ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்று தீப்பிடித்த விமானம்!..40 பேர் காயம்

சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கிலிருந்து திபெத்தின் நிங்சி நகருக்கு செல்லவிருந்த திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, புறப்படத் தயாராக இருந்தபோது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது. இதனைத் தொடர்ந்து, விமானத்தின் இறக்கைகளில் திடீரென தீப்பித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைந்து அணைத்தனர். விமானத்தில் 113 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக திபெத் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 40 பேர் லேசாக  காயமடைந்ததாகவும் அவர்கள் … Read more

புதிய பிரதமராகிறார் ரணில்? ஓரிரு நாளில் பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே, ஓரிரு நாட்களில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பரபரப்பான சூழலில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, விரைவில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என தெரிவித்திருந்தார். அத்தோடு, முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கேவை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், பிரதமர் பதவியை ஏற்றுக் … Read more

ஹிட்லரை விட ஆபத்தானவர் புதின்: போலந்து பிரதமர்

வார்சா : உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதின் பற்றி போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி ‘தி டெலகிராப்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர், “புதின், ஹிட்லரும் அல்ல, ஸ்டாலினும் அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிகவும் ஆபத்தானவர். உக்ரைனில் புச்சா, இர்பின், மரியுபோல் நகரங்களின் தெருக்கள் அப்பாவி மக்களின் ரத்தத்தால் ஓடின. இது ஸ்டாலின் மற்றும் ஹிட்லரின் சபிக்கப்பட்ட சித்தாந்தங்கள் திரும்புவதைக் குறிக்கிறது. 20-ம் நூற்றாண்டின் கம்யூனிசத்தையும், நாஜிசத்தையும் போன்று … Read more

அதிபரின் அதிகாரம் பறிப்பு… ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் – சரிவில் இருந்து மீளுமா இலங்கை?

பற்றி எரியும் இலங்கை: இலங்கையில் தொடர்ந்து நீடிக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வீரியமைடைந்து வருகிறது. நிலைமை கையை மீறி சென்றதால் கடந்த 9-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே விலகினார். இதனால் அதிருப்தியடைந்த மஹிந்த ஆதரவாளர்கள் அமைதி வழியில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்த அது அவர்கள் மீதே பூமராங்காக திரும்பியது. நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ஒன்றுகூடி ஆளும் கட்சியினர் மீது … Read more

இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக கோத்தபய மறுப்பு: பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகளால் முடியுமா?

கொழும்பு: இலங்கையில் புதிய பிரதமரை நியமிக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ள நிலையில் இதனை எதிர்க்கட்சிகள் கூட்டாக நிராகரித்துள்ளன. அதிபர் பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். ஆனால் கோத்தபய பதவி விலக மறுத்து வரும் நிலையிலல் அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு … Read more

சீனாவில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 113 பயணிகள் உயிர்தப்பினர்

சீனாவின் சாங்கிங்கில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத்திய ஏர்லைன்ஸ் விமானம் தீ விபத்துக்குள்ளானது. திபெத்தின் நியிங்ச்சி நோக்கி விமானம் புறப்பட்ட சமயத்தில் பைலட்டுகள் அசாதாரண சூழல் நிலவுவதை உணர்ந்து உடனடியாக அதை தரையிறக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த விமானம் ஓடுபாதையை விட்டு சற்று விலகிச்சென்று தீப்பிடித்து எரிந்தது. அவசர அவசரமாக விமானத்தில் இருந்த 122 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். லேசாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற மீட்புப்படையினர் விமானத்தில் பற்றி எரிந்த … Read more

பாகிஸ்தானில் முன்கூட்டியே பொதுத்தேர்தல்: ராணுவ மந்திரி சூசகம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கானின் அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. அதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். இந்தநிலையில் பாகிஸ்தானின் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடையவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே பொதுத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப்பிடம், தற்போதைய … Read more

உக்ரைன் ரஷ்ய சண்டையால் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன்

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பால் எண்ணற்ற பிரச்சனைகளும், உயிரிழப்பும் தொடர்ந்து வரும் நிலையில், மற்றொரு முக்கியமான செய்தி வெளியாகி கவலைகளை அதிகரித்துள்ளது.  ரஷ்யா போர் தொடங்கிய பின்னர், இதுவரை 50 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்ப்பு ILO (International Labour Organization) கூறுகிறது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் தூண்டப்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், நாட்டிலும் அண்டை நாடுகளிலும் தொழிலாளர் சந்தைகள் சீர்குலைந்து வருவது கவலையளிக்கிறது.  ரஷ்ய இராணுவம் இந்த போரை மேலும் தொடர்ந்தால் … Read more

விமானிக்கு உடல் நலக்குறைவு – திடீர் விமானியான பயணி

அமெரிக்காவில் சிறிய ரக விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், இதுவரை பறக்கும் அனுபவமே இல்லாத பயணி ஒருவர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். பஹாமாஸில் உள்ள மார்ஷ் துறைமுகத்தில் உள்ள லியோனார்ட் எம். தாம்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2 பயணிகளுடன் புறப்பட்ட செஸ்னா 208 கேரவன் விமானம் , புளோரிடாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு செயலற்று கிடந்துள்ளார். இதனையடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த … Read more