இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்த ஜமைக்கா ஆர்வம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
வெளிநாட்டில் புதிய இந்திய தொழில்நுட்பக் கழகங்களைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அதை நடத்த விருப்பம் தெரிவித்த முதல் நாடு ஜமைக்கா என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். ஜமைக்கா நாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள், புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (ஐஐஎம்) ஆகியவற்றில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் … Read more