Monkeypox: மேலும் 23 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை; WHO விடுக்கும் முக்கிய எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு (WHO) ஞாயிற்றுக்கிழமை (மே 29, 2022) குரங்கு அம்மை வைரஸ் பரவல், புதிதாக மேலும் 23  நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதுவரை மொத்தம் 257 உறுதிப்படுத்தப்பட்ட  தொற்று பாதிப்புகளும், உறுதிப்படுத்தப்படாத அறிகுறிகள் காணப்படும் 120 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியது.  குரங்கு அம்மை நோய் இப்போது உலக அளவில் ஒட்டுமொத்த பொது சுகாதாரத்திற்கு “மிதமான ஆபத்தை” உருவாக்குகிறது என்றும் WHO எச்சரித்துள்ளது. “இந்த வைரஸ், இளம் குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் போன்ற … Read more

உக்ரைனுக்கு டென்மார்க் அனுப்பிய ஹார்ப்பூன் ஏவுகணைகள்

உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல்களைத் தாக்கும் ஹார்ப்பூன் ஏவுகணைகள் வந்துள்ளன. அமெரிக்காவில் இருந்தும் ஹோவிட்சர் ஏவுதல் ஆயுதங்கள் கிடைத்துள்ள. ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போரில் இது உக்ரைனுக்கு பலம் தருவதாக இருக்கும்  என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்நிக்கோவ் தெரிவித்துள்ளார். ஹார்ப்பூன் ஏவுகணைகள் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் பயிற்சி பெற்ற உக்ரைன் வீரர்களால் அவை பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ரஷ்யாவின் ஒட்டுமொத்த கடற்படை கப்பல்களையும் மூழ்கடிக்கும் விதமாக அத்தனை ஏவுகணைகள் கிடைத்துள்ளன … Read more

‘ஏதாவது செய்யுங்கள்’ – ஜோ பைடனை நோக்கி கூச்சலிட்ட மக்கள்

வாஷிங்டன்: துப்பாக்கி கலாசாரம் என்பது அமெரிக்காவில் தொடர்ந்து பிரச்சனையாக இருந்து வருகிறது. பள்ளிகளில் துப்பாக்கிச்சூடுகள் நடப்பதும், அதனால் பலர் உயிரிழப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினாலும் அரசு பெரிதும் இந்த சம்பவங்களில் கவனம் செலுத்துவதில்லை. கடந்த மே 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த கொடூர இந்த … Read more

டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திக்கிறாா் – அதிபா் ஜோ பைடன்

உவால்டே, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீஸ் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திக்க உள்ளாா். தினத்தந்தி Related Tags : டெக்சாஸ் … Read more

குத்துச் சண்டை போட்டியிடையே துப்பாக்கிச் சூடு என வதந்தி.. அரங்கத்தில் அலறியடித்து ஓடிய ரசிகர்கள்.!

அமெரிக்கா நியூயார்க்கில் குத்துச் சண்டை போட்டியிடையே துப்பாக்கிச் சூடு நடப்பதாக பரவிய வதந்தியை நம்பி அலறியடித்து ஓடிய பார்வையாளர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர். குத்துச் சண்டை போட்டி முடிந்தவுடன் ரசிகர்கள் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக சிலர் கத்தியுள்ளனர். இதில் பதறிய மக்கள் உயிர் பிழைக்க அரங்கித்தில் அங்கிங்கும் ஓடத் தொடங்கினர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் காயம் அடைந்தனர். மேலும் சிலர் உயிர் தப்ப அரங்கத்தின் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தி தப்பினர். … Read more

நேபாளம் | ஆற்றில் விழுந்து நொறுங்கிய விமானம்; 4 இந்தியர்கள் உட்பட 22 பயணிகள் உயிரிழப்பு

காத்மாண்டு: காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட நேபாள விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அப்பகுதி முழுவதும் பனி படர்ந்து காணப்படுவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 4 இந்தியர்கள் உட்பட 22 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நேபாள நாட்டின் தாரா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான 9 என்ஏஇடி சிறிய ரக விமானம், தலைநகர் காத்மாண்டுவுக்கு வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள பொக்ராவில் இருந்து நேற்று காலை 9.55 மணிக்கு … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது – ஜெர்மனி, பிரான்ஸுக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று ஜெர்மனி, பிரான்ஸுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று எச்சரிக்கிறோம். இதனால் நிலைமை மோசமாகும். மனிதாபிமான பிரச்சினைகள் அதிகரிக்கும். ரஷ்யா மீது விதிக்கப்பட்ட … Read more

லைவ் அப்டேட்ஸ்: போரினால் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் ஆய்வு

30.5.2022 04.20: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். கார்கீவ் நகரத்தை சுற்றி வளைக்க முயன்று தோல்வியுற்ற பிறகு ரஷிய படைகள் சீவிரோடோனெட்ஸ்க் நகரம் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 02.40: ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நகரத்தின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தவறியதற்காக கார்கிவ் பாதுகாப்பு சேவை பிரிவு தலைவரை நீக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீவிரோடோனெட்ஸ் பகுதியில் … Read more

ரத்தப்போக்கு காய்ச்சல் ஈராக்கில் கடும் பீதி| Dinamalar

பாக்தாத் : கால்நடைகளின் மேலிருக்கும் உண்ணிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஈராக் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த காய்ச்சல், மூக்கின் வழியாக ரத்தப்போக்கு ஏற்பட்டு மரணத்தை ஏற்படுத்துவதால், ஈராக் அரசு கவலையில் ஆழ்ந்துஉள்ளது.மேற்காசிய நாடான ஈராக்கில், கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ரத்தப்போக்கு காய்ச்சல், 1979ல் முதல் முறையாக கண்டறியப்பட்டது. கால்நடைகளில் இருக்கும் உண்ணிகள் மூலமாக மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.கடும் காய்ச்சல் ஏற்படுவதுடன், உடலுக்குள்ளும் குறிப்பாக, மூக்கின் வழியாக ரத்தப்போக்கு … Read more

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

கொல்கத்தா: சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகி உள்ளது. கரோனா தொற்று காலமாக ரயில் சேவை தடைப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கிழக்கு ரயில்வே சார்பில் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வங்கதேச நாட்டிற்கு இயக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-க்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவை முடங்கி இருந்தது. இந்நிலையில், சுமார் இரண்டு … Read more