இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

இலங்கையில், 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. இலங்கையின் இந்த நெருக்கடி நிலைமைக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் காரணம் என, எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்கள் … Read more

ரஷியாவிற்கு உதவ வேண்டாம்- சீனாவுக்கு ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

வெய்செனாஸ் (ஜெர்மனி): உக்ரைனில் நடக்கும் போர், ஏழை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டுவதாக ஜி7 கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் உக்ரைனை விட்டு தானியங்கள் வெளியேறுவதை ரஷியா தடுப்பதாகவும், இதை சரி செய்ய அவசர நடவடிக்கைகள் தேவை என்றும் ஜி7 அமைப்பு தெரிவித்துள்ளது.  மேலும், சர்வதேச தடைகளை குறைத்து மதிப்பிடுவது அல்லது உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உட்பட எந்த வகையிலும் ரஷியாவிற்கு உதவ வேண்டாம் என்று சீனாவை ஜி7 நாடுகள் … Read more

ரஷ்ய – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் ஆலோசனை: உக்ரைன் போர் தொடங்கியபின் முதன்முறையாக பேச்சு

ரஷ்யா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியபின்னர் முதன்முறையாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனாலும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்குவும், அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாய்ட் ஆஸ்டினும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி ஆக்கபூர்வ ஆலோசனை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆஸ்டின் … Read more

ஆண்களின் வழுக்கை தலையை கேலி செய்வது பாலியல் குற்றம் – தீர்ப்பாயம் அதிரடி!

ஆண்களின் வழுக்கை தலை குறித்து கேலி செய்வது பாலியல் குற்றம் என பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பிரிட்டனில், யார்க்ஷயர் நகரில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு எலக்ட்ரீஷியன் பணியில் இருந்து டோனி ஃபின் என்ற ஊழியர் நீக்கம் செய்யப்பட்டார். அந்த நிறுவனத்தில் அவர் 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், நிறுவன உயரதிகாரி தன்னை வழுக்கை என்று கேலி செய்ததாகவும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் … Read more

நைஜீரியாவில் பள்ளி மாணவியை கல்லால் அடித்து கொன்று உடலை எரிந்த சக மாணவர்கள்

அபுஜா : ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சோகோடோ மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் ‘வாட்ஸ்-அப்’ குழு ஒன்றை வைத்துள்ளனர். இந்த நிலையில் டெபோரா சாமுவேல் என்கிற மாணவி ஒருவர் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை அந்த ‘வாட்ஸ்-அப்’ குழுவில் பகிர்ந்தாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட அந்த மதத்தை சேர்ந்த மாணவர்கள் மாணவி டெபோரா சாமுவேலை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கினர். பள்ளிக்காவலர்கள் மற்றும் … Read more

யுஏஇ புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஐக்கிய அமீரக அதிபராக இருந்தவர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் (74). 2004 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக இருந்து வந்த இவர் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். இதனால் அங்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய அமீரக அதிபர் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக … Read more

இலங்கையில் 4 மந்திரிகள் பதவியேற்பு – பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் அதிபர்

கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்துவந்த இந்த போராட்டத்தில் கடந்த 9-ம் தேதி வன்முறை மூண்டதால் 9 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்தார். பேச்சுவார்த்தை … Read more

'நிலைமை இன்னும் மோசமாகும்': இலங்கை நெருக்கடி குறித்து ரணில் விக்கிரமசிங்க

இலங்கை நெருக்கடி: இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மேம்படுவதற்கு முன்னர், தற்போது இருக்கும் நிலையை விட இன்னும் மோசமாகும் என இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார். இலங்கையில் நீண்ட நாட்களாக இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இலங்கையில் வாழ்வது கடினம் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பொது மக்கள் பலருக்கு உணவைக் கைவிட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. … Read more