வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, முதன்முதலாக ஒருவருக்கு தொற்று இருப்பதை நேற்று உறுதி செய்தது. இந்த நிலையில், வடகொரியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், நேற்று மட்டும் சுமார் 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 6 … Read more

பீஜிங்கில் ஊரடங்கு பீதியால் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள்

சீனா தலைநகர் பீஜிங்கில் ஊரடங்கு பீதியால் சூப்பர் மார்க்கெட்டுகளில் திரண்ட மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். பீஜிங்கில் மீண்டும் பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால் மறுபடியும் ஊரடங்கு அறிவிக்கப்படும் என மக்கள் எண்ணத் தொடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர். வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் காலியாக காணப்படுகின்றன. அதேநேரம் ஊரடங்கு அறிவிப்புகள் வதந்தி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

வடகொரியாவில் காய்ச்சலுக்கு 6 பேர் பலி: தனிமைப்படுத்தப்பட்ட 1,87,000 பேர்

பியாங்யாங்: சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.  டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் பல நாடுகளில் கொரோனா … Read more

இந்தோனேஷியாவில் தண்ணீர் பூங்காவில் நீர் சறுக்கு உடைந்து விழுந்து விபத்து..16 பேர் படுகாயம்!

இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவாவில் உள்ள Kenjeran தண்ணீர் பூங்காவில் நீர் சறுக்கு உடைந்து விழுந்த கோர விபத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். நீர்ல் சறுக்கில் சறுகி விளையாட பயணிகள் காத்திருந்த நிலையில், திடீரென சறுக்கு உடைந்து 30 மீட்டர் தூரத்திற்கே கீழே பயணிகள் கீழே வீசப்பட்டனர். விபத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். 8 பேருக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்டது. பயணிகளின் பாரம் தாங்காமல் நீர் சறுக்கு உடைந்து இருக்கக் கூடும் என பூங்கா … Read more

இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே?

கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே வெடித்த மோதல் வன்முறையாக மாறியதில் இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் … Read more

அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்ய படைகள் துப்பாக்கிச் சூடு – 2 பேர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கீவில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்ய படைகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ள ரஷ்யப் படைகள் தொடர்ந்து பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் மாதம் கீவில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்ய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் கார் டீலர்ஷிப் அருகே உள்ள சாலையில் … Read more

ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை

மேட்ரிட் : ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தம், வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. மேலும், அங்கு சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளிகளில் தேவைப்படும் பெண்களுக்கு … Read more

உக்ரைனில் பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்குதல்… 3 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். செர்னிகிவ் நகரில் உள்ள இரண்டு பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த நிலையில் 12 பேர் மீட்கப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இதனிடையே, ரஷ்ய படைகளின் கடும் தாக்குதலில் செர்னிகிவ் நகரில் கட்டிடங்கள் உருக்குலைந்து கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. Source link

திடீரென மயக்கமடைந்த பைலட் – பயணி செய்த மகத்தான காரியம்

வாஷிங்டன்: வட அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு பஹாமா. அங்கிருந்து 2 பயணிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா நகருக்குச் சென்றது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானியின் பைலட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் அவர் மயக்கம் அடைந்தார். இதைப் பார்த்த பயணி ஒருவர் விமானி அறையில் இருந்து கட்டுப்பாட்டு அறையுடன் பேசி விபரம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசியவர் அந்தப் பயணிக்கு விமானத்தை இயக்கும் வழிமுறைகளைக் … Read more

விமானம் தீப்பிடித்து விபத்து சீனாவில் 40 பேர் காயம்| Dinamalar

பீஜிங்:சீனாவில் ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்ற விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இதில், 40 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கே உள்ள சோங்கியிங் நகரில் இருந்து, அந்நாட்டின் கட்டுப்பாட்டிலிருக்கும் திபெத்தில் உள்ள நியிங்க்சி நகருக்கு, சீன விமானம் ஒன்று நேற்று காலை புறப்பட்டது.ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானம், திடீரென அதிலிருந்து விலகிச் சென்றது. இதன் இன்ஜின் தரையில் பட்டதால், விமானத்தில் தீப்பற்றியது.உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து … Read more