ஜெர்மனி பயணத்தை முடித்து டென்மார்க் புறப்பட்டார் பிரதமர் மோடி

பெர்லின், இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி ஜெர்மனிக்கு சென்றார். ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்ற பிரதமர் மோடிக்கு ஜெர்மனி வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது இருநாட்டு உ … Read more

‘‘ஒரே நிறுவன பணி வேண்டாம்; இஷ்டம்போல் வேலை செய்யலாம்’’- கரோனாவுக்கு பிறகு வேகமாக பரவும் கிக் பொருளாதாரம்: முழுமையான தகவல்

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகெங்கிலும் கிக் எகானமி, கிக் வேலை முறை பெரிய அளவில் பரவ ஆரம்பித்து இருக்கிறது. தாங்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய பணியை, விரும்பிய நேரத்தில் செய்து கொள்ளும் இந்தமுறை கிக் என அழைக்கப்படுகிறது. குறைவான நேரத்தில் சரியான வருவாய் ஈட்ட முடிவதால் உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கம் இதனை நோக்கி ஆசையுடன் நகர்ந்து வருகிறது. காலை 9 முதல் மாலை 5 மணிவரை வேலைகள் என்கிற கருத்து மெல்ல உடைபடத் தொடங்கி இருக்கிறது. … Read more

உக்ரைனின் கிழக்கு பகுதிகளை இணைக்க ரஷ்யா திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு!

உக்ரைனின் கிழக்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தின. உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் படையெடுப்பு காரணமாக அந்நாட்டில் இருந்து சுமார் 5 லட்சம் … Read more

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ரம்ஜான் தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜோ பைடன், உலகெங்கிலும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு விதமான சவால்களும், சோதனைகளும் நீடிப்பதாக தெரிவித்தார். இஸ்லாமியர்களால் அமெரிக்கா நாளுக்கு நாள் வலுப்பெறுவதாக கூறிய அவர், மத நம்பிக்கைகளுக்காக யாரும் ஒடுக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாத மக்களையும் உய்குர், ரோஹிங்கிய இன மக்களையும் இந்நாளில் … Read more

இலங்கை அரசியலமைப்பில் மாற்றம் செய்ய புதிய குழு- இலங்கை அரசு நியமித்தது

கொழும்பு: இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே பதவி விலக வேண்டும் என போராடும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே பதவி விலக மாட்டேன் என உறுதியாக கூறி வருகிறார். இதையடுத்து நாளை கூடும் பாராளுமன்றத்தில் இலங்கை எதிர்க்கட்சி தலைவர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இலங்கை … Read more

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்; ஜோ பைடன்

வாஷிங்டன்,  உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ரம்ஜான் விழா சிறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகையில் ரம்ஜான் விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு அதிபர் ஜோபைடன் கூறியதாவது:-   இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் எல்லோராலும் இதை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.  பல்வேறு நாடுகளிலும் நிலவும் வறுமை, வன்முறை, நோய் பரவல் காரணமா இந்த நிலை … Read more

அரசின் BMW X5 காரை எடுத்து சென்றதாக குற்றசாட்டு; புதிய சிக்கலில் இம்ரான் கான்

பாகிஸ்தானின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அமைச்சர் மரியம் ஔரங்கசீப் ஒரு பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார். பிரதமர் பதவியை விட்டு செல்லும் போது, இம்ரான் கான் BMW X5  காரை எடுத்துச் சென்றதாகக் கூறுகிறார். BMW  அரசின் அதிகாரபூர்வ வாகனம் என்பதோடு, வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கான பிரதமர் அலுவலகத்தின் வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரத்தில் இருக்கும் பிரதமர்  மட்டுமே இந்த வாகனங்களைப் பயன்படுத்த முடியும் என்று ஔரங்கசீப் கூறியதாக டான் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த காரை … Read more

ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் அடுத்த கட்டமாக டென்மார்க் நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி..!

ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் அடுத்தகட்டமாக பிரதமர் நரேந்திர மோடி, டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகருக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் மூன்று நாள் சுற்றுப் பயணமாகச் சென்றுள்ளார். தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஷோல்சை சந்தித்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை … Read more

சனி கிரகம் அருகே இன்னொரு பூமி- மனிதர்கள் வாழ ஏற்ற தட்பவெப்பநிலை

பூமியை போல சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் மனிதர்கள் வாழும் தன்மை கொண்டதா என்ற விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகமும் ஒரு சிறிய சூரிய குடும்பம் போன்றதுதான். சனி கிரகமானது 82 நிலவுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த 82 நிலவுகளில் டைட்டன் என்பது பூமியை போலவே தோற்றம் அளிக்கிறது. இந்த டைட்டனை இன்னொரு பூமியாகவே விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்கள். ஏனென்றால் … Read more

புதிய ட்விட்டர் CEO நியமிக்க எலோன் மஸ்க் திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் ஊழியர்கள்

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும்  வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.  ட்விட்டரின் நிர்வாகத்தின் மீது மஸ்க்  தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், எலோன் மஸ்க் ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக … Read more