ஆஸ்திரேலியாவில் பணியாளர்கள் பற்றாக்குறையால் தொழில்கள் முடக்கம்… ஆட்களை தேடி அலையும் முதலாளிகள்!

ஆஸ்திரேலியாவில் பணியாளர்கள் பற்றாக்குறையால் விவசாயம், ஒயின் தயாரிப்பு, கட்டுமான பணி உள்ளிட்ட பெரும்பாலான தொழில்கள் முடங்கின. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஊழியர்கள் தங்கள் நாடுகளுக்கே திரும்பச் சென்றது ஆஸ்திரேலிய தொழில் வளர்ச்சியை பின்னுக்கு கொண்டு சென்றது. கட்டுமான பணி, விவசாயம், ஒயின் தயாரிப்பு உள்ளிட்ட கடினமான பணிகளுக்கு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் ஆயிரத்து 300 ரூபாய்க்கு மேல் கூலி கொடுத்தும் ஆள் பற்றாக்குறை நிலவுவதாக உள்ளூர் தொழிலதிபர்கள் குமுறுகின்றனர்.   Source link

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 17-ந்தேதி விவாதம்

கொழும்பு : இலங்கை பொருளாதார நெருக்கடியை முன்வைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அத்துடன் பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்திருந்தது. இந்தநிலையில் நாடாளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்தனா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்குமாறு கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வருகிற 17-ந்தேதி நாடாளுமன்றத்தில் … Read more

லண்டனில் பாக்., பிரதமர் சகோதரரை சந்தித்து பேச்சு| Dinamalar

இஸ்லாமாபாத்:பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷரீப், லண்டன் சென்று தன் சகோதரரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார்.நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, நிர்வாக சிக்கல்களை குறிப்பிட்டு, ‘பாக்.,கில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்’ என, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் பாக்., பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷரீப், தன் அமைச்சரவை குழுவுடன் தனி விமானத்தில் பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றார். … Read more

Bomb Blast: பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி 13 பேர் காயம்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் குண்டு வெடிப்பு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் 13 பேர் காயமடைந்தனர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சதார் பகுதியில் வியாழன் இரவு (20022, மே 12) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் மோசமாக காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கான காரணத்தை  பாகிஸ்தான் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.  காயமடைந்தவர்கள், வெடிகுண்டு சாதனங்களில் காணப்படும் பால் பேரிங்குகளால்  பாதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பின்போது, அருகில் இருந்த பல … Read more

இந்தியா- இலங்கை உறவு வலுப்பெறும் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டம்

இலங்கையில் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடப் போவதாக அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொதுமக்கள் நடத்தி வந்த போராட்டம் கடந்த 9ந் தேதி உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.இதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கே நேற்று மாலை அந்நாட்டின் பிரதமராக அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். ரணில் தலைமையிலான புதிய அமைச்சரவை … Read more

கொரோனாவில் இருந்து மீண்டோருக்கு தொடரும் அறிகுறிகள்: ஆய்வில் தகவல்| Dinamalar

லண்டன்:கொரோனாவில் இருந்து குணமடைந்தோரில், பாதிக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்பும், அதற்கான அறிகுறிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.உலகம் முழுதும், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் ‘லான்செட்’ என்ற மருத்துவ இதழில், சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மேம்பட்டு, வேலைக்கும் செல்ல துவங்கிவிட்டனர்.எனினும், குணமடைந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு … Read more

இலங்கையின் அடுத்த பிரதமராக மீண்டும் ரனில் விக்ரமசிங்கே!| Dinamalar

கொழும்பு :இலங்கையின் புதிய இடைக்கால பிரதமராக, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்கே, 73, நேற்று பதவி ஏற்றார். பார்லிமென்டில் அவரது கட்சியின் ஒரே எம்.பி.,யாக அவர் மட்டுமே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 15 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது.இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் மீது, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் சமீபத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். … Read more

இலங்கை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு – மகிந்த ராஜபக்ச உட்பட 17 பேர் நாட்டைவிட்டு வெளியேற நீதிமன்றம் தடை

கொழும்பு: இலங்கையில் நிலவிவரும் நெருக்கடியான சூழலில் அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றார். இதைத் தொடர்ந்து 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. இதனிடையே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 17 பேர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்- ரஷியாவிற்கு ஐ.நா.சபை வலியுறுத்தல்

12.5.2022 04.10: ரஷிய அதிபர் புதினுடன் பேச தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டு தொலைக்காட்சிக்கு ஒன்று பேட்டி அளித்த அவர்,  ரஷிய ராணுவம் எங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று  நாங்கள் விரும்புகிறோம் என்றார். நாங்கள் ரஷியா மீது படையெடுக்கவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.   02.40: உக்ரைன் பள்ளிகள் மீது குண்டுகள் வீசிவது நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. ராணுவ நோக்கங்களுக்காக பள்ளிகளை பயன்படுத்துவது கண்டித்தது என்றும், … Read more

வட கொரியாவிலும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்| Dinamalar

சியோல்:வட கொரியாவில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கி உள்ளது முதல்முறையாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைஅடுத்து, நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.கடந்த 2020ல், கொரோனா தொற்று உலகம் முழுதும் பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து வட கொரிய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் மக்களை சுட்டு வீழ்த்தவும், அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்பட்டது.இத்தகயை கடும் நடவடிக்கைகள் பெரும் பலனளித்ததாகவும், … Read more