சீனாவில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவியது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க மிகத்தீவிரமான ஊரடங்கு கடுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக … Read more

நடுரோட்டில் போலீஸ்காரர்களை அடித்து உதைத்த சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாத் தலமான டியு -வில் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்த சில சுற்றுலாப் பயணிகள் போலீசாருடன் மோதினர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் அடித்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட பலருக்கும் காயம் ஏற்பட்டது போலீசார் மோதலில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் Source link

நல்ல மனிதனின் கையில் துப்பாக்கியை கொடுங்கள்- முன்னாள் அதிபர் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த மே 25-ஆம் தேதி துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாகி கலாச்சாரத்திற்கு … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.23 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 15 லட்சத்து 22 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே … Read more

ஏலியன்களால் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலா… அரசுடன் கைகோர்க்கும் NASA

பல ஆண்டு காலமாகவே விஞ்ஞானிகள் பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிரினங்கள் எதுவும் வாழ்கின்றதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  ஏலியன்கள் இருப்பதாக அடிக்கடி சில செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.  சில இடங்களில் UFO எனப்படும் பறக்கும் தட்டை பார்த்ததாகவும் பல செய்திகள் இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கிறது.  இது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஏலியன்கள் பற்றி ஆய்வுகளை செய்துகொண்டே தான் இருக்கின்றனர். இந்நிலையில், UFO-க்களைத் தேடும் பணியில் அமெரிக்க அரசாங்கக் குழுவுடன் இணைவதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது. … Read more

ஒரு லட்ச ரூபாய்க்காக திருமண வயது வராத மகளுக்கு திருமணம்: தடுத்த மனைவியை கொன்ற கணவன்

டாடு : பாகிஸ்தானின் லக்கி ஷா சதார் பகுதியைச் சேர்ந்தவர் சுல்பிகர் ஜிஸ்கானி. இவரது மனைவி பாப்லி ஜிஸ்கானி. சுல்பிகர் ரூ. 1 லட்சத்திற்காக தனது மகள் ஹுமேராவை ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார். இதைத் தடுத்த பாப்லியை சுல்பிகர் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாப்லியின் சகோதரர் முனவ்வர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுல்பிகரை கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கெனவே, சுல்பிகர் தன்னுடைய இரண்டு மகள்களையும் இதுபோல … Read more

2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-வங்காளதேச ரெயில் சேவை தொடக்கம்

கொல்கத்தா, இந்தியா-வங்காளதேசம் இடையிலான பயணிகள் ரெயில் சேவை, கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான ரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. கொல்கத்தா ரெயில் நிலையத்தில் இருந்து வங்காளதேசத்தின் குல்னாவுக்கு பந்தன் விரைவு ரெயில் காலை 7.10 மணிக்கு கொடியசைத்து துவக்கிவைக்கப்பட்டது. கொல்கத்தா-டாக்கா இடையிலான மைத்ரி விரைவு ரெயில் சேவையும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முதல் தொடங்கியது. கொல்கத்தா-குல்னா பந்தன் விரைவு ரெயில், வாரத்தில் 2 நாட்களும், … Read more

Monkeypox: மேலும் 23 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை; WHO விடுக்கும் முக்கிய எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு (WHO) ஞாயிற்றுக்கிழமை (மே 29, 2022) குரங்கு அம்மை வைரஸ் பரவல், புதிதாக மேலும் 23  நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதுவரை மொத்தம் 257 உறுதிப்படுத்தப்பட்ட  தொற்று பாதிப்புகளும், உறுதிப்படுத்தப்படாத அறிகுறிகள் காணப்படும் 120 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியது.  குரங்கு அம்மை நோய் இப்போது உலக அளவில் ஒட்டுமொத்த பொது சுகாதாரத்திற்கு “மிதமான ஆபத்தை” உருவாக்குகிறது என்றும் WHO எச்சரித்துள்ளது. “இந்த வைரஸ், இளம் குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் போன்ற … Read more

உக்ரைனுக்கு டென்மார்க் அனுப்பிய ஹார்ப்பூன் ஏவுகணைகள்

உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல்களைத் தாக்கும் ஹார்ப்பூன் ஏவுகணைகள் வந்துள்ளன. அமெரிக்காவில் இருந்தும் ஹோவிட்சர் ஏவுதல் ஆயுதங்கள் கிடைத்துள்ள. ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போரில் இது உக்ரைனுக்கு பலம் தருவதாக இருக்கும்  என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்நிக்கோவ் தெரிவித்துள்ளார். ஹார்ப்பூன் ஏவுகணைகள் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் பயிற்சி பெற்ற உக்ரைன் வீரர்களால் அவை பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ரஷ்யாவின் ஒட்டுமொத்த கடற்படை கப்பல்களையும் மூழ்கடிக்கும் விதமாக அத்தனை ஏவுகணைகள் கிடைத்துள்ளன … Read more