மெக்சிகோ- அயர்லாந்திலும் குரங்கம்மை பரவியது

மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 20 நாடுகளில் பரவி உள்ள குரங்கம்மையால் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மேலும் 2 நாடுகளுக்கு குரங்கம்மை பரவி உள்ளது. மெக்சிகோவில் முதன் முதலாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் நெதர்லாந்து நாட்டுக்கு சென்று வந்திருந்தார். அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் … Read more

பெர்முடா முக்கோணம் சுற்றுலா செல்வோருக்காக விளம்பரம்.. முழுப் பணத்தைத் திருப்பித் தருவதாக ஏஜன்சி உறுதி.!

பெர்முடா முக்கோணப் பகுதிக்கு சொகுசுக் கப்பலில் சுற்றுலா அழைத்துச் செல்லும் டிராவல் ஏஜன்சி ஒன்று கப்பல் மாயமாக மறைந்துவிட்டால் முழுப்பணத்தையும் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளது. வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள வரையறுக்கப்பட்டப் பகுதியான பெர்முடா முக்கோணத்தில் நிறைய விமானங்களும் கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான வாழ்நாள் சலுகையாக அந்த டிராவல் நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில், கவலைப்படாதீர்கள், இந்த பெர்முடா முக்கோணப் பயணத்தில் எதிர்பாராதவிதமாக மாயமாகி விட்டால் உங்கள் பணம் திருப்பித் … Read more

22 பேருடன் சென்ற நேபாள விமானம் மாயம்

காத்மாண்டு: பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு இன்று காலை 9.55 மணிக்கு புறப்பட்ட விமானம் மாயமாகி உள்ளது. அந்த விமானம் விபத்துக்குள்ளானதா என்ற விவரம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. தாரா ஏர் நிறுவனத்தின் 9 NAET விமானம், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள பொக்ராவிலிருந்து, வடமேற்கில் 80 கிமீ தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு காலை 9.55 மணியளவில் புறப்பட்டது. நான்கு இந்தியர்கள் உட்பட 19 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேபாள நாட்டின் விமானம் … Read more

பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். பெர்னாம்பகோ மாகணத்தில் கடந்த இரு நாட்களில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. பேரிடரில் சிக்கி 35 பேர் உயிரிழந்த நிலையில் 700-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறினர். மண் சரிவுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகளுக்கு ராணுவத்தின் உதவியை மாகாண அரசு … Read more

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பாகிஸ்தானில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் நடத்தும் மாரியம்மன் கோயில் திருவிழா

சென்னை: பாகிஸ்தான் கராச்சியில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு பாதுகாப்புடன் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழாக்களையும் அவர்கள் நடத்தி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் ஒன்றுக்கொன்று எதிரி நாடுகளாக பார்த்து வருகின்றன. காஷ்மீர் எல்லையில் நிலவும் தீவிரவாத தாக்குதல்கள் உலக நாடுகளையே அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதை இந்திய ராணுவம் தொடர்ந்து தடுத்து வருகிறது. இதில் ஏராளமான பாகிஸ்தான் தீவிரவாதிகளும், இந்திய ராணுவத்தினர் … Read more

விமான நிலையத்தில் செக்ஸ் வீடியோ ஒளிபரப்பு – பயணிகள் அதிர்ச்சி!

பிரேசில் நாட்டில் விமான நிலையத்தில் உள்ள தகவல் திரையில் ஆபாச படம் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிரேசில் நாட்டின் மிகப்பெரிய கடற்கரை நகரமான ரியோ டீ ஜெனிரோ நகரில், சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. இது, நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் நேற்று முன்தினம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது, விமான நிலையத்தில் விமானங்கள் வருகை குறித்த தகவல்களை அறிவிக்கும் திரையில் திடீரென ஆபாச … Read more

யூரோ சாம்பியன் லீக் கால்பந்து தொடர்: 14-வது முறையாக கோப்பையை தட்டிச்சென்ற ரியல் மாட்ரிட்.!

யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரை 14-வது முறையாக ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றியது. பிரான்சில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பலமிக்க இரு அணிகளும் மல்லுகட்டின. ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியர் ஆட்டத்தின் 2ஆம் பகுதியில் கோல் அடித்து அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தார். முன்னதாக மைதானத்தில் குழுமிய ரசிகர்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு, அவர்களை கலைக்க போலீசார் நடத்திய கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மற்றும் போலி டிக்கெட் பிரச்சினைகளால் ஆட்டம் தாமதாக துவக்கப்பட்டது. … Read more

Breaking: நேபாளத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பயணம் செய்த விமானம் மாயம்

நேபாளத்தில் தனியார் ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை, 22 பேருடன் காணாமல் போனதாக விமான நிறுவனம் மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிய விமானம் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காரா என்ற  இடத்திலிருந்து வடமேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு சென்று கொண்டிருந்தது. கனடாவில் கட்டமைக்கப்பட்ட ட்வின் ஓட்டர் விமானங்களை இயக்கும் தாரா ஏர் (Tara Air), அதை இயக்குகிறது. “விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஜோம்சோம் … Read more

Tara Air 9 NAET: நேபாளத்தில் விமானம் திடீர் மிஸ்ஸிங் – 22 பேருக்கு என்னாச்சு?

நேபாள நாட்டில், பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்ட விமானம் திடீரென்று மாயமாகி உள்ளது. அண்டை நாடான நேபாள நாட்டில் இருந்து, டாரா ஏர் நிறுவனத்தின் 9 NAET இரட்டை இன்ஜின் கொண்ட விமானம், 19 பயணிகளை ஏற்றிக் கொண்டு, பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நகருக்கு காலை 9:55 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில், 4 இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் மற்றும் நேபாளி குடிமக்கள், விமானிகள் உட்பட 22 பேர் இருந்தனர். விமான நிலையத்தில் செக்ஸ் வீடியோ … Read more

கிறிஸ்தவ ஆலயத்தில் கூட்ட நெரிசல் ; குழந்தைகள் உட்பட 31 பேர் பலி

நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். தென்கிழக்கு நகரமான போர்ட் ஹார்கோர்ட்டில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேவாலயத்தில் உணவு பெற வந்த நூற்றுக்கணக்கான மக்கள், சிறிய வாசல் வழியே முண்டியடித்து கொண்டு செல்ல முயன்றுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   Source … Read more