மரியுபோலில் இருந்து 344 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்பு – அதிபர் ஜெலென்ஸ்கி உரை.!
மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட 300க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் சபோரிஜியா நகருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் உள்ள அஸோவ்ஸ்டால் உருக்காலையில் பதுங்கி இருந்த 344 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அங்கு மேலும் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்கப்பட்டவர்கள் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருக்கும் சபோரிஜியா நகருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் நாட்டு மக்களிடம் நிகழ்த்திய உரையில் … Read more