  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளில் இருந்து 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Source link

ஐரோப்பிய தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய அன்பு பரிசுகள்

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்துவருகிறது. இக்கட்டான சூழ்நிலையில் ரஷ்யாவுடனான நட்பை முறிக்காமல், அதேநேரம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்படாமல் இந்தியா திறம்பட காய்களை நகர்த்தி வருகிறது. இந்த சூழலில் ஐரோப்பா உடனான வர்த்தக, பாதுகாப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். … Read more

சுழன்று சுழன்று அடிக்கும் சூறாவளிக் காற்று…வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் கடந்த மாதம் 29ந்தேதி வீசிய சூறாவளிக் காற்றின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. Andover சிட்டி ஹாலில் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் சூறாவளிக் காற்று சுழன்று அடிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்றாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. Source link

'உலக மக்களின் நலனுக்காக ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும்' – ஐ.நா. பொதுச் செயலாளர் அறிவுறுத்தல்

உலக மக்களின் நலனுக்காக ரஷ்யா உடனடியாக உக்ரைனுடனான போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இதன் விளைவாக உலகம் முழுவதும் எரிபொருள் விலையேற்றம், சமையல் எண்ணெய் தட்டுப்பாடு, கோதுமை தட்டுப்பாடு இன்னும் பிற வர்த்தக, பொருளாதார சிக்கல்கள் உருவாகியுள்ளன. ரஷ்ய கோதுமை இறக்குமதியை நம்பியிருந்த ஏற்கெனவே வறுமையில் வாடும் எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் பல … Read more

பிலிப்பைன்ஸ் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அதிகபட்சமாக ரிக்டர் அளவு கோளில் 6 ஆக பதிவு..!

பிலிப்பைன்ஸ் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரைப்பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது. மிண்டனாவ் தீவு அருகே உள்ள மாகாணங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக, தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. டெக்டோனிக் நிலநடுக்கம் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆனால், … Read more

அமெரிக்காவில் பயணத்தின்போது முககவசம் அணிய வேண்டும்: நோய் கட்டுப்பாடு அமைப்பு பரிந்துரை

வாஷிங்டன் : அமெரிக்காவில் விமானங்கள், பஸ்கள், ரெயில்கள், இன்ன பிற போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கிறபோது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை கோர்ட்டு சமீபத்தில் ரத்து செய்தது. இந்த நிலையிலும், இது போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கிறபோது பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிதல் வேண்டும் என்று அரசு அமைப்பான சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து அந்த மையத்தின் இயக்குனர் ரோச்செல் வாலன்ஸ்கி விடுத்துள்ள அறிக்கையில், … Read more