இலங்கைக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தல்!

அசாதாரண சூழல் நிலவுவதால் இலங்கைக்கு தேவையின்றி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் போராட்டம் நடக்கும் இடங்களுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, இலங்கைக்கு பயணம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறையும் தன் நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் சூழல் கவலையை எழுப்புவதாகவும், பாதுகாப்பு காரணமாக இலங்கைக்கு பயணம் செய்யும் முடிவை … Read more

பிரதமர் பதவியே ஏற்க சஜித் பிரேமதாச நிபந்தனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளதாக, எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதற்காக சில நிபந்தனைகளை விதித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: * மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதிபர் பதவி விலக வேண்டும். * அனைத்து அரசியல் கட்சிகள் ஆதரவுடன் … Read more

பிரதமராக பதவியேற்கத் தயார்: இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா

கடும் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், மக்கள் போராட்டம் வலுப்பெற்று, போராட்டத்தை ஒடுக்க அரசு எடுத்த அடக்குமுறையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், அதன் பிரதமராக இருந்த மகிந்தா ராஜபக்‌ஷேயின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. முன்னதாக பிரதமர் பதவியில் விலகிய ராஜபக்‌ஷே  தனது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் … Read more

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை?

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொருளாதார நெருக்கடியை கண்டித்து காலிமுகத்திடலில் அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்காக பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே, முன்னாள் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சங்கத்தினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு கோட்டை … Read more

வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா…நாடு முழுவதும் ஊரடங்கு

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. இதனைத் தொடர்ந்து தனது எல்லைகளை மூடிய வடகொரியா, தங்களது நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறி வந்தது.  உலக சுகாதார அமைப்பு, சீனா மற்றும் ரஷ்யாவினால் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளையும் வடகொரியா நிராகரித்தது. அந்நாட்டிலுள்ள சுமார் இரண்டரை கோடி மக்களும் தடுப்பூசி போடவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனாவை எதிர்கொண்டதற்காக நாட்டு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ … Read more

20 ஆண்டுகளுக்கு முன் சுரங்கத்தில் எடுக்கப்பட்ட வைரக்கல்… சுமார் ரூ.169 கோடிக்கு ஏலத்தில் விற்பனை!

தென் ஆப்ரிக்கா சுரங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தோண்டி எடுக்கப்பட்ட 228 கேரட் வெள்ளை வைரக்கல் ஒன்று 169 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏல சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய வெள்ளை வைரக்கல் ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. அதன் ஆரம்ப விலை சுமார் 109 கோடி ரூபாய் என நிர்ணையிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியில் 169 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதே ஏல நிகழ்ச்சியில் வரலாற்று சிறப்பு … Read more

இலங்கை பிரதமர் பதவியை ஏற்க தயார்- எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு

இலங்கையில் இடைக்கால அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவியை ஏற்று நடத்தத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், 4 நிபந்தனைகளுடன் ஆட்சதிப் பொறுப்பேற்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, குறுகிய காலத்திற்குள் பதவி விலக அதிபர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், … Read more

மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே மற்றும் 17 பேர் வெளிநாடு செல்ல இலங்கையின் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சே பதவி விலகக்கோரி கடந்த திங்கட்கிழமை அன்று அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மகிந்த ராஜபக்சே, நாமல் ராஜபக்சே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, காஞ்சன ஜெயரத்ன, ரோஹித … Read more

உக்ரைன் போரால் உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி வருகிறது: ஐ.நா. கவலை

உக்ரைன் போர் காரணமாக உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி வருவதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ் பேசும்போது, “உக்ரைனில் போர் பதற்றமிக்க பகுதிகளிலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. எதிர்காலத்திலும் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். உக்ரைனில் நடந்த போரின் காரணமாக நாம் எதிர்கொள்ளும் வியத்தகு உணவுப் பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தல்களினால் உலகின் பல்வேறு பகுதிகளில் பட்டினி அபாயங்கள் பரவலாகி வருகின்றன. இதுகுறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்” … Read more