ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்

லண்டன்: உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25-ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச் அளவையும், 311 லிட்டர் கொள்ளவை கொண்டுள்ளது. இந்த விஸ்கிக்கு ‘தி இண்ட்ரிபிட்’ என பெயரிடப்பட்டுள்ளது. எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த பாட்டில் ஏலத்திற்கு வருகிறது. இது சாதாரண 444 சாதாரண விஸ்கி பாட்டில்களுக்கு ஒப்பான மதுவை கொண்டுள்ளது. … Read more

ஜெர்மனி சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியின் பெர்லின் நகருக்குச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் மூன்று நாள் சுற்றுப் பயணமாகச் சென்றுள்ளார். தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையத்துக்குச் சென்றடைந்தார். அங்கு அவருக்குத் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்புடன் சிவப்புக் … Read more

தரையிறங்கும்போது குலுங்கிய விமானம்- 13 பேர் காயம்

துர்காபூர்: நேற்று மாலை மும்பையில் இருந்து மேற்குவங்கம் துர்காப்பூர் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கும் நிலையில் இருந்தபோது திடீரென குலுங்கியது.  இதனால் ஏற்பட்ட பாதிப்பில் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து துர்காப்பூர் விமான நிலையத்தில் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விமானம் நடுவானில் இருந்தபோது மோசமான வானிலை காரணமாக காற்றில் ஏற்பட்ட மாற்றத்தால் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தின் கேபினில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் பொருட்கள் அவர்களின் தலையிலேயே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. … Read more

உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள சீன டயர்கள்

உக்ரைனில் ரஷ்யப் படைகள் விரைவாக முன்னேறுவதற்கு தடையாக சீனாவின் டயர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் கவச வாகனங்கள் உள்ளிட்ட போர் வாகனங்களில் தரம் வாய்ந்த டயர்களை பொருத்துவதற்கு பதிலாக சீனாவின் மலிவான டயர்களை ரஷ்ய ராணுவத்தின் ஊழல் அதிகாரிகள் வாங்கி பொருத்தியுள்ளனர். இதன் காரணமாக ரஷ்ய கவச வாகனங்கள் செல்லும் போது கடினமான நிலப்பரப்பு மற்றும் சேற்றில் சிக்கி கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்கள் வெய்யிலில் நிறுத்தும் போது டயர் கிழியவும் … Read more

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி

பெர்லின்: பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். இதற்காக நேற்றிரவு அவர் தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை ஜெர்மனி சென்றடைந்தார்.  ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்திக்கும் பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடஉள்ளார். மேலும், 6-வது இந்தியா-ஜெர்மன் அரசுகளுக்கிடையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பாதுகாப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து ஓலப் ஸ்கால்சுடன் … Read more

அமெரிக்காவின் சிகாகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் காயம்

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 42 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிசூடு வன்முறை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறியுள்ளன. இந்நிலையில் சிகாகோ நகரின் தெற்கு Kilpatrick பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 69 வயது முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல், Brighton Park, South Indiana, North Kedzie … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது வழக்கு பதிவு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அங்கு இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர்’, ‘துரோகி’ என கூறி கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த … Read more

சி.ஐ.ஏ., அதிகாரியானார் இந்திய வம்சாவளி!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நந்த் முல்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நகரமான சிலிகான் பள்ளத்தாக்கில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர் நந்த் முல்சந்தானி. இவர், அமெரிக்க ராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப துறையிலும் பணியாற்றி உள்ளார். டில்லியில், 1979 – 87 வரை பள்ளியில் படித்த நந்த் முல்சந்தானி, பின்னர் அமெரிக்கா சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் … Read more

அமெரிக்காவில் சுழன்றடித்த சூறாவளிக் காற்றால் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை உருக்குலைந்து சேதம்.!

அமெரிக்கா கான்சாஸ் மாகாணத்தில் சுழன்றடித்த சூறாவளிக் காற்று நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை உருக்குலைத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. ஆண்டோவர் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய சுறாவளிக் காற்றில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்தடையால் இருளில் மூழ்கினர். மேலும் சுறாவாளிக் காற்றில் வீடுகள் உருக்குலைந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர். சுழன்றடித்த காற்று குப்பைக் கூளங்களை சுழட்டி வாரி எடுத்துக் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி … Read more

பொது முடக்கம், கட்டுப்பாடுகளால் சீன மக்கள் அவதி

பீஜிங் : உலகுக்கு கொரோனாவை வாரி வழங்கிய சீனா, தற்போது அந்தத் தொற்றுப்பரவலால் தத்தளிக்கிறது. குறிப்பாக அந்த நாட்டின் பொருளாதார தலைநகர் ஷாங்காய் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்கு கொரோனா தொற்றால் 400 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் அங்கு புதிதாக 7,872 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தது நினைவுகூரத்தக்கது. ஷாங்காய்க்கு வெளியே சீனாவின் பிரதான பகுதிகளில் 384 பேருக்கு … Read more