லண்டன் தெருக்களில் இ-ஸ்கூட்டர் சாம்பியன்ஷிப் போட்டி.. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் சுவிஸ் வீரர் சாம்பியன்..!

லண்டன் தெருக்களில் முதல் முறையாக நடத்தப்பட்ட இ-ஸ்கூட்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பதக்கம் வென்றனர். 470 மீட்டர் தூர குறுகலான தெருக்களில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக சென்ற இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் அனீஷ் ஷெட்டி பதக்கப் பட்டியலில் இடம் பெற்றார்.  Source link

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். குயின்ஸ்லாந்தில் சென்ற சைமண்ட்சின் கார் சாலையை விட்டு விலகி சில அடி தூரத்திற்கு உருண்டு விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர். Townsville நகர் அருகே சைமண்ட்சின் கார் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரில் சைமண்ட்ஸ் மட்டும் இருந்ததால் விபத்து எப்படி நேர்ந்தது என ஆஸ்திரேலிய போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இறப்பிற்கு கிரிக்கெட் உலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   Source link

அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களுக்கு மேலாகிறது. ரஷியா போர் தொடுத்துள்ள பல்வேறு பகுதிகளில் உக்ரைன் ராணுவம் கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில் அந்தப் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்ற ரஷியா முயற்சிக்கிறது. கிழக்கில் வெற்றி பெற்றாலும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர முடியாது என அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களை உக்ரைன் அதிபர் … Read more

சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட மர்ம நபர்… 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியுயார்க் நகர சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர். Buffalo பகுதியில் உள்ள supermarket உள்ளே துப்பாக்கியுடன் நுழைந்த அந்த நபர் ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்த அப்பாவி மக்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினான். அவன் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த காவல்துறையினர் குற்றவாளி ராணுவ சீருடை அணிந்திருந்ததாகத் தெரிவித்தனர். Source link

புதிய திட்டத்திற்காக உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவிற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா சில வாரங்களுக்கு முன் மரியுபோல் நகரத்தை பிடித்ததாக அறிவித்தது. அதேபோன்று உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கீவ் நகரத்தின் மீது ரஷியா தொடர் தாக்குதல்களை நடத்தியது. ஏவுகணை தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் … Read more

பெஷாவார் தாக்குதலுக்கு காரணமான முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொலை – பாகிஸ்தான் ராணுவம்

57 பேரை பலி கொண்ட பெஷாவர் தாக்குதலின் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பெஷாவரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த மார்ச் 4-ந்தேதி தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 57 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பெஷாவர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹாசன் ஷா பதுங்கியிருந்த இடம் பற்றிய தகவல் கிடைத்ததன் பேரில் ராணுவ வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹாசன் ஷா … Read more

அணுகுண்டு தாக்குதல் எவ்வளவோ மேல்: இம்ரான் கான் வேதனை

மார்டன்: பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன் சாப் கட்சி சார்பில் மார்டன் நகரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும் கட்சி தலைவருமான இம்ரான் கான் பேசியதாவது: அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசியல் கட்சிகளின் சதியால் எனது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பல்வேறு ஊழல் விவகாரங்களில் சிக்கிய திருடர்கள் தற்போது நாட்டை ஆட்சி செய்கிறார்கள். திருடர்களிடம் நாட்டின் அதிகாரத்தை கொடுப்பதைவிட பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசுவது நல்லது. பிரிட்டனில் இருந்து சிலர் (நவாஸ் ஷெரீப்) பாகிஸ்தானின் விதியை … Read more

‘என் உயிரை பறிக்க சதி நடக்கிறது’ – இம்ரான் கான் பரபரப்பு தகவல்!

பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன. இதனிடையே, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதன்படி, நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ-இன் சாப் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் … Read more

உலகின் மிகப்பெரிய பாலம் செக் குடியரசில் திறப்பு| Dinamalar

பிராக் : செக் குடியரசில், உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலம், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான செக் குடியரசின் டோல்னி மோரோவா கிராமத்தில், ‘ரிசார்ட்’ எனப்படும், ஒரு சொகுசு விடுதி அமைந்துள்ளது. இங்கு, சுற்றுலா பயணியரை ஈர்க்கும் விதமாக, ஸ்லாம்னிக் மலையையும், கிலம் மலையையும் இணைக்கும் வகையில், பிரமாண்டமான தொங்கு நடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.’ஸ்கை பிரிட்ஜ் – 721′ என, பெயரிடப்பட்டுள்ள இந்த நடைபாலம், 65 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 312 அடி உயரத்தில், 2,365 … Read more

இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா உடனடியாக அனுப்புவதாக இந்தியா உறுதி

புதுடெல்லி: இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியாவை உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதற்கு, இலங்கை தூதர் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள 2.2 கோடி மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்கின்றனர். இலங்கை ஆண்டு தோறும், 40 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உரங்களை இறக்குமதி செய்து வந்தது. ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, கடந்தாண்டு ரசாயன உரங்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்தது. போதிய அளவில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்காததாலும், மோசமான வானிலையாலும், … Read more